தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல் Jeffersonville, Indiana, USA 61-0723E 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்று எனக்காக ஜெபியுங்கள். சற்று குளிர்ச்சியாக்கத் தக்கதாக நாங்கள் சற்று குளித்தோம், அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாகவுள்ளோம், அதே விதமாக நமக்குள்ளாக, ஆவிக்குரிய பொழியுதல்களில் ஒன்று நமக்கிருந்து நமக்கு ஒரு சிறு உதவி செய்யுமென்று நான் நம்புகிறேன். நான் நம்புகிறேன் - சகோதரன் நெவில் அதற்காக நாங்கள் அதை உம்மிடம் நாங்கள் திருப்புவோமானால், அதைக் குறித்தென்ன? நான் பேசுவதா, நான் சிறிது... அந்த காற்றை சற்று என் பக்கமாக திருப்பவும். அப்பொழுது நான் இந்த... என்னுடைய தலை வழுக்கையாக இருப்பதால், வியர்வை உள்ளே சென்று என் தொண்டையில் நின்றுவிடுகிறது. இப்பொழுது, நான் சிலவற்றை தந்தேன். இன்றிரவிற்கான சில கேள்விகள், மற்றும் பதில்கள். இதை நாங்கள் செய்வதற்கான காரணம் என்னவென்றால் - ஜனங்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான். 2இவ்வாறு செய்வது ஒரு மேய்ப்பனுக்கு மிகவும் நல்லதான் ஒன்றாகும் என்று நான் எண்ணுகிறேன். ஜனங்கள் தங்கள் கேள்விகளை எழுதி வைப்பார்களானால் அப்பொழுது அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். நான் நினைப்பது என்னவென்றால் மேய்ப்பனால் இன்னுமாக, நம்முடைய எண்ணங்களையும், எதையாவது ஒன்றை நாம் காண்போமானால் அதையும் நம்முடைய மேய்ப்பர்களுக்கு மற்றும் ஆவிக்குரிய வழி நடத்துபவர்களுக்கு தெரிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும், அதனால் தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம், நம்மால் ஒவ்வொரு காரியத்தையும் இடறலின்றியும் மற்றும் அருமையாகவும் நடத்தவும், செய்யவும் முடியும். மேலும் அடுத்து நான்... அரைமணி நேரத்திற்கு முன்னர் என்னிடம் சுமார் இரண்டு அல்லது மூன்று... இக்காலை ஆராதனை முடிந்தவுடன் இந்த கேள்விகளை பில்லி என்னிடம் கொண்டு வந்தான். அப்பொழுது நான் உள்ளே சென்று வேதாகமத்தை ஆராய்ந்தேன், நான் குறிப்பிட்டிருந்ததாலும், இங்கே இருப்பதாலும் இன்றிரவு சிறிது பேசலாம் என்று எண்ணினேன், மேலும் சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் என்னை அழைத்து ''இதைப் பிடியுங்கள், இப்பொழுது என்னிடம் கை நிறைய உள்ளது'' என்றான். ஆகவே நான் சரியாக இவைகளை எடுத்து எனக்குத் அறிந்தவரை இவைகளுக்கு பதிலளிப்பேன். மேலும் குறித்த நேரத்தில் நான் பதிலளித்து முடித்துவிட்டால், ஒரு சிறிய பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன், ஒருக்கால் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் மட்டுமே பேச இருக்கும் ஒரு சிறிய பொருளை நான் வைத்திருக்கிறேன். 3மேலும், நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை தேவனுடைய கிருபையால், தானியேலின் எழுபது வாரங்களை என்னால் முடிந்த அளவிற்கு சிறந்த முறையில், விளக்குவேன். நான் இக்காலை கூறினவாறு அது ஒரு மகத்தான வேத வாக்கியமாகும். அதன் பேரில் பேசுவதற்கு அதிகம் இல்லை, ஆனால் அது எந்த இடத்தை சார்ந்திருக்கிறதோ அதில் அதை பொருத்த, வேதாகமம் முழுவதுமாக அதை பொருத்தி அமைப்பதாக இருக்கும். நாம் வெளிப்படுத்தல் 1-ல் ஆரம்பித்துள்ளோம், 6-வது அதிகாரத்திற்குள் நாம் வந்துள்ளோம். மேலும் அடுத்ததாக, இப்பொழுது நாம் ஏழு கடைசி முத்திரைகளுக்குச் செல்வோம். அந்த முத்திரைகள் 6-வது அதிகாரத்திலிருந்து, 6-வது அதிகாரத்தின் கடைசி பகுதியிலிருந்து, 19-வது அதிகாரம் உட்பட செல்கின்றது. ஆகவே அதை முடிக்க நீண்ட சமயம் தேவைப்படும். இப்பொழுது நான் அதற்காக, ஏழு இரவுகள் எடுத்து, ஏழு முத்திரைகளை பேசி முடிக்கக் கூடும். ஆனால் அவ்விதமாகச் செய்தால், அந்த மகத்தான பகுதியை இங்கே இந்த இடத்தில் இருக்கும் மக்கள் காண ஏதுவில்லாமல் போய்விடும். மேலும் அது ஆழமாக போதிக்கப்படாவிடில், அது சிறந்ததாக இருக்காது. ஆனால் அவைகளில் முதல் மூன்று அல்லது நான்கு வெறும் நிகழ்வுகள் தான், நாம் அதைப் பார்க்கலாம், ஒரு வரிசையாக அவை வருகின்றன; ஆனால் அதற்கடுத்ததாக, சரியாக மறுபடியுமாக தானியேலுக்குள்ளாக நாம் சென்று, திரும்பி ஆதியாகமத்திற்குள் சென்று, திரும்பி ஆதியாகமத்திற்குள் வந்து, வெளிப்படுத்தின விசேஷத்திற்குள் சென்று, திரும்பி சுவிசேஷங்களுக்குள் வந்து அதை அப்படியே அதற்குள்ளாக பின்னிபிணைக்க வேண்டியிருக்கும், ஏனெனில் அது இஸ்ரவேலின் அடிச்சுவடாகும், தேவன் இஸ்ரவேலுடன் ஈடுபடுதல். நாம் அந்த பகுதியோடு நிறுத்த வேண்டியதில்லை. நாம் நேரடியாக ஏழு முத்திரைகளுக்குள் சென்று தேவனுடைய வழிநடத்துதலை காணும் வரை நாம் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். தன்னுடைய கர்த்தரோடு மணவாளனும் மணவாட்டியுமாக 19-ஆம் அதிகாரம் வரும் வரைக்கும் சபையானது பூமியில் எடுக்கப்படும் அந்த சபைதான் கடைசியாக இருக்கின்ற சபை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலோடு ஈடுபடுதல் இருக்கும். ஆகவே இப்பொழுது தானியேலின் எழுபது வாரங்களை நாம் பார்க்கும் போது, அது வரவிருக்கின்ற முதலாம் முத்திரை திறக்கப்படுதலுக்கு ஒரு காட்சியை அமைத்து கவனத்துக்குரியதாக்குகிறது. 4பிறகு நான் நினைத்தேன், கர்த்தருக்கு சித்தமானால், நான்... அடுத்த ஞாயிறு நான் அதன் பேரில் பேசுவேன். ஞாயிறு காலை நான் அதை முடிக்க இயலாமல் போகுமென்றால், அப்பொழுது நான் மறுபடியுமாக ஞாயிறு இரவில் அதை முயற்சிப்பேன். அது நமக்கு வழியை திறந்து கொடுக்கும், கர்த்தர் நம்மை வழி நடத்துவாரானால், அப்போது அது வழியை உண்டு பண்ணும். அந்த பகுதியோடு நாம் நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை. அதிலிருந்து நாம் நேரடியாக ஏழு முத்திரைகளுக்குள்ளாக கடந்த செல்லலாம். கர்த்தர் வழி நடத்துமட்டுமாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம். இப்பொழுது, இன்றிரவு எங்களிடம் சில கேள்விகள் உள்ளன, அவையெல்லாம் அறிவுள்ள, அறிவிற்கு ஏற்புடைய கேள்விகளாக இருக்கின்றன. நான் முதலாவதாக ஒரு நிமிடம் பேச விரும்புகிற ஒன்று அதில் இருந்தது, அது யாரோ ஒருவர்... இது ஒரு கேள்வி அல்ல, யாரோ ஒருவர் என்னிடம் ஒரு காரியத்துக்காக பதில் கோருகிறார். என்னுடைய சாவிகள் எங்கே உள்ளது? தயவு கூர்ந்து எனக்கு கூறுங்கள். இன்று மதியம் அவர்கள் அதை தொலைத்துவிட்டனர். 5இப்பொழுது, நான் உங்களுக்கு கூறுகிறேன், சில வாரங்களுக்கு முன்னர், சில நாட்களுக்கு முன்னர் நான் இங்கே கூடாரத்தில் இருந்தேன்... நான் ஜெபத்தில் தரித்து, இந்த மக்களுடைய பொருட்கள் எங்கே உள்ளது என்பதை கண்டறியத் தக்கதாக நான் கர்த்தர் பேரில் காத்திருப்பது வழக்கம். மக்களுடைய கார்களைக் கூட நான் கண்டு பிடித்துள்ளேன். அந்த மக்கள் எங்கே அவைகளை விட்டுவிட்டனர் என்பதை கர்த்தர் என்னிடம் கூறுவார். சகோதரன் வெல்ச் ஈவான்ஸ் இங்கே வந்து தன்னுடைய காரை இழந்துவிட்டார், லூயிவில்லில் யாரோ ஒருவன் அதை திருடிச் சென்றுவிட்டான். அவரும் சகோதரன் பிரட் சாத்மன் மற்றும் சகோதரரில் சிலர்... சகோதரன் டாம் சிம்சன், என நம்புகிறேன் - அந்நாள் முழுவதுமாக இருந்தனர் அல்லது நீங்கள் அல்லவா, சகோதரன் டாம்? அவர்கள் வீட்டிற்கு வந்தனர், சகோதரன் ஈவான்ஸ் காரை இழந்து, துணிகள், மற்றும் காரில் அவர் வைத்திருந்த எல்லாவற்றையும் இழந்திருந்தார். அந்த காரை மில்லர் கடைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர், யாரோ ஒருவன் அதைத் திருடி கொண்டுபோனான். ஆம், இங்கே லூயிவில்லில் ஒரு கார் திருடும் கும்பல் உள்ளது, அவர்கள் இந்த கார்களைத் திருடி பெளலிங் கீரீன் அல்லது அதைப் போன்ற வேறொரு இடத்திற்கு அவைகளை ஓட்டிச் சென்று அவைகளுக்கு வேறு விதமான வர்ணம் தீட்டிவிடுவர். நீங்கள் கொண்டக்கியில் ஒரு காரை வைத்திருக்க அதற்கு எந்த ஒரு ஆவணமும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆகவே அவர்களால் அந்த கார்களை ஒரு சில நிமிடங்களுக்குள் மாற்றி அமைத்து அவர்கள் விரும்பும் வகையில் அவைகளை விற்றுவிடலாம். 6ஆகவே, சகோதரன் ஈவான்ஸ் தன்னுடைய சிறிய காரில் எல்லா பொருளையும் அதில் வைத்திருந்தார், கர்த்தர் எனக்கு அந்த காரைக் குறித்த பதிலைத் தந்தார். அவர்கள் வீட்டைச் சென்றடையும் முன்னர், அந்த கார் பாதி எரிபொருள் தீர்ந்த நிலையில் இங்கே நின்று கொண்டிருந்தது, அந்த காரைத் திருடியவர்கள் அதை பெளலிங் கீரீன் என்ற இடத்திற்கு ஓட்டிச் செல்கையில் கர்த்தர் அவர்களைத் திரும்பச் செய்தார், திருடர்கள் அதைத் திரும்பக் கொண்டு வந்து சரியாக அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர், காரில் இருந்த எல்லா பொருள்களும் அப்படியே இருந்தன, உபயோகிக்கப்பட்ட எரிபொருளைத் தவிர வேறு எதுவுமே திருடப்படவில்லை. அநேக முறை மக்கள் ஒரு குறிப்பிட்ட காரியங்களைக் கூறி என்னிடம் கேட்பார்கள், அப்பொழுது நான் கர்த்தரிடம் சென்று அந்த தரிசனங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன், அது வரும் வரையில் நான் காத்திருப்பேன் ஆனால் அப்படி நான் செய்வது மக்களுக்கு முன்பாக ஒரு பெரிய இடறலைக் கொண்டு வந்தது என்பதை நான் கண்டேன். உண்மையாகவே, அமெரிக்க மக்கள், சபைகள், இப்படிப்பட்ட ஒரு ஊழியத்திற்கு தயாராக இல்லை. அது சரி. அது அவர்களுடைய காலத்தை கடந்த ஒன்றாயிருக்கிறது. பாருங்கள்? ஆனால் அது எல்லா காரியங்களையும் பிறப்பிக்கிறது, உங்களில் சிலர் ''பிசாசு“ என்றும், சிலர் ஆவிகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் என்றும் அழைக்கிறீர்கள், உங்களில் சிலர் ”தேவனுடைய குமாரன்“ மற்றும் ”தேவன்“ என்றும் பலவித பெயர்களைக் கொண்டு அழைக்கிறீர்கள். பாருங்கள்? ஆகவே நான் அவ்வாறு செய்வதை விட்டு காத்திருந்து அந்த ஊழியத்தை ஆப்பிரிக்காவிலோ அல்லது தனிப்பட்ட சந்திப்புகளை இங்கே நான் வைக்கும் போது மாத்திரமே அந்த ஊழியத்தை செய்வேனென்று கர்த்தரிடம் வாக்குறுதி அளித்தேன். 7இப்பொழுது, நாங்கள் இங்கே தனிப்பட்ட சந்திப்புகளை, நேர்காணல்களை ஏற்பாடு செய்கிறோம், அதில் இப்படிப்பட்ட காரியங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆனால்... மேலும் இவ்விதமான காரியத்திற்காக சபையை அணுக வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எங்கள் செயலாளராக உள்ள என் மகன் பில்லி பாலை அணுகவும், அவன் உங்களுக்கு ஒரு சிறிய... ஒரு அனுமதி சீட்டை அளித்து அது எப்பொழுது இருக்கும், இன்னும், பிறவற்றை உங்களுக்கு கூறுவான். மேலும் அதைப் போன்ற ஒன்று தனிப்பட்ட நேர்காணல்களில் தான் செய்யப்பட வேண்டும், இங்கோ அல்லது ஊழியகளத்திலோ, அந்த காரியங்கள் இந்த வழியாகத்தான் கையாளப்பட வேண்டும். இவைகள் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு பலகையில் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பிரசங்க மேடையின் மீது வருவதென்பது... இப்பொழுது, சபையில் நாம் வரங்களை உடையவர்களாக இருக்கின்றோம். இங்கே தீர்க்கதரிசன வரத்தை கொண்டிருக்கின்ற சகோதரன் நெவில் நம்மிடம் உள்ளார். இங்கே அமர்ந்துள்ள சகோதரன் ஹிக்கின்பாத்தம், அந்நிய பாஷை பேசவும் வியாக்கியானம் அளிக்கும் வரத்தையும் கொண்டவர். நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால்... தேவன் உங்களுக்கு திறவு கோல்களை அளிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் நான் கூறுவது என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் ஒருக்கால் சகோதரன் நெவில் அல்லது சகோதரன் ஹிக்கின் பாத்தம், அல்லது சபையில் உள்ள இந்த வரங்கள் சிலவற்றின் மூலமாக இன்றிரவு பேசுவாரானால், ஒருக்கால் இவர்களால் அதைக் செய்யக்கூடும் என்று நான் அறிவுறுத்துகிறேன். இங்கே நாம் வைத்திருக்கின்ற சில கேள்விகள் பேரில் சில நிமிடங்களில்... 8ஆனால், என்னைப் பொறுத்தவரையில், இனிமேல் அமெரிக்க பொதுக் கூட்டங்களில் இதைச் செய்யமாட்டேன் என்று தேவனிடம் ஒரு வாக்குறுதியை நான் செய்திருக்கிறேன், பாருங்கள், ஏனென்றால் நான் ஊழியகளத்தை விட்டுச் செல்லும் படிக்கே அது செய்தது. அப்பொழுது சிலர் ஒரு “பிசாசு'' என்று சட்டென்று தீர்மானித்துவிடுவார்கள், மற்றவர்கள் ஒரு ''தேவன்” என்று அழைக்கத் துவங்கிவிடுவார்கள். மேலும் நீங்கள் பாருங்கள், இந்த விதமான ஊழியத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தமாக இல்லை. மேலும் தேவனால் அதை நடப்பிக்க இயலாமல் போகின்றது, இதைக் கேட்ட அந்த நபர் புரிந்து கொள்வார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இப்பொழுது, ஒருக்கால் இன்றிரவு பரிசுத்த ஆவியானவர். நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற உங்களுடைய சாவிகள் எங்கேயுள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு காண்பிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் அதைக் கண்டெடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், நீங்கள் அதை கண்டெடுத்து விடுவீர்களென்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? மேலும்... ஆனால் இப்பொழுது... ஆகவே அப்படியானால், இப்பொழுது, பில்லி பால், யாராவது இதைப் போன்ற ஒரு காரியத்தை வைத்திருந்து அவனை அணுகுவீர்களானால், அவன் அவைகளை சபைக்கு தெரியப்படுத்துவான், நான் வீட்டில் இருக்கும் போது சில அவசரமாக கவனிக்க வேண்டிய காரியங்களை பார்க்க முயற்சிப்பேன். 9இப்பொழுது, இக்கேள்விகளை நாம் அணுகுவதற்கு முன்பாக முதலாவதாக நான் கூற விரும்புவது எந்த ஒரு பதிலும் உங்களுடைய விசுவாசத்தின்படியாக அல்லது... வேதாகமத்தில் உள்ளதோடு இல்லாதிருந்தால், வார்த்தையின்படியாக அது இல்லாதிருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையே இல்லை. ஆகவே நான் இன்றிரவிற்கான பொருளை எடுத்து வேதப்பூர்வமாக இருக்கிறது என்று நான் நினைக்கின்றவைகளுக்கு பதிலளிப்பேன், ஆம், என்னால் முடிந்தவரைக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். ஆனால் கேள்விகளை சில நிமிடங்களுக்கு முன்னர் நான் பெற்றுக் கொண்டேன், மூன்று கேள்விகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அந்த மூன்றில் எதுவுமே... அவை சிறு காரியங்கள் மாத்திரமே இதைப் பாருங்கள் யாரோ ஒருவர் கண்ட சொப்பனம் அல்லது வேறொன்று, அதைப் பற்றி கூறலாமா அல்லது அதைப் போன்ற வேறொன்றைப் பற்றி என்பதை அறிய வேண்டுமென்றிருக்கிறார்கள். அவருடைய இரக்கத்தை நான் நெருங்குகையில் இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 10கர்த்தாவே, உம்முடைய நாமத்தில் அழைக்கப்பட்ட உம்முடைய மக்கள் நாங்கள். சொந்த அருமை பிள்ளைகளைப் போல எங்களை நேசித்து எங்களுக்காக அக்கறைக்கொண்டு எங்கள் மேல் கண்ணோக்கமாயிருக்கின்ற ஒரு பரமபிதாவை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறவர்களாக நாங்கள் இன்றிரவில் மகழ்ச்சி கொள்கிறோம். நான் இந்த ஜனங்களோடு எண்ணப்படுவதைக் குறித்தும், இவர்களுடைய சகோதரனாக இருப்பதைக் குறித்தும், கர்த்தாவே, நான் மகிழ்ச்சி கொள்கிறேன், இவர்களும் என்னுடைய சகோதரர்களும் சகோதரிகளுமாக இருக்கின்றனர். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கர்த்தாவே, தன்னுடைய சாவிகளை தொலைத்திருக்கும் ஒரு நபர் இங்கே உள்ளார். அந்த சாவிகள் சரியாக எங்கே இருக்கின்றது என்பதை நீர் அறிவீர். நீர் தாமே அதை வெளிப்படுத்தி, சரியாக அந்த சாவிகளுக்கு நேராக அவர்களைக் கொண்டு வரும்படியாக நான் ஜெபிக்கிறேன். அவர்களுக்கு அச்சாவிகள் விலையேறப் பெற்ற ஒன்றாகும், அது அவர்களுடைய கார் சாவி. ஆகவே பிதாவே, நீர் தாமே இந்த மக்களின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்குமாறு நான் ஜெபிக்கிறேன். எங்களுடைய மேய்ப்பரும் எங்கள் அருமை சகோதரனுமாகிய சகோதரன் நெவிலை நீர் தாமே ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். எய்த் அன்ட் பென் தெருவின் மூலையில் தொழுது கொண்டிருக்கின்ற கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாகிய எங்கள் சபையில் இந்த மகத்தான ஆவிக்குரிய வரங்களிலே எங்களிடையே நீர் கிரியை செய்து கொண்டிருப்பதை காண்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். அந்த ஜனக்கூட்டத்தில் நாங்களும் ஒரு அங்கத்தினராக எண்ணப்பட்டிருப்பதையும், தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அறிந்து கொள்ளும்போது நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். எங்கள் மேய்ப்பராகிய சகோதரன் நெவில், சகோதரன் ஹிக்கின் பாத்தம்ஸ், சகோதரன் ஃபங்க், மற்றும் சகோதரன் ஜூனியர் ஜாக்சன் மற்றும் அந்நிய பாஷையில் பேசி வியாக்கியானம் அளிக்கின்ற எங்கள் சகோதரிகளையும் நீர் தாமே ஆசீர்வதிக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். பிதாவே, நீர் தாமே இந்த மகத்தானவரங்களின் மூலமாக தொடர்ந்து உம்மை வெளிப்படுத்தி, அதில் எங்கள் சபையானது ஒரு ஆவிக்குரிய சபையாக அறியப்படுவதாக, சோர்வாக, பாரப்பட்டுள்ள மக்கள் உள்ளே வந்து சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமுகத்தில் உட்கார்ந்து, அவர் தாமே பேசி இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதை அறிந்து கொள்ள, நான் ஜெபிக்கிறேன். 11பிதாவே, இன்றிரவு நீர் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து எங்களை ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, இவைகளில் சில, சற்று மிருதுவானதாகவும் சில கேள்விகள் சற்று கடுமையானதாகவும் உள்ளன. கேள்வி கேட்ட அனைவருக்கும் இது ஒரு கடுமையான கேள்வியாக அமையும். இது அவர்கள் இருதயத்தில் இருக்கின்ற ஒன்றாகும், அது, சரி செய்யப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். பிதாவே, இக்கடமைகளைச் செய்வதற்கு நாங்கள் போதுமானவர்களல்ல, ஆனால் நீர் போதுமானதற்கு மேலானவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே நீர் தாமே இக்கேள்விகளை எங்களுக்கு வியாக்கியானித்து விளக்குமாறு ஜெபிக்கிறோம், அதனால் நாங்கள் மக்களுக்கு சரியான பதிலை அளிப்போமாக, அதனால் இவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு சபைதாமே உயர்த்தப்படுவதாக. தேவனுடைய நாமம் தாமே கனப்படுத்தப்படுவதாக. இப்பொழுது, பிதாவே, இது உம்முடைய சித்தமாக இருக்குமானால், இந்த வாரத்தில் நீர் தாமே எங்களோடு இருந்து இடைப்பட்டு, நான் தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் ஆராய்கையில் எனக்கு உதவும், அதனால் உம்முடைய சித்தமாக இருக்குமானால் அடுத்த ஞாயிறு காலை, அந்த மக்களுக்கு நான் வேத வசனத்தை திறக்க என்னால் இயலும்படிக்கும் செய்யும். அவர்களுடைய ஆத்துமாக்கள் தாமே புத்துணர்வு பெற்றுக் கொள்ளும்படிக்கு, தேவனே இதை அருள்வீராக. ஆழமான காரியங்களை நாடி தேடுகிறவர்களுக்கு, ஆண்டவரே, அவர்களுக்கு போதித்தருளும். இழக்கப்பட்டுப் போயிருப்பவர்களை இரட்சித்தருளும். வியாதிப்பட்டவர்களை சுகப்படுத்தும். பிதாவே, நாங்கள் எல்லாரும் உம்பேரில் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். 12இப்பொழுது, முதலாவது கேள்வியானது முற்றிலுமாக ஒரு கேள்வியைப் போன்று இல்லை, ஒரு சிறிய காரியம் சொல்லுங்கள், இதற்கு மிகவும் நெருக்கமாக நான் நிற்கிறேனா? அது மங்கலாக இருக்கிறதா? பின்னால் அமர்ந்துள்ளவர்களே, அது மங்கலாக இருந்தால் கையை உயர்த்துங்கள். கேள்வி: “சகோதரன் பில், பெரியவர்களும் சிறு பிள்ளைகளும் மிகவும் சத்தமிட்டுக் கொண்டு ஆராதனையின் போது அங்குமிங்குமாக சென்று கொண்டிருப்பதைக் குறித்து ஏதாவது கூறுங்கள். பயபக்தியைக் குறித்து இந்த கூடாரத்திற்கு சில பாடங்கள் அவசியமாயுள்ளன”. ஆமென்! பிள்ளைகளே, தேவனுடைய வீட்டில் எப்படி நீங்கள் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு தெரியாதா? இது தேவனுடைய பிரகாரமென்பது உங்களுக்கு தெரியாதா? தேவன் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கின்றார், எல்லாரும் அமைதியாக இருக்கக் கடவர்கள். இது தேவனுடைய இடமாயிருக்கிறது. இங்கு மக்கள் வருகின்றார்கள், தியானிக்கின்றார்கள், ஆத்தும் இரட்சிப்பை கண்டடைய முயற்சிக்கின்றார்கள்; மக்களுடைய வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றார்கள், யாராவது ஒருவருக்கு உதவ முயற்சிக்கின்றார்கள். உங்களால் செய்ய முடிகின்ற சிறிய அளவிலான காரியமானது பயபக்தியுடன் இருந்து, அமைதியாக அமர்ந்திருப்பதேயாகும். சபை ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் பருகிவிடுங்கள், சிறிய பிள்ளைகளுக்கு தண்ணீர் தேவைப்படும் என்பதை நானறிவேன். சிறிய பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்களே நீங்கள் அங்கே பின்புறத்தில் அமர்ந்து பிள்ளைகளை கூடிய அளவில் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே மெல்ல பேசுவது கூட இருக்கக் கூடாது, காதோடு காதான பேச்சும் கூட இருக்கக் கூடாது, நாமெல்லாரும் குற்றமுடையவர்களாயிருப்போம். வேதாகமம் வாசிக்கப்பட்டு அந்த ஊழியக்காரன் பிரசங்க பீடத்தை அடையும் போது நாம் அமைதியாக இருந்து கர்த்தர் பேரில் காத்திருக்க வேண்டும். இப்பொழுது தயவு கூர்ந்து அவ்விதமாக செய்ய முயலுங்கள். 13எனக்கு தெரியும் - சிறு பிள்ளைகளாகிய நீங்கள் சிறிது அங்குமிங்குமாக புரள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், புரிகின்றதா. அப்படிச் செய்வீர்களானால், சிறிது தொல்லைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியுமா, நீ அப்படிச் செய்யக்கூடாது என்று தான் தாயார் விரும்புகிறார்கள், அப்பாவும் நீ அப்படி செய்யக் கூடாது என்று தான் விரும்புகிறார்... ஆகவே நானும் கூட புரண்டு விளையாடுகின்ற சிறிய பிள்ளைகளை உடையவனாக இருக்கிறேன், ஜோசப், ஆகவே காரியங்களை அறிவேன். ஜோசப்பை அமைதியாக வைத்து பார்த்துக் கொள்வதால் ஆராதனையிலிருந்து எதுவும் எனக்கு கிடைப்பதில்லை என்று மேடா கூறினார்கள். நல்லது, யாராவது ஆராதனையிலிருந்து ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளத் தக்கதாக அவள் அவ்விதமாகச் செய்கின்றாள். பாருங்கள்? நாம் ஒருவருக்கொருவர் எப்பொழுதுமே மரியாதையும், கனத்தையும் கொடுக்கவே விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும் அவருடைய வீட்டையும் கனம் பண்ணுங்கள். 14இப்பொழுது, இந்த அடுத்த கேள்வி: கேள்வி: இன்று காலையில் ஆறு முதல் எட்டு வயது வரையிலான இரண்டு சிறு பிள்ளைகள் இங்கே பீடத்தண்டை இருந்தனர். அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படலாம்? எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. “உடனடியாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், ''அதுவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான். இப்பொழுது, இது கேள்வி எண் ஒன்று. அவ்விதமாகத் தான் செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன். நாம் வேத வசனங்களில் காண்பது... “அது வேத பூர்வமானதா?” என நீங்கள் கேட்கலாம். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கித்தபோது அந்த அதே வேளையில் மூவாயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். “கர்த்தர் மேல் எவர்கள் விசுவாசம் கொண்டார்களோ அவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர்'' நீ கர்த்தர் பேரில் விசுவாசம் கொண்டு அவரை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே நேராக தண்ணீரண்டை சென்று அங்கே உன் பாவங்களை அறிக்கைச் செய்து அங்கிருந்து ஆரம்பி; சிறியவர் அல்லது பெரியவர் எவராயிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் “ஆமாம், இந்த பிள்ளைகள் மிகச் சிறியவர்களாக உள்ளார்களே'' எனலாம். ''சிறு பிள்ளைகள் என்னிடம் வருவதற்கு இடம் கொடுங்கள். அவர்களை தடை செய்யாதீர்கள் பரலோக ராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது. என்ன வயதுடையவர்களாயிருந்தாலும் சரி, பீடத்தண்டை வர விரும்புகிற அல்லது ஞானஸ்நானம் பெற்று கொள்ள விரும்புகிற எந்த ஒரு பிள்ளை, குழந்தையின் (child) மேலும் நான் என் கையை வைக்க அஞ்சமாட்டேன், அவர்களுக்கு என்ன வயதாக இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. 15இப்பொழுது கேள்வி எண் இரண்டு: கேள்வி: எங்களுடைய நண்பராயுள்ள ஒரு போதகர் ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின்'' நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றார். அவருடைய தவறை நாங்கள் எடுத்துக் கூறாமலிருந்தால் நாங்கள் அதற்கு பதில் கூற வேண்டியவர்களாக இருப்போமா? நான் நம்புவதென்னவெனில் ஒரு கிறிஸ்தவன், ஒரு கடமையாக, அவர் உங்களுடைய தனிப்பட்ட நண்பராக இருந்தால்... அவருடன் ஒரு வாதத்தை ஆரம்பிக்க வேண்டாம்; அவ்விதமாக நீங்கள் செய்தால், நீங்கள் சரியாக இல்லையென்று அர்த்தம், உங்கள் - உங்கள் ஆவி சரியானது இல்லை. ஆனால் நீங்கள் அந்த சகோதரனை நேசித்தால், நீங்கள் நேசித்தாக வேண்டும், ஏனெனில் நீங்கள், “ஒரு நண்பராகிய போதகர்'' என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் இந்தக் குறிப்புகளில் எந்த ஒரு பெயரும் கையொப்பமிடப்படவில்லை, இந்த கேள்விகள் எங்கிருந்து வருகிறதென்றும், யார் எழுதினது என்றும் எனக்குத் தெரியாது. 16இப்பொழுது, நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், அது யாராக இருந்தாலும் சரி, இந்த போதகராகிய நண்பர் இந்த விதமாக ஞானஸ்நானம் கொடுப்பாரானால் நீங்களும் அவருடைய வீட்டிற்கு சென்று வருவதுமாக இருந்தால், நான் - நான் என்றாவது ஒரு சமயத்தில் இந்த கேள்வியை சற்று குறிப்பிடுவேன். அது உங்களுக்கு... அதைக் குறித்த வரையிலும் சற்று பேசுங்கள், அந்த பொருளைச் சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருங்கள்; கர்த்தர் அதைத் திறந்து ஆவன செய்யட்டும்; அப்படியானால் அப்பொழுது நீங்கள் அதைப் பேச வேண்டுமென்று உங்களிடம் கர்த்தர் கூறுகின்றார். பாருங்கள்? கர்த்தர் கேள்வியை திறக்கும் வரைக்கும் காத்திருங்கள். அதன் பிறகு அவரிடம் கூறுங்கள். நீங்கள், ''சகோதரனே, மத்தேயு 28:19 மற்றும் அப்போஸ்தலர் 2:38 மற்றும் இன்னும் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கிறதா என்று நான் வியப்புறுகிறேன்? இங்கே “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்றும் கூறுகிறது. மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று கூறுகின்றது, இது ஏன் என்று உங்களால் விவரிக்க முடியுமா?'' என்று கேளுங்கள். இப்பொழுது - இப்பொழுது, முயற்சிக்காதீர்கள்... நீங்கள் உண்மையாகவே மாணவன் இல்லையென்றால் மற்றும் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அறியாதவர்களாக இருப்பீர்களானால், அதைக் கூறாமல் அப்படியே இருந்து விடுவது நலம். பாருங்கள்? “நல்லது, நீங்கள் வருவீர்களானால்...'' என்று அவரிடம் கூறலாம், தெரிந்து கொள்ள வேண்டுமென்று உண்மையான மனமுடையவராக அவர் இருப்பாரென்றால் நீங்கள், ''நீங்கள் எங்கள் மேய்ப்பரை அல்லது யாராவது ஒருவரை சந்தித்து அதைக் குறித்து விவாதிக்கலாமே?'' என்று கூறலாம். 17இது ஒரு ஆழமான காரியமாகும். பாருங்கள்? அதை நீங்களாகவே எடுத்துப் பேச முயற்சிக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் உங்களையே குழப்பிக் கொள்வீர்கள். நீங்கள்... நீங்கள் பேசுவது என்னவென்பதை அறிந்திருந்து, எந்தவித சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக இருந்து, வேத வசனங்களை அறிந்திருப்பீர்களானால் பரவாயில்லை, ஆனால் அவரை புண்படுத்தாதீர்கள், நீங்கள் என்ன செய்தாலும் சரி, அவர் மனது புண்படும்படி செய்யாதீர்கள். பாருங்கள்? இடறல் உண்டாக்காதீர்கள், அவரிடம் கூறுங்கள்... ஆம், நிச்சயமாக அவர் தவறில் தான் இருக்கிறார். அது உண்மை. அந்த மனிதன் அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுக்கின்றார் என்றால் அவர் தவறில் தான் உள்ளார். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் எந்த ஒரு மனிதனும் வேதபூர்வமாக தவறில் இருக்கிறான். அது சரியே. 18கேள்வி எண் மூன்று: கேள்வி: விசுவாச அறிக்கையில் அவர்கள், ''மூன்று நபர்களில் இருக்கின்ற, நித்தியமானவராகிய, ஒரே தேவனில் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம். மத்தேயு 28:19, 18 மற்றும் 19; ஒன்று... கொரிந்தியர் 13:14 “இது மூன்று நபர்களுக்கு பதிலாக மூன்று அலுவல்களாக இருக்க வேண்டுமல்லவா?'' நீங்கள் சரியாக உள்ளீர்கள். தேவத்துவத்தில் மூன்று நபர்கள் கிடையாது. ஒரு நபராயில்லாமல் ஒரு தனி மனித பண்பு இருக்க முடியாது, ஒரு நபர் தான் அவ்வாறு தனிப்பட்ட பண்பைக் கொண்டிருக்க முடியும். மூன்று தேவர்கள் என்பது கிடையாது. ஒரேயொரு தேவன் தான் இருக்கின்றார், அந்த தேவன் இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்யும் தேவனுடைய ஆவியே தேவன், அவர் தம்முடைய சபையில் (நீங்களும் நானும்) இன்றைக்கு வாசம் செய்து, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய உனக்குள் வாசம் செய்கின்ற அவர் தாமே, நமக்கு தம்மையே பரிசுத்த ஆவியின் வடிவில் பிரித்து வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் சரியாக இருக்கிறீர்கள், ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவி'', என்பது அதே தேவனுடைய மூன்று அலுவல்களாகும். ஆனால், மூன்று தேவர்கள் அல்ல, அது வேதபூர்வமாக தவறானதாகும். 19கேள்வி: ஒரு கிறிஸ்தவனோ அல்லது ஒருவளோ தசமபாகம் செலுத்தாமலிருந்தால் பரலோகத்திற்கு செல்ல முடியுமா? இப்பொழுது, வேதப்பூர்வமாக என்னால் பதில் கூற முடியாதது இது ஒன்றிற்குதான். இப்பொழுது, இந்த, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”, அந்த ஊழியக்காரன் உத்தமமானவராக இருக்கிறாரென்றால், பாருங்கள், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் மகிழ்ச்சியுடன்... சகோதரன் நெவில் மற்றும் நானும், அல்லது சகோதரன் பீலர் அல்லது சகோதரன் காலின்ஸ் அல்லது இந்த ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கின்ற இங்கேயுள்ள ஊழியக்காரர்களில் சிலர், இன்னும் மற்றவர் அவரை சந்திக்கலாம். இப்பொழுது, ஆனால் இப்பொழுது: தசமபாகம் செலுத்தாமல் இருப்பதால் ஒரு கிறிஸ்தவனால் பரலோகம் செல்ல இயலாதா? என்னால் அதற்கு “ஆம்” என்றோ அல்லது “இல்லை” என்றோ கூற முடியவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது என்னவென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான். ஏனெனில் அது தேவனுடைய கட்டளையாகும், கற்பனையாகும், “ஜீவ விருட்சத்தின் மேல், ஜீவனுக்கு அதிகாரமுள்ளவர்களாவதற்கும் அவருடைய கற்பனைகளின்படியெல்லாம் செய்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்''. இப்பொழுது தசமபாகம் செலுத்துதல் என்பது ஒரு கிறிஸ்தவ அனுபவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று என நான் விசுவாசிக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் வேறொரு கேள்வியின் போது நான் இதை அணுகுவேன், இதைக் குறித்து மாதிரியான வேறொரு கேள்வி உள்ளதென்று நானறிவேன். 20கேள்வி: “சகோதரன் பிரன்ஹாம், நான் இரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளேன், ஆனால் தகர்த்தெறிந்து வெளியே வரவேண்டும் என்று நான் முயற்சி செய்கின்ற, ஆனால் முடியாதிருக்கின்ற, எதற்கும் இணங்காத ஒரு ஆவியிலிருந்து எப்படி என்னால் வெளிவர முடியும்? நல்லது, என் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி, யாராயிருந்தாலும் பரவாயில்லை, இப்பொழுது , இணங்காத, ஆவிகளைக் கொண்டிருக்கின்ற மக்களை நீங்கள் காண்பீர்களானால், வழக்கமாக ஒரு சிக்கலான மனநிலைதான் அதைப் பிறப்பிக்கின்றது, அல்லது அதை அவர்கள் தங்கள் தாய், தந்தை, தாய் மற்றும் தகப்பனுக்கு சகோதரனோ, சகோதரியோ, அல்லது பாட்டி, பாட்டனார், ஆகியோரிடமிருந்து மரபு வழியாக இவர்களை வந்தடைந்து விடுகின்றது. மேலும் உங்கள் வாழ்க்கையில் பாதைகளை பின் நோக்கி பார்ப்பீர்களானால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இப்பொழுது நான் இதை அனுபவத்தின் மூலமாக பகுத்தறிதலோடு, எடுத்துக் கொண்டேன், ஏனெனில் அந்த ஆவியைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோரை மேடையின் மீது நான் சந்தித்திருக்கிறேன். மேலும் முதலாவதாக என்ன தெரியுமா, இருதயத்தை பகுத்தறிதலின் மூலமாக அந்த ஆவியை நான் கண்டுபிடிப்பேன், பாட்டியிடமிருந்து அல்லது அவர்களுக்கு முன்பு இருந்த யாரோ ஒருவரிடமிருந்து வந்திருக்கும், நீங்கள் அதை மரபு வழியாக சுபாவமாக பெற்றுக் கொள்வீர்கள். 21இணங்காமல் பிடிவாதமாயிருப்பது தேவனால் உண்டானதல்ல. இப்பொழுது, அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி நீங்கள் ஒரு கிறிஸ்தவராக கடந்து வருவதற்குரிய விசுவாசம் உடையவர்களாக இருப்பது. ஏனெனில், நீங்கள் தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்கின்றீர்கள், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்களால் அதை கடிந்துகொள்ள, முடியவே முடியாது. அது அலைக்கழிக்கின்ற, வாலில்லாத கடகடவென்ற ஒலியெழுப்பும் அமெரிக்க நச்சுப்பாம்பைப் போன்ற ஒன்றாகும், அவன் உங்களை கடிப்பதற்காக தயாராக அங்கே படுத்துக்கிடக்கின்றான். நீங்கள் மாத்திரம் அவனை பொருட்படுத்தாமல் அவனை விட்டுக் கடந்து செல்வீர்களானால், அவனால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. பாருங்கள்? ஆகவே நீங்கள் அந்த பிடிவாத இணங்காத ஆவியை கொண்டிருப்பதாக உணர்ந்தால், அதை பீடத்தின் மீது வைத்து, அந்த காரியமானது செத்துவிட்டது என்று தேவனில் விசுவாசியுங்கள். அதன் பிறகு இனியும் அதை நீங்கள் கொண்டிருக்கவே மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள், அதற்கு எந்தவித கவனத்தையும் செலுத்தாதீர்கள். அந்த ஆவியானது உங்களை விட்டு ஓடிப்போகும், பிசாசை எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் அது என்னவென்றால், “சீக்கிரமாக அகன்று சென்றுவிடு'' என்பதே. ஆகவே அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான என்னுடைய ஆலோசனை இவ்விதமாகத் தான் இருக்கும். நாம் பிசாசை விசுவாசத்தில் மேற்கொள்ளுகிறோம். எல்லா தீமையையும் நாம் மேற்கொள்வது எதிலென்றால் விசுவாசத்திலேதான். 22கேள்வி: ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக ஏன் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்கள்? நல்லது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற நாமமென்பது கிடையாது. அதுதான் காரணம். எந்த ஒரு நபருக்கும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்” நாமத்தில் வேதாகமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படவேயில்லை. வேதாகமத்தில் எல்லா நபரும் அல்லது வேதத்திற்கு பிறகு முந்நூறு ஆண்டுகளாக ஒவ்வொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. கடைசி அப்போஸ்தலன் மரித்து முந்நூற்று ஆறு வருடங்களுக்கு கழிந்து நிசாயா ஆலோசனை சங்கத்தில் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும், எந்த ஒரு அப்போஸ்தலனுக்கோ, எந்த ஒரு கிறிஸ்தவனுக்கோ, அல்லது எப்பொழுதாவது ஒரு முறை கூட “பிதா, குமாரன். பரிசுத்த ஆவி” என்பது ஞானஸ்நானத்திற்காக உபயோகப்படவேயில்லை. ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்கின்ற ஒரு நாமம் இல்லவேயில்லை. பிதா என்பது ஒரு நாமம் அல்ல, குமாரன் என்பது ஒரு நாமம் அல்ல, பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமம் அல்ல. அது மூன்று பட்டப் பெயர்கள், ஒரு நாமத்திற்கான மூன்று அலுவல் குறிக்கும் பட்டப்பெயர்கள்: ஒரு நாமத்திற்கு. இயேசு கிறிஸ்து. ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்கின்ற ஒரு நாமமானது கிடையவே கிடையாது. மேலும்... அதற்கு ஒரு நாமமும் கிடையாது, ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமாயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் நான் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். தெளிவாக புரிகின்றதா? 23கேள்வி: ''உயிர்த்தெழுதலுக்கு முன்னர் கிறிஸ்து பாதாளத்தில் இருந்தார்'' என்று சிலர் கூறுகின்றனர். இதற்கான வேத வசனம் ஏதாகிலும் உள்ளதா? இப்பொழுது, வேத வசனங்களிலிருந்து உங்களுக்கு பதிலளிக்க நான் விரும்புகின்ற. ஒரு வேதபூர்வமான கேள்வி இங்கே இருக்கின்றது, ஏனெனில் அவர்கள், ''இது வேத வசனங்களில்இருக்கின்றதா?'' என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்க விரும்பினவர்களே, நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலோ அல்லது இல்லையோ, நீங்கள் என்னுடன் 1பேதுரு 3:18 மற்றும் 20ற்கு திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதினாலே நீங்கள் வேறு யாராவது ஒருவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் இதை வாசித்துப் பார்த்து இது உண்மையா அல்லது அப்படி இல்லையா என்று கண்டறிந்து கொள்ளுங்கள். வேதம் என்ன கூறுகின்றதோ மற்றும் சத்தியத்தோடு மாத்திரமே எப்பொழுதும் நிற்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் இந்த அருமையான நபர் யாராயிருந்தாலும் இது அப்படித்தானா அல்லது இல்லையா என்று வேதாகமத்திலிருந்து ஒரு மேற்கோளை அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். 24இப்பொழுது நாம் இங்கே இதை கண்டுபிடிப்போம்... நான் அதை கண்டுபிடித்தால்... நான் அநேக வருடங்களாக வைத்திருக்கின்ற இந்த பழைய வேதாகமம் ஏறக்குறைய கிழிந்து போகும் நிலையில் உள்ளது. இதில் அதை நான் கண்டுபிடிப்பேனென்றால், நான் நினைக்கின்றேன், ஒருக்கால் சகோதரனே, ஒரு வினாடி பொறுத்துக் கொள்ளுங்கள், அது தான் என்று உறுதியாக நான் கண்டால் அது தீமோத்தேயு, தீத்து, மற்றும் எபிரெயருக்கு அடுத்ததாக வருகிறதா என்று பார்ப்போம். இதோ எடுத்துவிட்டேன், ஆம், நான் எடுத்துவிட்டேன். உமக்கு நன்றி. 1பேதுரு 3, 1பேதுருவின் 3-ம் அதிகாரம். 3-வது அதிகாரம், 18-ம் வசனத்திலிருந்து நாம் துவங்குவோம். ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்) அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது, கீழ்ப்படியாமற் போனவைகள், அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 25இப்பொழுது அப்போஸ்தலர் 2ற்கு திருப்புங்கள், அப்போஸ்தலர் 2, நாம் 30-வது வசனத்தை எடுப்போம். அப்போஸ்தலர் 2ல், அப்போஸ்தலனாகிய பேதுரு தான் இதைப் பேசுகிறான். அப்போஸ்தலர் 2-வது அதிகாரம் வசனம்- 30, அதை இங்கே எழுதியுள்ளேன். ஆகவே அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததினால் மாம்சத்தின்படி அவனுடைய அறைகட்சையிலிருந்து அவர் கிறிஸ்துவை எழுப்பி அவருடைய சிங்காசனத்தின் மேல் அமரப் பண்ணுவார் என்று கர்த்தர் அவனோடு பண்ணின உடன்படிக்கையின் மேல் ஆணையிட்டார் என்பதை அறிந்திருந்தான். அவன் தீர்க்கதரிசியாயிருந்து, உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம் பண்ணினதை அறிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான். (கிறிஸ்துவின் சரீரம்) அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்கினது, நோவாவின் நாட்களிலே நீடிய துன்பத்தில் மனந்திரும்பாத அந்த ஆவிகளுக்கு அந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள்ளாக இறங்கிச் சென்றது, அவர் அங்கே ஆவிகளுக்கு பிரசங்கம் செய்து பிறகு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். அது வேதப் பூர்வமானதாகும், சத்தியமாகும். 26கேள்வி: இப்பொழுது கன்னிகைகளில் ஐந்து பேர் இழந்து போகப்பட்டார்கள்? ''ஐந்து கன்னிகைகள்'' அந்த ஐந்து புத்தியுள்ள மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்த கேள்வியை அவர்கள் கேட்கிறார்களென்று நான் யூகிக்கின்றேன். வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த எங்களுடைய போதனைகளின் போது எங்களுடன் நீங்கள் பங்கெடுத்து கேட்டிருப்பீர்களென்றால், அந்த கன்னிகைகள் - அந்த புத்தியில்லாத கன்னிகைகள் இழக்கப்பட்டுப் போகவில்லை என்றும், ஆனால் கலியாண விருந்திற்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் உபத்திரவத்தில் உபாதிக்கப்பட்டு இரத்த சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, கடைசி நாளிலே பொதுவான உயிர்த்தெழுதலிலே மறுபடியுமாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளாக அவரால் பிரிக்கப்பட்ட மக்கள் இவர்களே, பாருங்கள், இவர்கள் நியாயத் தீர்ப்பில் நிற்கின்றனர். நீங்கள், ''சரி, சகோதரன் பிரன்ஹாமே, சபையாகிய நாமும் கூட நியாயத்தீர்ப்பில் நிற்போமல்லவா'' எனலாம். இல்லை, ஐயா! நாம் நியாயத் தீர்ப்பில் நிற்க மாட்டோம். நாம் இப்பொழுது நியாயத் தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறோம், நம்முடைய பாவங்களை தேவன் கிறிஸ்துவின் மேல் போட்டுள்ளார், மேலும் நாம்... “என் வசனத்தைக் கேட்டு” பரி. யோவான் 5: 24 “என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். சபைக்கு இனி மேலும் நியாயத்தீர்ப்பு கிடையாது. அது எடுத்துக் கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றிராத மக்களை நியாயத்தீர்க்கத்தக்கதாக திரும்பவுமாக வருகின்றது. ஒரு - ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு, ஒரு அநீதக்காரனான நீதிபதியிடம் நம்மில் யாராகிலும் கொண்டு போகத் துணிகிறதென்ன, ”பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்பார்களென்று அறிவீர்களா?'' என்று பவுல் கேட்கவில்லையா. நாம் கிறிஸ்துவுடனே அமர்ந்து, ராஜாக்களையும், ஆசாரியர்களையும் நியாயந்தீர்ப்போம். நாம் பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து அவர்களிடம் கூறின போது, அதைப் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த மக்களை நியாயந்தீர்ப்போம். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! இல்லை, அவர்கள் இழந்து போகப்படவில்லை, ஆனால் அவர்கள் மணவாட்டியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவார்கள், ஆனால் மணவாட்டியாக இருக்க மாட்டார்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட சுவிசேஷ ஒளியை அவர்கள் கையாண்ட விதத்தின்படியாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். இப்பொழுது, இந்தப் படலமானது கிறிஸ்து என்ன செய்கின்றாரோ அதைப் பொறுத்துதான். இருப்பினும், அவர்கள் இழந்து போகப்படவில்லை. 27கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், 1 கொரிந்தியர் - கொரிந்தியர் 14-வது அதிகாரம், வசனம் 34 மற்றும் 35, “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை'' என்று கூறுகிறது. 35-ல், ''ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே” என்று உள்ளது. இப்பொழுது, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரைக் கொண்ட ஒரு ஸ்திரீ சபைகளில் சபையில் அந்நியபாஷையில் பேசினால், அவள் மூலமாக பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது அது ஒரு கள்ள ஆவியா? இப்பொழுது, நீங்கள்... இதுமிகக் கடுமையான ஒரு கேள்வியாகும், ஆகவே எனக்கு நன்கு தெரிந்த விதமாகத்தான் நான் பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன், புரிகின்றதா. இப்பொழுது, என்னால் நியாயந்தீர்க்க முடியாது, ஏனெனில் நியாயந்தீர்க்க நான் அனுப்பப்படவில்லை. ஆனால் அநேக முறை நான் நினைப்பதுண்டு. சரியாக இதனுடன் பொருந்துகின்ற ஒரு கேள்வியை நான் வைத்துள்ளேன். அந்நிய பாஷையில் பேசுகின்ற ஒரு மனிதன், அவர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? அவர்கள் ஒருக்கால் ஒழுங்கிற்குப் புறம்பாக இருக்கலாம், அவர்கள் ஒருக்கால் சரியானதாக இல்லாதிருக்கின்ற ஒன்றை செய்கிறவர்களாக இருக்கலாம், ஆனால் அது பரிசுத்த ஆவி அல்ல என்று கூற நான் விரும்பவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாமலும் இருக்கலாம். பாருங்கள்? மேலும் அநேக சமயங்களில்... மக்கள் ஒருவரையொருவர் தவறாய் மதிப்பிட்டு தவறாய்த் தீர்மானிக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறான, கெட்ட காரியமாகும். நீங்கள், ''உம், அவள் கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை கொண்டவளாக இருக்கிறாள், அவள் மிகவும் சிறியதாக, குட்டையாக உள்ள ஒரு ஆடையை அணிந்திருக்கிறாள், ஆகவே அவள் மீது இருப்பது பரிசுத்த ஆவி அல்ல'' எனலாம். அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள் அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள், அது சரியல்ல. அந்தப் பெண்ணின் இருதயத்தில் என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாதே. அதைக் குறித்து ஒன்றுமே உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் அவளுடைய நடத்தையை சிறிது சீர்படுத்துவார் என்பதை நீங்கள் அறிவீர்களா, இப்பொழுது, அது உண்மையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன், நானும் நீங்களுமாக, அதை நியாயந்தீர்க்கும் காரியத்தை தேவனிடம் விட்டுவிடுவோமாக, தேவன் அந்த நபருக்கு ஒளியைக் காண்பிக்கத் தக்கதாக நீங்களும் நானுமாக அந்த நபருக்காக ஜெபத்தை ஏறெடுப்போம். 28ஒரு சமயம் இங்கே ஒரு மனிதன் என்னை வெளியில் தனியே சந்தித்தார். இங்கே ஒரு பியானோ கருவி வாசிக்கும் ஒரு பெண் இருந்தாள். அவள் ஒரு சிறிய குட்டை பாவாடையை அணிந்திருந்தாள், அது சரியான விதத்தில் இல்லாதிருந்ததை நான் அறிந்திருந்தேன். மேலும் அந்த பெண் குட்டை தலைமயிரைக் கொண்டவளாக இருந்தாள், இந்த வழியில் அவள் சற்று குழந்தையாக இருந்தாள், இங்கு மேலும் அவள் பியானோ கருவியை வாசித்துக் கொண்டிருந்தாள். என்னை அங்கே வெளியில் சந்தித்த இந்த மனிதன் என்னை கடுமையான சீற்றத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ''அதோ பார் கத்தரிக்கப்பட்ட குட்டைமயிர் அந்த பெண்னை அங்கே மேலே உட்கார வைத்திருக்கிறீரே, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியா!'' என்று அதிவேகமாக இன்னமாக திட்டிக் கொண்டிருந்தார். நான், ''சரி, அந்த பெண் தனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணுகிறேன். அந்த பாவாடையின் இந்த பாகம், இரண்டு துண்டுகள், அந்த விதமான ஆடை அணிவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்'' என்றேன். (அவைகளில் ஒன்று இங்கே கீழே காணப்படுகிறது, மற்றொன்று இங்கே மேலே காணப்படுகின்றது, அது மிகவும் மெல்லியதான ஒன்று, உள்ளே அணிந்திருக்கின்ற உள்ளாடை வெளியே தெரியும்). அவ்விதமான ஆடை அணியவே கூடாது என்பதே என் கருத்து. அது எனக்குப் பிடிக்காது, உண்மையாகவே அது எனக்குப் பிடிக்காது. மற்றவரைப் போலவே இவர்களும் ஆவியால் நிரப்பட்டவர்களாக இருக்கலாம், என்று என்னால் கூற முடியவில்லை, எனக்குத் தெரியாது; தேவன் அதை அறிவார். ஆனால் கண்ணால் கண்ட உடனே, நீ நரகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறாய் என்று கூறி அந்த பெண்னை நான் கடிந்து கொள்ளமாட்டேன். இந்த மனிதனோ தன்னுடைய சபையில் ஒரு பெண்ணைக் கொண்டிருந்தார், அவள் நீண்ட ஆடைகளையும் நீண்ட தலை மயிரையும் கொண்டவளாக இருந்தாள், ஆனால் எப்பொழுதுமே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் சண்டையிடுகின்ற அளவிற்கு பெரிய கோபக்காரியாக இருந்தாள், அவள் கூடுமான வரையில் மிகவும் கீழ்த்தரமானவளாகக் காணப்பட்டாள். இப்பொழுது, நீண்ட தலை மயிர் மற்றும் நீண்ட பாவாடைகள் உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லாது. இல்லை, ஐயா உங்களுக்குள் இருக்கின்ற ஆவியே உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லும். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக... 29ஆகவே நீங்கள்... நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் அநேக முறை போதகர் இந்த காரியங்களைக் குறித்துப் பேசாமல் இருந்துவிடுகின்றனர். ஆதலால் மக்கள் தானாகவே எல்லாமே சரிதான் என்று அப்படியே இருந்து விடுகின்றனர். ஆனால் உண்மையாக ஒரு போதகன் அதைக் கடிந்து கிழித்தெரிய வேண்டும். பிறகு - மேலும் - சபையிலுள்ள சகோதரிகள் - குணாதிசயத்தில் நிலைத்திருக்கின்ற, தங்கள் ஆடைகளை சரியாக அணிந்துள்ள அந்த சகோதரிகள், அவர்கள் இனிமையான சுபாவத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், அவர்கள் தாய்மார்களைப் போல, சகோதரிகளைப் போல இருக்க வேண்டும். தேவ பக்தியுள்ள, தாய்மையுள்ள, சகோதரிக்குரிய பண்புள்ள எந்த ஒரு பெண்ணும் இப்படிப்பட்ட ஒரு நபரிடம் ஆவியின் இனிமையுடனே சென்று அவளோடு உட்கார்ந்து இதைக் குறித்து அவளுடன் பேச கடமைப்பட்டவளாக இருக்கிறாள். ஆகவே அந்த பெண் தேவனுடையவளாக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்வார், அவளும் தன்னைத் திருத்திக் கொள்வாள். ஆனால் நீங்கள் உடனடியாக அவளைக் கடிந்து கொண்டு அவளை பலவந்தமாக கட்டாயப்படுத்துவீர்களானால், நீங்கள் அந்த சத்தியத்தில் வந்து இளைய, குழந்தையாக பிறந்திருக்கின்ற அவளுக்கு தீங்கிழைத்து புண்படுத்திவிடுவீர்கள். புரிகின்றதா? ஆதலால் தான் நான் அந்த நபரைக் கடிந்து கொள்வதில்லை. 30இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகின்ற நபர்.... இப்பொழுது, ஒரு வினோதமான காரியத்தை இங்கே நான் - நான் கூற வேண்டியவனாக இருக்கிறேன், நீங்கள் என்னுடன் உடன்படாதிருந்தால், அதனால் பரவாயில்லை. நீங்கள் பாருங்கள், அநேக முறை இக்காரியங்களை நாம் தவறாக நிர்ணயிக்கின்றோம். சரியான ஒன்றை செய்ய முயற்சிக்கும் ஒருவரை, நாம் எப்பொழுதுமே மிகச் சிறந்த விதத்தில் அந்த நபரைக் குறித்து சரியான விதத்தில் நாம் சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஓ, அவர்கள் முயற்சி செய்கின்றனர். உங்களிடம் பகுத்தறியுதல் இருந்தாலொழிய, அவர்களுடைய இருதயத்தை அறிந்து கொள்ள இயலாது. அவர்கள் தவறாயிருந்தால், அப்பொழுது நீங்கள்... வேதாகமம் கூறுகிறத , “ஒரு சகோதரன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாக இருக்கிறவர்கள் சாந்தமுள்ள ஆவியோடே அந்த சகோதரனிடம் செல்லுங்கள்; நீங்களும் சோதிக்கப்படாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் அந்த நபரை திரும்பவுமாக தேவனிடத்தில் ஒப்புரவாக்க முடியவில்லையெனில், அவர்களிடம் சரியான ஆவி இல்லை என்று நீங்கள் கூறாதீர்கள், எனெனில்... 31கவனியுங்கள், உண்மையாகவே உங்களை குத்தப் போகின்ற ஒரு காரியத்தை ஒரு நிமிடம் நான் கூறப்போகிறேன், ஆகவே ஒரு கண நேரத்திற்கு அமைதியாக அப்படியே தரித்திருங்கள். ஒரு மாய்மாலக்காரனின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரால் பேச முடியும். சரியாக! அவ்வாறு நிகழ்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன், அது சரியே என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் நிருபிக்க முடியும். பிசாசின் சக்திகள் அந்த ஆவிகளை எடுத்து அவர்களை உபயோகப்படுத்தும் என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் உங்களுக்கு அதை நிருபிக்க முடியும்; நிச்சயமாக அவைகள் அந்த வரங்களை எடுத்து உபயோகப்படுத்துகின்றனர். மாய்மாலக்காரர்கள் உண்மையான பரிசுத்த ஆவியை எடுத்து அதைக் கொண்டு பேசுவதை நான் கண்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான், பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதின் ஒரே அடையாளம் அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரமே என்று உங்களால் கூற முடியாது. 32இப்பொழுது, சில காலத்திற்கு முன்னர் நான் பெந்தெகொஸ்தேயினுள் முதல் முறையாக கொண்டு வரப்பட்டபோது, நான் சகோதரன் ரோவ் அவர்களின் கூடாரம் இருக்கின்ற மிஷாவாகாவிற்குச் சென்றேன். அங்கே அவர்கள் ஒரு கன்வென்ஷன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர், அவர்கள் இயேசு நாமம் ஜனங்களாவர். இப்பொழுது, நான் இயேசு நாமம் ஜனங்களின் கருத்தோடு நான் உடன்படவில்லை, அப்படி இல்லை, அப்படி இல்லை ஏனென்றால்... அவர்கள் என் சகோதரர், ஆனால் காரணம் என்னவென்றால்... “மறு ஜென்மத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். நான் அதை விசுவாசிப்பதில்லை. தண்ணீர் உங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும் என்று நான் விசுவாசிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் மறு ஜென்மம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் ஒருத்துவ மக்களோ மறு ஜென்மத்திற்கென்று ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். இயேசுவின் நாமம், அது இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்கள், ஏனெனில் அவர், ”நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவங்களின் மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“ என்று கூறியுள்ளார். ஆனால் முதலாவதாக வருவதென்ன?மனந்திரும்புதல், உங்கள் பாவங்களுக்காக மனவருந்துதல், பிறகு பாவத்திலிருந்து திரும்புதல். பிறகு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல், அதுசரியே. இதை எல்லாம் நீங்கள் பாவ மன்னிப்பிற்காகத் தான் செய்தீர்கள். 33இப்பொழுது, அங்கே கூட்டத்தில் அநேக ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். அந்நாட்களில் இங்கே வடக்கு மாகாணத்தில் அல்லது தெற்கில் நிறப் பிரிவினையை கைக்கொண்டிருந்தனர், ஆகவே இங்கே அவர்கள் கூட்டத்தை வைக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அநேக கறுப்பு நிற சகோதரர் இக்கூட்டங்களுக்கு வர இருந்தனர். அது வெளிப்படுவதற்கு முன்னர் PA. of W, மற்றும் P.A of J.C. ஆக இருந்தது. ஆகவே அவர்கள் எல்லாரும் மிஷாவாகாவில் கூடியிருந்தனர், வெள்ளையர் மற்றும் கறுப்பு நிறத்தவர் சேர்ந்து ஒன்று கூடியிருந்தனர், அந்த சமயத்தில் தெற்கு பகுதியில் அவர்களால் கூட்டத்தை வைக்க முடியாமல் இருந்தது. அப்பொழுது வெள்ளை நிற மனிதர் இருவர் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அங்கே கொடுக்கப்பட்ட செய்திகளை அதற்கு முன்னர் என் வாழ்க்கையில் நான் கேட்டதே கிடையாது. அங்கே இருந்த மனிதர் எழுந்திருப்பார்கள், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவார், மற்றொருவர் அதற்கு வியாக்கியானத்தை அளித்து, கூட்டத்தில் இருக்கின்ற மக்களை நோக்கி அவர்களிடம் என்ன தவறு உள்ளது, அவர்கள் என்ன செய்தனர் என்று கூறுவார். பிறகு இந்த மனிதர் அந்நியபாஷையில் பேசுவார், அவர் அதற்கு வியாக்கியானம் அளிப்பார். அப்பொழுது நான், “என்னே, நான் இங்கே தூதர்களின் மத்தியில் இருக்கின்றேனா'' என்று எண்ணினேன். இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் கேட்டதேயில்லை! 34நான் சோள வயலில் இரவு முழுவதுமாக ஜெபித்தேன். நான் சிறு பிராய முதற்கொண்டே, வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே கிடைக்கும் என விசுவாசித்தேன், என்னால் தரிசனங்கள் காணமுடிந்தது. அடுத்த நாள் காலை பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நானும் பேசினேன். வெளியே அங்கே அநேக மக்கள் நின்றிருந்தனர், அவர்கள் என்னிடம் வந்து தங்கள் கூட்டங்களுக்கு வர எனக்கு அழைப்பு விடுத்தனர், இன்னுமாக நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்டாக இருந்தேன். ஆகவே நான் - நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். சிறிதுநேரம் கழித்து அங்கே தூதர் போல் இருந்த அந்த இரண்டு மனிதரை சந்திக்க வேண்டுமென்று நான் ஆவல் கொண்டேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்டதே... அவர்களுக்கு வாயைச் சுற்றிலும் வெள்ளையாகிவிடும், ஒருவர் எழுந்து நிற்பார், அந்நிய பாஷை பேசுவார். அந்த இன்னொருவர் எழுந்து நின்று, ''கர்த்தர் உரைக்கிறதாவது இங்கே உள்ள ஜோன்ஸ், அவர்கள் முந்தைய நாளில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தார். நீங்கள் அந்த வீட்டை சுற்றி நடந்த போது அந்த பாக்கெட் புத்தகத்தை எடுத்தீர்கள், அது இந்த மனிதனின் புத்தகமாகும், இந்த மனிதன் தான் அதை அங்கே தொலைத்துவிட்டார், கர்த்தர் உரைக்கிறதாவது, அதை திரும்பவுமாக எடுத்துக் கொள்!'' என்று உரைப்பார். “தேவன் என் மீது இரக்கம் வைப்பாராக, இதோ அது”. பாருங்கள், உண்மை, அதை அப்படியே உரைப்பார்கள், மக்களிடம் சரியாக அதைக் கூறுவர். அப்பொழுது நான், ''ஓ, என்னே, இது மிகவும் அற்புதமானதல்லவா!'' என்று நினைத்தேன். அப்பொழுதே நான், “இது தேவன் தான்'' என்று நினைத்தேன். 35சரி அப்பொழுது நான் அந்த இரண்டு மனிதரில் ஒருவரை சென்று சந்தித்தேன், நான் அவரோடு பேசிக் கொண்டிருந்த போதே, “தேவனே, அது என்னவாயிருந்தாலும், அதை நான் காண்பேனாக'' என்று நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். தரிசனங்கள், அதை எப்படி அழைப்பது என்றே எனக்கு தெரியாது, அதை என்ன என்று கூறவேண்டும் என்பதே எனக்குத் தெரியாதிருந்தது. ஆகவே அப்பொழுது அந்த காரியமானது என் முன்பாக வந்த போது, நான் அவருடைய கவனத்தை ஈர்த்தேன், அவருடைய ஆவியை நான் கண்டு பிடிக்கும் வரைக்கும் நான் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன், அங்கே அந்த ஸ்திரீ செய்தது. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு இயேசு செய்தது போல், அவருடைய ஆவியைப் பகுத்தறியும் வரை நான் பேசிக் கொண்டேயிருந்தேன். அவர் ஒரு கிறிஸ்தவனாக, ஒரு உண்மையான, நேர்மையான தேவனுடைய பரிசுத்தவானாக இருந்தார். ”கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக'' என்று நான் எண்ணினேன். அரை மணி நேரம் கழித்து, அடுத்த மனிதனை அந்த மூலையில் சந்தித்தேன், அவருடன் நான் பேசினேன். நான் ஒரு மாய்மாலக்காரனிடம் பேசியிருப்பேனானால், அவர்களில் இவரும் ஒருவராய் இருப்பார். அவருடைய மனைவிக்கு கறுத்த தலைமயிர் இருந்தது, இவரோ பொன் நிற தலைமயிர் (blond) கொண்டிருந்த ஒரு பெண்ணோடு வாழ்ந்து அவள் மூலமாக இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தார்; ஆனால் இன்னுமாக, எந்த ஆவியைக் கொண்டு அந்த மனிதன் பேசிக் கொண்டிருந்தாரோ, அதே ஆவியைக் கொண்டு இந்த மனிதனும் அதே வியாக்கியானத்தை முற்றிலும் சரியாக அளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன். 36என்னுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாக, அந்த இந்தியர்களுடன் ஒரு மந்திர கூடாரத்திற்குள் சென்ற ஒரு அனுபவம் நான் பெற்றிருந்தேன். அவர்கள் பேயைக் கொண்டு நடனமாடுபவர்கள். அவர்கள் ஒரு பாம்பை எடுத்து தங்கள் மேல் சுற்றிக் கொண்டு, சோள ஆட்டம் ஆடி, அந்நிய பாஷையில் பேசி அதற்கு வியாக்கியானம் அளிப்பார்கள், அங்கு அமர்ந்திருந்த மக்களுடைய மனதில் என்ன இருக்கின்றது என்பதை சரியாக பிழையில்லாமல் கூறுவார்கள். பிறகு ஒரு மந்திரவாதி ஒரு பென்சிலை எடுத்து தரையில் கிடத்தினான். மேலும் பாருங்கள்? அந்த பென்சில் எழுந்து அந்நிய பாஷையில் எழுதி அதற்கு வியாக்கியானத்தையும் எழுதி சரியாக அங்கே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிடம் சரியாக எடுத்துக் கூறுவதையும் நான் கண்டிருக்கிறேன். மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கூட்டத்தில்! ஆகவே நான், ''நான் பிசாசுகளின் மத்தியில் வந்திருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டேன், பிறகு எல்லாவற்றையும் அப்படியே கடந்து போகச் செய்தேன். 37ஒரு நாள் நான் கிரீன் மில்லில் என்னுடைய குகையில் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அந்த காரியத்திற்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். நான்... திரும்பவுமாக நான் குகைக்குள் செல்ல வேண்டியிருந்தது, சிறிது சூரிய வெளிச்சம் எனக்கு தேவைப்பட்டது, அது மதிய வேளையாயிருந்தது, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். அங்கே மலையின் கீழே இருக்கின்ற அந்த மரக்கட்டையின் மீது உட்கார்ந்து சிறிது நேரம் வேதாகமத்தை வாசிக்கலாம் என்று எண்ணினேன். நான் வேதாகமத்தை கீழே வைத்து விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். காற்று அடிக்க ஆரம்பித்தது, காற்றானது வேதாகமத்தின் மீது அடித்து எபிரெயர் 6-வது அதிகாரத்திற்கு திருப்பினது “ஒரு வேளை, அதை நான் படிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ'' என்று எண்ணினேன். நான் அதை படித்தேன். “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப் போனவர்கள். அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, முள் செடிகளையும், முட் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமானது தகாததாயும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு''. அது அவ்விதமாக இருந்தது. நான் வாசித்து ''நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்றெண்ணினேன். வேறொரு பக்கத்திற்கு திருப்பினேன். ''நல்லது, இங்கே இருக்கிறதை நான் வாசிக்கட்டும், மற்றதை வாசிக்கட்டும்'' என்று நினைத்தேன். வேதாகமத்தை கீழே வைத்துவிட்டு, என் கண்களை துடைத்து சுத்தம் செய்தேன், அந்த காற்றானது மறுபடியுமாக அடித்து எபிரெயர்-கு மறுபடியுமாக திருப்பினது. அவ்விதமாக மூன்று அல்லது நான்கு முறை நடந்தது, மூன்று முறைக்கு மேலாக. அதில் எந்த தவறையும் நான் காணவில்லை. ”அப்படியானால் அதில் இருப்பது என்ன?'' என்று நினைத்தேன். 38நான், உங்களால்... எபிரெயர் 6-ஐ அநேக முறைகள் நீங்கள் வாசித்திருப்பீர்கள், ''முள் செடிகளும், முட்பூண்டுகளும், பூமியின் மீது தண்ணீர் பாய்ச்ச அடிக்கடி பெய்கிற மழையானது, அதை முளைப்பிக்க, அதன் கனியை கொண்டு வர, பெய்கின்றது. ஆனால் முள்செடிகளும், முட்பூண்டுகளும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு, ஒன்று சேர்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒன்றையுமே என்னால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருந்தது. ''உம், முள் செடிகளும் முட்பூண்டுகளும் சுட்டெரிக்கப்படுகின்றது, தேவன் தம்முடைய கோதுமையை களஞ்சியத்திற்கு கொண்டு செல்லுகின்றார், அவ்வளவுதான், இது தான் அர்த்தமென்று புரிகின்றது என்று நினைத்துக் கொண்டேன். அதைக் குறித்து வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை'' என்றேன். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன், அதைப் போன்று நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்கு முன்பாக ஒரு தரிசனம் வந்தது. அதிலே நான் உலகமானது இதைப் போன்று திரும்பிக் கொண்டிருந்தது, அது நேராக இருந்து பயிரிடப்பட தயாராக இருந்தது. வெள்ளை அங்கி தரித்திருந்த ஒரு மனிதன் ஒரு உணவு சாக்குப்பையை, அல்லது ஒரு விதை நிறைந்த சாக்குப்பையில் தலை குனிந்த வண்ணம் இருக்க சற்றே சென்று கொண்டிருந்தான். பழைய விதை விதைக்கும் முறையை எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, எப்படி நீங்கள்... என் தந்தை செய்வதை நான் கண்டிருக்கிறேன். கையினால் அவ்விதமாக வீசியெறிவது, அந்த விதைகள் நிலத்தின் மீது விழுந்து விடும்.இந்த மனிதன் விதைகளை இவ்விதமாக விதைத்துக் கொண்டிருந்தான். அவன் விதைத்து கடந்து சென்ற உடனே, அவன் பின்பாக கோதுமையானது மேலே வந்தது. 39நல்லது, அந்த மனிதனானவன் பூமியின் வளைவை சுற்றி சென்ற உடன், ஒரு கறுப்பு நிறத்தில் ஒன்று வருவதை நான் கண்டேன், ஒரு கறுப்பு நிலவைப் போன்று இருந்தது. நான் உற்றுப் பார்த்தேன், அது அருகில் வந்தது, அது ஒரு - ஒரு மனிதனாக இருந்தது, அடர்ந்த கறுப்பு, கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். அவன் இவ்விதமாக கள்ளத்தனமாக பதுங்கி வந்தான். அவனும் ஒரு விதை சாக்குப்பையை வைத்திருந்தான், ஆனால் அதற்குள்ளாக களைகளை மாத்திரம் வைத்திருந்தான். இவன் இந்த கோதுமையின் நடுவில் இந்த விதமாக விதைத்துக் கொண்டிருந்தான், அதை தூவிக் கொண்டிருந்தான். இவனுக்கு பின்பாக களைகள், முட்பூண்டுகள், முட்செடிகள், முட்புதர்கள் மற்ற எல்லாமும் வளர்ந்தன. அப்பொழுது நான், “இவ்விதமான ஒரு காரியத்தை அந்த மனிதன் செய்வது வெட்ககேடான ஒரு செயலாயிற்றே'' என்று நினைத்தேன். அது ஒரு தரிசனமாயிருந்ததால், அது வேத பூர்வமானது என்று நான் யோசிக்கவில்லை, பாருங்கள். ஆகவே நான் ''அந்த மனிதனுடைய கோதுமை நிலத்தில் இந்த மனிதன் களைகளை விதைக்கிறானே'' என்றேன். அதன் பிறகு மிகவும் வெப்பமாயிற்று. அந்த சிறிய கோதுமை தலையை உயர்த்தி ''உஹ், உஹ், உஹ்“ என்று சுவாசிக்கத் திணறியது. அந்த சிறிய களையும் கூட தன் தலையை உயர்த்தி ''உஹ், உஹ் - உஹ்'' என்றது, அதுவும் கூட தண்ணீருக்காக கடுமையாக துடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் மழைக்காக ஜெபித்தன. சிறிது நேரம் கழித்து ஒரு மின்னலையும் இடியையும் உண்டாக்கும் ஒரு பெரிய மேகம் வந்தது, மழை பெய்ய ஆரம்பித்தது, அது பூமியை வந்தடைந்தது. அந்த சிறிய கோதுமை மேலும் கீழும் குதித்து “அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூச்சலிட ஆரம்பித்தது. அந்த சிறிய களைகளும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” எனக் கூச்சலிட்டது, நேராக நின்றது, கோதுமைக்கு உயிர் வந்தது போலவே களைக்கும் உயிர் வந்தது. அப்பொழுது, ''நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது என்று வேத வசனம் வந்தது“. அப்பொழுது தான் காரியத்தை அறிந்து கொண்டேன். பாருங்கள்? 40இது, ஒரு நபர் சபைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கையில் ஆவியானது அந்த நபரின் மேல் விழுகின்றது, ஆனாலும் அவர்கள் தவறாயிருப்பார்கள், அவர்கள் சரியான ஜீவியத்தை ஜீவிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் அந்த ஆவியைக் குறித்து நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதில் கவனமாயிருங்கள், அது பரிசுத்த ஆவியாகவும் இருக்கக்கூடும். ஆவியை நபரைக் கொண்டு ஆவியை நியாயந்தீர்க்காதீர்கள். அந்த நபர் தவறாக இருக்கக் கூடும். ஆனால் “நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது'' என்று வேதாகமம் கூறவில்லையா? வயலில் நடப்பட்டபோது, ''இரண்டையும் வளரவிடுங்கள், களைகளையும் கோதுமையும் ஒன்றாக வளரவிடுங்கள். களைகளை பிடுங்க முயற்சிக்காதீர்கள். அவைகளை நியாயந்தீர்க்க முயற்சிக்காதீர்கள், இரண்டையும் ஒன்றாக வளரவிடுங்கள். அந்த நாளிலே தூதர்கள் அனுப்பப்படுவார்கள், அவர்கள் களைகளை எல்லாம் எடுத்து சுட்டெரிப்பார்கள், கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்'' என்று இயேசு கூறவில்லையா? ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நாம் அறிந்து கொள்வோம். நீங்கள் உங்கள் இருதயத்தில் அறிந்து கொள்ளலாம். அந்த நபரோடு உறவு கொள்ள முயற்சித்துக் கொண்டிருங்கள். 41இந்த பெண் தவறான விதத்தில் உடையுடுத்தியிருந்தால், இந்த பெண்... என்று கூறாதீர்கள் அல்லது, இது எவ்விதமாக உள்ளது? ''பரிசுத்த ஆவியானவர் காண்பார் என்று கூறுவோம்''. நாம் பார்ப்போம். இல்லை, நான் தவறான ஒன்றை எடுத்துவிட்டேன், எப்படியாயினும் ஓ, இதோ இருக்கிறது, ஆம். பெண்கள் அந்நிய பாஷையில் பேசுவது, இப்பொழுது, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை கொண்ட ஒரு ஸ்திரீ சபையில் அந்நிய பாஷையில் பேசினால், அது... நாம் பார்க்கலாம். அவள் மூலமாக பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது அது ஒரு கள்ள ஆவியா? நீங்கள் பாருங்கள், நான் எதுவும் கூறமாட்டேன். அந்த ஸ்திரீ குட்டை மயிரை வைத்திருப்பதனால் அவள் சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்திருந்தால்... (அது தான் நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்று நான் நம்புகிறேன்)... ஆமாம், ''குட்டை தலைமயிர்“, சகோதரனே, நீர் திருமணமான மனிதராயிருந்தால், அவளும் திருமணமானவளாக இருந்தால் நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்றோ அல்லது உங்கள் மனைவி, இந்த ஸ்திரீயுடன் இனிமையாக காரியத்தை எடுத்து பேச செய்யலாமே? அவள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று நாம் விசுவாசிப்போம். அவள் இந்த சபையில் இருந்தால், அவளுக்கு பரிசுத்த ஆவி இருக்கிறது என்று நான் விசுவாசிக்கப் போகிறேன். அப்பொழுது இவ்விதமாகக் கூறுவோம், ஒருக்கால் அவள் ஒரு... உங்களுக்கு தெரியுமா, சில நேரத்தில், நம்மை ஆராய்ந்து பார்த்தால் நாமும் கூட சிறிது தவறை உடையவர்களாயிருக்க வகையுண்டு. நீங்கள் அதை அறிவீர்கள், அது தான் காரியம். ஆகவே யாராவது நம்மிடம் சிலவற்றை கூற வேண்டியிருக்கும். அநேக சமயங்களில் ஜனங்கள் என்னிடம் அநேக காரியங்களை நான் தவறாக செய்கிறேன் என்றும், நான் தவறு செய்தேன் என்றும் என்னிடம் கூறுவார்கள், நான் அதை பாராட்டுகிறேன். 42ஆனால் இப்பொழுது நாம் கூறட்டும்... என்னவாயிருந்தாலும், நாம் விசுவாசிப்போம். இதை நாம் விசுவாசிப்போம், அந்த ஸ்திரீ முற்றிலுமாக ஒரு கிறிஸ்தவளாக இல்லாமலிருந்து அவ்விதமாக அவள் உடுத்தியிருப்பாளானால், அதற்காக தேவன் அவளை நியாயந்தீர்ப்பார். அது சரி. ஆனால்... அவள் கீழ்த்தரமாக உடை அணிந்து, அவள் செய்யும் காரியங்கள் சரியானதாக இல்லாதிருந்தால், தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். ஆனால் அந்த ஸ்திரீயின் மீது இருக்கும் ஆவியானது பரிசுத்த ஆவியே என்று நாம் விசுவாசிப்போம். பாருங்கள், ஏனென்றால் நாம் அதை அறியவில்லை. இப்பொழுது, அந்த பரிசுத்த ஆவியின் வியாக்கியானமானது ஏதோ ஒன்றை கூறுமானால், “கிறிஸ்துவுக்கு சபிப்பை...'' ஆவியினாலே பேசுகிற எவனும் கிறிஸ்துவை சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும் அந்த ஸ்திரீயானவள் அந்நிய பாஷையில் பேசி பிறகு ”கிறிஸ்து சபிக்கப்பட்டவரென்று வியாக்கியானம் வருமென்றால்“, அந்த ஸ்திரீயின் மேல் இருப்பது தீய ஆவியென்று அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது கிறிஸ்துவை ஸ்தோத்தரித்து பக்திவிருத்தி உண்டாக்கும்படிக்கு இருக்கின்ற வரையில், அது ஆவியானவர் என்று விசுவாசியுங்கள். பாருங்கள்? ஆமென். இது குழப்பமாயிராது என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும் அதைக் குறித்து கொஞ்சம் நாம் தெரிந்து கொண்டோம் என்று நான் நம்புகிறேன். 43கேள்வி: உபாகமம், 23-ஆம் அதிகாரம் 2-வது வசனம் விவாகத்திற்கு அப்பாற்பட்டு பிறந்த ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்று போதிக்கிறதா? “தேவன் பெற்றோர் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்'' என்று கூறுகிறதே. இது என்னவென்பதை விளக்கவும். சரி. விபச்சாரமானது வேதாகம காலத்திலே ஒரு பயங்கரமான காரியமாக இருந்தது, ஒரு மனிதன் தன்னுடைய மனைவியாக அல்லாதிருக்கிற ஒரு பெண் மூலமாக ஒரு குழந்தையை பெறுவானானால், அந்த பிள்ளை, அந்த பிள்ளையினுடைய பிள்ளைகளிடத்திலும், அதனுடைய பிள்ளைகளிடத்திலும், நாலு தலைமுறைகளுக்கு, நானூறு மற்றும் அதற்கும் பிறகான வருடங்களுக்கு கர்த்தருடைய சபைக்குள்ளாக வரவே முடியாது, ஏனெனில் காளை மற்றும் வெள்ளாட்டு கடாக்களின் இரத்தமானது பாவத்தை எடுத்துப் போட போதுமானதாக இருக்கவில்லை. அதனால் பாவத்தை புறம்பாக வைக்க அல்லது மூடத்தான் முடியும். அதனால் பாவத்தை வெளியே எடுத்துவிட முடியாது. பாருங்கள்? அதனால் பாவத்தை வெளியே எடுத்து விட முடியவில்லை, அதனால் பாவத்தை மூடத்தான் முடிந்தது. விபச்சாரமானது பயங்கரமான ஒரு காரியமாகும்! ஒரு பெண், விலையேற்பெற்ற ரத்தினமாவாள், அவள் ஒரு தாயாக இருக்கும்படியாக தேவன் அவளை உண்டாக்கினார், தாய்மைத்துவத்தை அவளிடம் ஒப்படைத்தார். ஆனால் அவளோ தன் புருஷனல்லாத மற்றொரு மனிதனுக்கு ஒரு பிள்ளையைப் பெறுவாளானால், அப்பொழுது அந்த பிள்ளையின் மீதும், அதனுடைய பிள்ளைகள் மற்றும் அதனுடைய பிள்ளைகள், மற்றும் அதனுடைய பிள்ளைகளிடத்தில் மூன்று மற்றும் நான்கு தலைமுறைகளுக்கு சாபமானது இருக்கும். அநேக சமயங்களில் பால்வினை கிரந்தி நோய்கள் மற்றும் - மற்றும் குருட்டாட்டங்கள், மக்கள் மேல் வந்தது. ஆம் ஒரு பெண், பரிசுத்த விவாகத்திற்கு அப்பாற்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுப்பாளானால் அது ஒரு பயங்கரமான, பயங்கரமான காரியமாகும். கவனியுங்கள், அப்பொழுது மாத்திரமல்ல, இன்னுமாக அது ஒரு பயங்கரமான செயலாகும், நிச்சயமாக எப்பொழுதுமே அவ்விதமே. 44கேள்வி: எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்னர் எசேக்கியல் 38 மற்றும் 39 நிறைவேறுமா? இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களால், எசேக்கியல் 38 மற்றும் 39 கோகு மற்றும் மாகோகு குறித்து இருக்கிறது, அது தான் வடக்கு தேசமாகிய ரஷியா ஆகும். இப்பொழுது, இது சரி என்று நான் கூறவில்லை, ஆனால் நான் அதை போதிப்பது என்னவென்றால், அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு, சபை மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு நிறைவேறும். அங்கே இஸ்ரவேலுக்கு முன்பாக அவர்கள் வருகையில் கோகு மற்றும் மாகோகை தேவன் கையாளுவார். அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அது நடைபெறாது, பாருங்கள். ஆனால் நான் அதை அப்படித்தான் போதிக்கிறேன். அதைக் குறித்த என் கருத்து என்னவென்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர் என்று நான் கருதுகிறேன். 45கேள்வி: நாம் இங்கே கேள்விப்பட்ட மற்றும் கண்டிருக்கின்ற காரியங்களைக் குறித்து, அதாவது அவருடைய வருகையின் அருகாமை, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் மற்றும் காரியங்களைக் குறித்து மற்றவருக்கு சாட்சி கொடுக்க வேண்டுமென்று கர்த்தர் நம்மிடம் தீர்க்கதரிசனம் மூலமாக கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்களைப் போலக் காணப்படுகின்ற சிலரிடம் இந்த காரியங்களை நாங்கள் கூறியுள்ளோம், ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிப்பது போல காணப்படவில்லை. அந்த மக்களுக்கு என்ன சம்பவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா? இப்பொழுது, ''நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'' என்று கூறின விதத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சரியானதாக இருக்கும்படிக்கு அது செய்யும். ஏனெனில் நான் அதை குறித்து நினைத்துப் பார்ப்பேன். ஒருவனுக்கு தேவன் ஒளியை வெளிப் படுத்திக் கொடுக்காவிடில் எந்த ஒரு மனிதனாலும் தேவனுடைய ஒளியில் நடக்க முடியாதென்று நான் நம்புகிறேன். மற்றும் நான் விசுவாசிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும்... இந்த மறைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் ஜனத்திற்கு மறைக்கப்பட்டுள்ளது, இவைகளை தேவன் வெளிப்படுத்தினாலொழிய எந்த ஒரு மனிதனாலும் இவைகளைக் கூட காண முடியாது, அவ்வாறு நான் விசுவாசிக்கிறேன் ஏனென்றால் வேதாகமத்தில் அவ்விதமாகத் தான் எப்பொழுதுமே இருந்து வந்துள்ளன. 46''உங்களுக்கு கண்களிருந்தும் உங்களால் காணமுடியவில்லை, உங்களுக்கு காதுகளிருந்தும் கேளாமற்போகிறீர்கள்'' என்று இயேசு கூறிவில்லையா? மத்தேயுவிலும், 8 அல்லது 12-வது அதிகாரம் என்று நான் நம்புகிறேன், அது இயேசு இத்தனை அற்புதங்களை அவர்களுக்குள்ளாக செய்திருந்தும் அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலிருக்கிறார்கள் என்று ஏசாயா கூறினான், “அந்த தீர்க்கதரிசனமும் கூறினது'' பாருங்கள்? “ஒருவனை என் பிதா முதலில் அழைக்காவிடில் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு கூறினார். அது எல்லாவற்றையும் முற்றுப் பெறச் செய்கிறது, புரிகின்றதா? இப்பொழுது, ஒளியை பரப்புவதற்குத் தான் நீங்கள் - நீங்கள் பொறுப்பாளிகள், அவர்கள் அந்த ஒளியைப் பெறுவதற்கு நீங்கள் பொறுப்பாளிகளல்ல, அவர்களிடத்திற்கு அதை எடுத்துச் செல்ல நீங்கள் பொறுப்பாளிகள். ஆனால் அவர்களுடைய பதிற்செயலுக்கு நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல. ஆகவே தேவன் அவர்களை உள்ளே அனுமதிப்பாரென்றால், அது அவரைப் பொறுத்த ஒன்றாகும். அவர்கள் வஸ்திரமில்லாதவர்களாக இருந்தாலும், இன்னும் மற்றவை... ஆனால் அவர்கள்... அவர்களால் முடியாது. நினைவில் கொள்ளுங்கள், தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தினாலொழிய அவர்களால் அதைக் காண முடியாது. 47கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், தானியேல் 11-வது அதிகாரம், 31-ஆம் வசனத்தில், அன்றாட பலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள் என்ற நாளைக் குறித்து போதிக்கிறது. தயவு கூர்ந்து அவை என்ன என்பதை நீங்கள் விளக்க முடியுமா? ஓ, இந்த நபர் தன்னுடைய பெயரை இதனுடன் சேர்த்து கையொப்பமிட்டுள்ளார். அடுத்த ஞாயிறு என்னுடைய பொருள் இதுவேயாகும், அது தானியேலின் எழுபது வாரங்களுடன் வருகின்றது. ஆனால்... இதை நான் உங்களுக்கு கூறட்டும், இங்கே கையொப்பமிட்டுள்ள என் மிகவும் விலையேற்பெற்ற சகோதரன், நம்மெல்லாருக்கும் அருமையான நண்பராவார். ஆம், ''பாழாக்கும் அருவருப்பு'' இயேசு, மத்தேயு 24ல் அதைக் குறித்து பேசியுள்ளார். அந்த அருவருப்பு, (என்றால் அசுத்தம்) அந்த பாழாக்கும் அருவருப்பு, அது, ஒருக்காலத்தில் பரிசுத்த இடமாயிருந்த அந்த தேவாலய இடத்தில் தானே முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதி கட்டப்பட்டது தான் அந்த அருவருப்பு. 48கி.பி. 96ஆம் ஆண்டில், தீத்து அரசன் உள்ளே வந்து எருசலேமை கைப்பற்றி தேவாலயத்தை சுட்டெரித்தான், அந்த நிலத்திலே, அவர்கள், முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதியை கட்டினார்கள், (முகமதியர் மதம்) அது இன்று வரையிலும் அங்கே இருக்கின்றது. தேவன் யூதர்களிடம் திரும்ப வரும் வரைக்கும் அது அங்கே இருக்கும். அந்த அருவருப்பு (அது தான் ஓமரின் மசூதி) பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கும் ஒன்று. அங்கே பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்றது, பாருங்கள். இயேசு அதைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார், ''வாசிக்கிறவன் சிந்திக்கக் கடவன்'' என்று கூறினார். பாருங்கள்? ஆதலால், அவர் அந்த நேரம் முதற்கொண்டு அநேக நாள்... அந்த அரசனுக்கு பிறகு, அநேக நாள், நாம் அடுத்த ஞாயிறன்று பார்க்கப் போகிறோம். எனக்கு தெரிந்த வரை சிறந்த முறையில் அதை நான் உங்களுக்கு அடுத்த ஞாயிறன்று எடுத்துரைப்பேன். தேவாலயத்தின் இடத்தை எடுத்துக் கொண்ட அந்த ஓமர் மசூதி தான் அந்த அருவருப்பு, “மேலும் அந்த பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்ற பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, பாருங்கள், தேவாலயம் இருந்த அந்த இடத்தில் (பரிசுத்த ஸ்தலம்) ஓமரின் மசூதி இருக்கின்றது. 49கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரும் ஒவ்வொருவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா, கர்த்தருடைய பண்டக சாலையிலே தங்கள் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா? இந்த கேள்விக்கான வேத வசனத்தை தயவு கூர்ந்து அளிக்கவும். சரி, உங்களால் கூடுமானால்... அது சரி, மல்கியா 4 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது, “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? (ஆங்கில வேதாகமத்தில் rob, திருட்டு என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) எதிலே உம்மை வஞ்சித்தோம் (robbed திருடினோம்) என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. உங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளையும் என்னுடைய பண்டக சாலைக்கு கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங் கொள்ளாமற் போகும் மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். அது எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் சவால் என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேலும் எனக்கு அந்நேரம் மட்டுமிருந்தால் நான் அடுத்த பத்து நிமிடத்திற்கு இந்த சிறிய வேத வசனங்களுக்கு சென்றிருக்க மாட்டேன், நான் என்னுடைய தனிப்பட்ட சாட்சியை கூற விரும்புகிறேன். எப்படி நானும் பசியாயிருந்தேன், என் தாய் மற்றும் அவர்கள் பசியாயிருந்தார்கள், மற்றும் எனது தந்தையின் சுகவீனமான ஒரு சூழல், ஆனாலும் முதலாவதாக எனது தசமபாகத்தை எடுத்து அதை கர்த்தருக்கு கொடுத்தேன். நீங்கள் கொடுத்து அதன் பிறகு நடப்பவைகளை பாருங்கள். எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, நீங்கள் வாரத்திற்கு ஒரு டாலர் மாத்திரமே சம்பாதித்து, அந்த பணத்தில் பத்து சென்டுகளை கொண்டு வந்து உங்களுடைய பண்டகசாலையில், நீங்கள் செல்லுகின்ற உங்கள் சபையில் கொடுத்து, தேவன் அதை ஆசீர்வதிக்கவில்லையெனில் என்னை ஒரு மாய்மாலக்காரன் என்று கூறுங்கள். இப்படிப்பட்டதை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதேயில்லை ஆம், ஐயா. அது ஒவ்வொருவருக்கும் சவாலாகும். மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும்... அது மற்ற கேள்விக்கு செல்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டும்! அது சரி. அதை செலுத்தித்தானாக வேண்டும். 50அது சரி இப்பொழுது: கேள்வி: ஒரு நபர் அல்லது நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே குரல் மற்றும் தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கான வியாக்கியானம் ஒவ்வொரு முறையும் வியாக்கியானம் செய்பவரால் பலவிதமாக வியாக்கியானிக்கப்படும் போது, அது பரிசுத்த ஆவியாக இருக்குமா? இப்பொழுது நான் இதை மறுபடியுமாக வாசிக்கட்டும்: ஒரு நபர் அல்லது நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே குரல் மற்றும் தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, (வேறு விதமாகக் கூறுவோமானால் ஒரு குறிப்பிட்ட, குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியுமாக அதே காரியத்தையே கூறிக் கொண்டிருத்தல்) அதற்கான வியாக்கியானம் ஒவ்வொரு முறையும் வியாக்கியானம் செய்பவரால் பலவிதமாக வியாக்கியானிக்கப்படும் போது, அது பரிசுத்த ஆவியாக இருக்குமா? இப்பொழுது, இது கடினமான ஒரு காரியம், ஆனால் என்னால் கூடுமான வரைக்கும் இதன் பேரில் சில உண்மைகளை நான் கொண்டு வருவேனாக. இது சகோதரன் பிரன்ஹாம் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்வது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயிக்கிறேன், ஆவிக்குரிய காரியங்களைக் குறித்த விவகாரங்களில் எனக்கிருக்கும் இந்த தனிப்பட்ட அனுபவத்தை நான் உங்களுக்கு கூறுவேனாக. இதைப் போன்ற கேள்விகளை என்னிடமாக கேட்பதற்கு உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த விதமாக என்னிடத்தில் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டீர்கள். வாக்குவாதத்தை எழுப்பவதற்கென்றே கேள்விகளை ஒரு கிறிஸ்தவன் கேட்கமாட் டான் என்று நான் விசுவாசிக்கிறேன், சத்தியம் என்னவென்பதை கண்டு கொள்வதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? நான் பதிலளிப்பேன், ஆனால்... எனக்கு தெரிந்த வரையில் உண்டாயிருக்கிற அறிவு என்று நான் என்னை தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே நான் அதற்கு பதிலளிப்பேன், அதன் பிறகு உங்களுக்குள் இருக்கும் ஆவி கோபம் கொண்டால், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி பரிசுத்த ஆவி அல்ல என்று தான் அர்த்தம். புரிகின்றதா? அப்படியானால் பரிசுத்த ஆவி கோபம் கொள்ளாது, ஒவ்வொரு முறையும் வார்த்தையினால் அது திருத்திக் கொள்ளும், சீர்திருத்தலை தாங்கும். 51இப்பொழுது இதை நான் கூறட்டும், நான் இந்த காரியத்தில், நினைவு கொள்ளுங்கள், தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருப்பாராக. நான், இது வில்லியம் பிரன்ஹாம், என்னால் இதை கூற முடியாது. அபிஷேகத்தின் கீழாக இப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கண்டிருக்கின்ற அனுபவங்களில், அந்த நபர் ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை, அதே குரல் தொனியில், பேசுவது அந்நிய பாஷையில் தான் பேசுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிப்பது என்னவென்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால் அவர்கள் ஆவியினாலே அந்நிய பாஷை பேசுகின்றார்கள். அவர்கள் அந்நிய பாஷையில் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் தவறான தொனியில் உள்ள வியாக்கியானத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள் என நான் நம்புகிறேன். இப்பொழுது, அநேக சமயங்களில், மக்கள்... நான் - நான்... எப்படியாயினும்... இன்று இங்குள்ளோர் அனைவரும் சபை மக்கள் என்றே நான் யூகிக்கிறேன். அப்படித் தானே சகோதரன் நெவில், என்னவாயிருந்தாலும் சரி? இங்கே வெளியேயிருந்து வந்துள்ளவர்களாக இருந்து இதன் பேரில் கருத்து வேறுபாடு கொள்வீர்களானால், நான் இதை என் சொந்த சபைக்கு பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பாருங்கள். 52இப்பொழுது, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனான, உங்களுடைய மேய்ப்பனான நான் கூறிட விரும்புவது, இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு, உங்களுடைய ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்தை நோக்கி வருகையில்... அவை கட்டுக்கடங்காமல் இருப்பதை நீங்கள் கவனிக்க நேரிடுகையில்... அப்பொழுது நீங்கள் சற்று கவனித்தால் நல்லது - அந்த நபரை கவனியுங்கள், அதை அப்படியே விட்டுவிடுங்கள், ஏனெனில் அவர்கள் மேல் இருப்பது தேவனுடைய ஆவி அல்ல. ஆனால் அவர்கள் இனிமையாகவும், தாழ்மையாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் மற்றெல்லாமும் உடையவர்களாகவும் இருந்தால் அது தேவனுடைய ஆவியாகும். யாராவது ஒருவர் ஒழுங்கை மீறி நடந்து கொள்ளும்போது, மேய்ப்பர் அதை அடக்க நேரிடும் போது, அப்போது அந்த ஆவி எழும்புமானால், அப்படியானால் அது தேவனுடைய ஆவி அல்ல. தேவனுடைய ஆவி எப்பொழுதுமே வார்த்தைக்கு வரும், நிற்கும். புரிகின்றதா? அது ஒவ்வொரு முறையும் வார்த்தையை அடையாளங் கண்டு கொள்ளும். இப்பொழுது, ஆனால் இப்பொழுது நான் முகஸ்துதியோ அல்லது அதிர்ச்சியோ செய்ய முயலவில்லை, நான் உண்மையைக் கொண்டு வரவே முயல்கின்றேன். இப்பொழுது, ஒருவர் அந்நிய பாஷையில் பேசி மற்றொருவர் வியாக்கியானம் செய்ய எழுந்திருக்கையில் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள் (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அப்படித் தானே?) அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் செய்யப்படுகையில்... இதனுடன் சேர்த்து சில போதகத்தையும் நான் பேச வேண்டியுள்ளது. அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் அளிக்கப்படும் போது, சில மக்கள் அசாதாரணமான முகபாவம், சொற்களுடன் அந்நிய பாஷையை வியாக்கியானிக்க ஒரு காரியத்தை கூற முற்படுகின்றனர். அது வியாக்கியானம் அல்ல. 53வியாக்கியானம் என்பது, அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவதை, அவர்கள் என்ன பேசினார்களோ அதை அப்படியே மறுபடியுமாக திரும்பக் கூறப்படுவதே, நீங்கள் அதை ஆங்கிலத்தில் கூறக் கேட்கிறீர்கள். ஆனால் அந்த... இந்த நபர் உங்களுடைய சபையில் பேசுகையில்... இதில் ஒன்று நம்மிடையே இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படியானால், அதை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் யாரோ ஒருவர் எழுந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும் அல்லது அதே குரல் மற்றும் தொனியில் இப்படியாக, இப்படியாக, இப்படியாக, இப்படியாக கூறும் போது... நான் உங்களுக்கு கூறுகிறேன், இன்றிரவு, சகோதரன் ஜீனியர் ஜாக்சன் இங்குள்ளார் என்று நான் நினைக்கவில்லை. அவர் இருக்கிறாரா? அவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஜூனியர் ஜாக்சன் மற்றும் அவர் பேசுகின்ற அந்நிய பாஷை குறித்தும், மற்றும் சகோதரன் ஹிக்கின்பாத்தம் மற்றும் இங்கிருக்கின்ற உங்களில் அநேகரைக் குறித்து நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவதுண்டு, அந்நிய பாஷை வியாக்கியானத்தின் சத்தத்தில் இருக்கின்ற மாற்றத்தை நீங்கள் காணும் போது எப்படியாக இருக்கின்றது. பாருங்கள்? இப்பொழுது - இப்பொழுது அது பரவாயில்லை. இப்பொழுது, நான்... என் சபையைக் குறித்து நான் பெருமையாகச் சொல்லவில்லை. இல்லை ஐயா. என்னுடைய சபைக்கு திருத்தப்படுதல் தேவையாயிருக்கும் பட்சத்தில், அது புண்படுத்துகிறதோ அல்லது புண்படுத்தவில்லையோ, நான் - நான் இங்கே நின்று என் இரட்சகருக்காக என்னால் முடிந்த வரைக்கும் அதை நான் செய்வேன், அது சரியே, சுவிசேஷத்தில் நான் உங்கள் தகப்பனாவேன், பாருங்கள், ஆகவே நான்... நீங்கள் தவறான ஆவியை விரும்பமாட்டீர்கள், நீங்கள் சரியான ஆவியைக் கொண்டிருப்பதையே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும்... பெந்தெகொஸ்தே வானங்கள் முழுவதிலும் உண்மையானது நிறைந்திருக்க ஏன் ஒரு மாற்று பதிலீட்டை (substitute) எடுக்கவேண்டும்? சுத்தமான ஒரு மேஜை அமைக்கப்பட்டு அதில் கோழி கறி , மாவுபணியாரங்கள் மற்ற எல்லாமும் வைக்கப்பட்டிருக்கையில் நீங்கள் ஏன் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து உண்ணவேண்டும்? புரிகின்றதா? நாம் ஏன் அதைச் செய்வதில்லை? பாருங்கள்? உண்மையானதை நாம் பெற்றுக் கொள்வோம், அது தான் நமக்குத் தேவையாயிருக்கிறது, அந்த உண்மையான கலப்படமில்லாத தூய்மையான ஒன்று. 54இப்பொழுது, இங்கே கூறப்பட்டுள்ள இந்த காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், அதே போல் அந்த காரியத்தை நான் விசுவாசிக்கின்றேன். இரண்டும் சரியே. ஆனால் வியாக்கியானம் செய்பவர் அந்த நபருடைய பாஷையை வியாக்கியானம் செய்கிறார் என்றும் நான் நம்புவதில்லை. நான் அதை விசுவாசிப்பதில்லை. ஆவியானவர் இருக்கிறார் என்றும் அந்த வியாக்கியானம் செய்பவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வியாக்கியானிப்பவர் என்பதைக் காட்டிலும் தீர்க்கதரிசனம் உரைப்பவர் என்றே நான் விசுவாசிக்கிறேன் - அவர் தன்னுடைய சொந்த சத்தத்தை கேட்காமல் இருந்தால். “அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம மொழியிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?'' பாருங்கள்? அதே விதமாக நீங்கள் பேசக் கேட்க வேண்டும், நீங்கள் ஆங்கிலத்தில் பேசக் கேட்க வேண்டும். வியாக்கியானிப்பவர் இப்பொழுது, என்னால் எழுந்து நின்று, எனக்கு இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் அந்நிய மொழியில் எனக்குத் தெரியும். அதுதான் இப்பொழுது நான் பேசப் போகிறேன், ஆவிக்குரிய விரோதமாக அல்ல புரிய வைப்பதற்காக நான் அதைப் பேசப் போகிறேன், பைய், பைய் ப்ளை, ஐ... எக்கே வில் ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென். ''நான் என்ன பேசினேன் என்பதை அறிந்துள்ள நபர் யாராவது இங்கிருப்பார்கள் என்பதில் எனக்கு நிச்சயமில்லை. ஆமாம், சகோதரனே, நான் என்ன கூறினேன்? (சபையோரிலிருந்து ஒரு சகோதரன் ஆப்பிரிக்கான்ஸ் மொழியை என்னால் பேச முடியும் என்று நீங்கள் கூறினீர்கள் என்று கூறுகிறார் - ஆசி) “ஆப்பிரிக்கான்ஸ் மொழி, பைய், பைய் ப்ளை'', ''எனக்கு மிகவும், மிகவும் மகிழ்ச்சி'', ''ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்'' பாருங்கள், ”ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென்“ பாருங்கள்? ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்''. 55இப்பொழுது, அவர் என்ன செய்தார்? அவர்... நான் ஆப்பிரிக்கான்ஸில் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஆங்கிலத்தில் பேசக் கேட்டார். அது சரியா? ஏனெனில் உங்களுக்கு ஆப்பிரிக்கான்ஸ் தெரியும். இப்பொழுது நீங்கள் பேசிக் கொண்டிருக்கையில்... நான் இங்கே நின்று கொண்டிருந்து அல்லது பேசிக் கொண்டிருந்து... பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், சகோதரன் நெவில் அதை மற்ற மக்களுடைய மொழியில் வியாக்கியானிக்கும் போது, நான் என்ன கூறுகிறேன் என்பதை அவர் கேட்டு அதை அவர்களுடைய மொழியில் கூறுகின்றார்; நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அவர் அறிவார். ஏனெனில் என்னுடைய மொழியை அவர் அறிவார். நீங்கள் ஒரு அறியாத மொழியில் பேசி அதை வியாக்கியானிக்கும் போது, நீங்கள் அதை உங்கள் ஜென்ம மொழியில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் அவர்கள் கூறுவதை அந்த விதமாகத் தான் உங்களால் வியாக்கியானிக்க முடியும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்துவிட்டார். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்காகவே மாத்திரம் பேசுகிறீர்கள். 56இந்த ஏழை நபரை ஆசீர்வதிக்க பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கையில், அவர்களும் எழுந்திருக்கும் போது... நம்மை விட்டு கடந்து சென்று இன்றிரவு மகிமையில் இருக்கின்றார் என்று நான் உண்மையாக விசுவாசிக்கின்ற விலையேறப்பெற்ற வயதான சகோதரன் போல் எனக்கு தெரிந்த அருமையான வயதான ஆத்துமா, சகோதரன் ரையான், நாமெல்லாரும் அவரை அறிவோம். அவர் அங்கே தெருவில் நிற்பது வழக்கம்... (தேவனே, என்னை மன்னிக்கவும், பரிசுத்த தன்மைகளை மதியாத ஒன்றாக இருக்க அல்ல... அது... பரிசுத்த ஆவியை தூஷணம் செய்வது மன்னிக்க முடியாததாகும் என்பதை நானறிவேன்) ஆனால் சகோதரன் ஒரேயொரு வார்த்தையை எல்லா நேரத்திலும் திரும்பத் திரும்பக் கூறுவது வழக்கம் “சீக்கெம், சீக்கம், சீக்கெம்'' அல்லது அதைப் போன்ற ஒன்றை கூறுவார். அவர் ஏன், ஒருவர் ''அது தேவனால் உண்டானதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் “நிச்சயமாக, அது தேவனாலுண்டானது! நிச்சயமாக, அது தேவனுடையதுதான்'' என்று கூறினேன். ஆனால் அவர் அந்நிய பாஷையில் பேசினார், அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று என்னால் கூற முடியவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாது. ஆனால் ஆவியானவருடைய பிரசன்னம் அங்கே இருந்தது. ஆகவே ஆவியானவருடைய பிரசன்னம் இருக்கும் போது, இந்த நபர் ஒரு வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் கூறும் போது, இன்னொருவர் குதித்தெழுந்து வியாக்கியானம் அளிக்கமுயன்று, இன்னுமாக அவர் என்ன கூறுகிறார் என்பதை இவர் அறியாதிருக்கிறார். இந்த நபர் வியாக்கியானம் அளிக்கவில்லை, இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார்: தீர்க்கதரிசனத்தின் ஆவி இவர் மீது தங்கி அதினாலே இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், வியாக்கியானம் அளிக்கவில்லை. 57ஆகவே அருமையான கிறிஸ்தவனே, ''அது பரிசுத்த ஆவியாக இருக்குமா?'' என்று கேட்டவராகிய உங்களுக்கு கூறுகிறேன். அது பரிசுத்த ஆவியானவர் இரண்டு அலுவல்களை உபயோகிப்பதாக இருக்கக் கூடும். ஒன்று, அந்நியபாஷையில் பேச ஒரு ஆத்துமாவை ஆசீர்வதிப்பதாகும்; மற்றொன்று, தீர்க்கதரிசனம் உரைத்தல், அந்த நபர் கூறுவதை அதை வியாக்கியானம் செய்வதாக அல்ல ஆனால் அவர் உரைத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்து அவர் தீர்க்கதரிசனம் உரைக்கும் அதே நேரத்தில் இவர் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார். அது வியாக்கியானம் என்று இவர் எண்ணினார், என்ன வித்தியாசத்தை அது உண்டு பண்ணினது? அது தேவனுடைய ஆவியானவர் சபைக்கு ஒரு செய்தியை அளிப்பதாகும். ஆனால் வியாக்கியானம் என்பது, ஆங்கிலத்தில் அது புரிந்து கொள்ளப்பட்டு, சரியாக அந்த நபர் என்ன கூறினாரோ அதை மறுபடியுமாக மீண்டும் கூறுதலாகும். அது தான் வியாக்கியானம் பண்ணுகின்ற வரமாகும். 58கேள்வி: “ஒரு கூட்டத்தில் அந்நியபாஷையில் ஏற்கெனவே மூன்று செய்திகள் புறப்பட்டு வந்துவிட்ட பிறகு, பிறகு ஜெப வரிசையிலும் இன்னுமாக செய்திகள் இருக்கலாமா, மேலும் கூட்டமானது ஆவிக்குரிய ஒழுங்கில் இன்னுமாக இருக்குமா?” ஏன், நிச்சயமாக. அது சரியே. நிச்சயமாக நீங்கள் எதை நோக்குகிறீர்கள் என்பதை நானறிவேன். அதோ பவுல் கூறுகிறான் அவையெல்லாம்... ''நீங்கள் தீர்க்கதரிசனம் உரைத்து அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள்“ என்பதைப் போல், பவுல் கூறுகிறான்... சிறிது நேரம் கழித்து, நீங்களெல்லாரும் சகோதரன் நெவில், இப்பொழுது நீங்களெல்லாரும் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள், இந்த மக்கள் எல்லாரும் இந்த ஆவிக்குரிய வரங்களை உடையவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது என்னுடைய வேத வசனத்தின் புரிந்து கொள்ளுதலில் நீங்கள் முழு மனதான நம்பிக்கை வைப்பீர்களானால், இந்த வரங்களையுடைய மக்களாகிய உங்களோடு மாத்திரமே நானும் வந்து நாமெல்லாரும் ஒன்று கூடி... நீங்கள் எப்படி... நீங்கள் கவனியுங்கள், சகோதரன் நெவில் மற்றும் சபையில், பாருங்கள், அது தேவனாகும், தேவன் அவர்கள் மத்தியில் அசைவாடுகிறார், அது தான் நமக்கு தேவைபடுகிறது, ஆனால் அதை நாங்கள் ஒழுங்கில் வைக்கவே விரும்புகிறோம் அதினால் அது சபைக்கு ஆசீர்வாதமாக அமைந்து காரியங்களைச் செய்யும். நான்... தேவனால்... வேத வசனங்களை அறிவேன், என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவேன். அதைத் தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். 59இப்பொழுது, இங்கேயிருக்கும் இந்த நபர், இவர் அந்நிய பாஷையில் பேசுகிறவர் என்பது எனக்கு தெரியும், அது இரண்டு வல்லமைகளால் உந்தப்படுகின்றன, மூன்றுக்கு மேற்பட்டவைகளாக இருக்காது. அது சரியானது. ஆனால் இங்கு நீங்கள் கவனிப்பீர்களனால், அது... அங்கே ஒருவர் அளிப்பது போல... சகோதரன் சாத்மேன் எழுந்து தீர்க்கதரிசன செய்தியை அளிப்பது அல்லது அந்நிய பாஷையில் பேசுவது போல. அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்வது தீர்க்கதரிசனமே, பாருங்கள், தீர்க்கதரிசனத்தின் ஆவி. இப்பொழுது, வியாக்கியானிப்பவர் இல்லாதிருக்கையில், நீங்கள் அந்நிய பாஷையில் மாத்திரம் பேசிக் கொண்டிருந்தால், அந்த நபர் ஆவியினாலே ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார், ஆனால் அவர் சபையை புண்படுத்துவதில்லை. இப்பொழுது பவுல் இதைக் கூறத்தான் முயன்று கொண்டிருந்தான், “நீங்கள் ஆராதனை முழுவதையும் அந்நிய பாஷை பேசுவதிலேயே உபயோகிக்கிறீர்கள், பாருங்கள், அப்பொழுது கல்லாதவர்கள் இது என்ன, எதைக் குறித்ததாயிருக்கிறது? என்பார்கள். பாருங்கள், அவர்கள் அதை பெற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அங்கே ஒரு வியாக்கியானம் இருக்க வேண்டும், அங்கே இருக்கவேண்டும். ஆகவே... ஒரு கூட்டத்தில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று செய்திகள் மாத்திரமே இருக்கட்டும். 60இப்பொழுது, இங்கே அந்த நபர் ''பிறகு ஜெப வரிசையிலும்?'' என்று கேட்கிறார். அது ஒருக்கால் ஜெப வரிசையில் யாராவது ஒருவராக இருக்கலாம்.... ஒருக்கால் சகோதரன் நெவில், அல்லது வேறொரு சபையில் அல்லது எங்கிருந்து வந்ததாயிருந்தாலும் சரி, ஜெப வரிசையில் இந்த மனிதன்... அல்லது தெய்வீக சுகமளித்தல் கூட்டங்களில், சகோதரன் ராபர்ட்ஸின் கூட்டத்தில் இருந்திருக்கலாம், சகோதரன் ஆலன் அவர்களுடைய கூட்டத்தில் அல்லது ஏதோ ஒன்றில், என்னுடைய கூட்டத்தில் அல்லது யாரோ ஒருவருடையதில், எனக்குத் தெரியாது. ஆனால், அது என்னவாயிருந்தாலும் சரி, அங்கே சபையில் ஒரு தீர்க்கதரிசன செய்தியைக் குறித்து பவுல், ''மூன்று பேர் மாத்திரம் பேசலாம்'' என்று பேசுகிறான், ஏனெனில் தேவனுடைய செய்தியானது ஒரு செய்தியைப் பேசி அதை சபையாருக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஜெப வரிசையில் இருக்கையில் அவன் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைக்கின்றான், முழு சபைக்கு அல்ல. அப்படியாக இருக்குமானால், பாருங்கள், ஒரே இரவில் அவர்களில் முப்பது அல்லது நாற்பது பேர்கள் இருக்கையில் என்னுடைய எல்லா ஜெப வரிசைகளிலும் எப்படி என்னால் அதை தவிர்க்க முடியும். பாருங்கள், நீங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கையில். ஆனால் இந்த மனிதன் முழு சாரத்துக்கும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், அது இரண்டு அல்லது மூன்று செய்திகளாக இருந்து பிறகு நிறுத்தப்பட வேண்டும். பரிசுத்த ஆவி இன்னுமாக பேச விரும்புவார், ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள், வார்த்தை புறப்பட்டுச் செல்ல தருணம் கொடுங்கள். நீங்கள் பாருங்கள்? மேலும் உண்மையாகவே, அந்த உரைத்தலானது ஒன்று வார்த்தை கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ தான் இருக்க வேண்டும், வார்த்தையானது புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துவிட்ட பிறகு எதுவும் அதற்கு இடையூறு செய்யக் கூடாது. ஆனாலும், ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்திற்குள்ளாக செல்ல ஆரம்பிக்கையில் பிறகு அதை நாம் ஒழுங்கிற்குள் அமைத்துவிடலாம். நாம் இப்பொழுது பெந்தெகொஸ்தே சபையின் முக்கியத்துவத்தின் பேரில் பேசிக் கொண்டிருக்கிறோம், நான் உண்மையான பெந்தெகொஸ்தே சபையையே குறிப்பிடுகிறேன். தேவன் இன்னுமாக ஜீவித்து, அரசாட்சி செய்து, நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். 61இப்பொழுது, உதாரணத்திற்கு, இங்கிருக்கும் சகோதரி நமக்கு அந்நிய பாஷை அல்லது தீர்க்கதரிசனத்திலோ ஒரு செய்தியை அளித்து மற்றும் இவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணி அல்லது பின்புறத்தில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்க்கதரிசனமாகவோ அல்லது அந்நிய பாஷையில் ஒரு செய்தியை அளிப்பார்கள். அவர்கள் ஏறக்குறைய அதே காரியத்தின் பேரில் தான் பேசியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை - அது தேவன் துரிதமாக ஏதோ ஒன்றை அளிக்க முயற்சி செய்தல், சபையில் சில தனிப்பட்ட நபர்கள் ஒன்றை செய்ய வேண்டும் என்று அழைத்தல், அல்லது செய்யப்பட வேண்டுமென்று அவர் விரும்புகின்ற ஒன்றைக் கூறுதல். இப்பொழுது, உதாரணத்திற்காக, ஜெபவரிசை அழைக்கப்பட்டு, சகோதரன் நெவில் அல்லது நான் அல்லது யாராவது ஒரு போதகர் இந்த தனிப்பட்ட நபரிடம் செல்லும்போது, சரீரத்திற்கு அல்ல, அது அந்த தனிப்பட்ட நபருக்கு ஆகும். இந்த தனிப்பட்ட நபரிடம் ஏதோ ஒன்றைக் கூற தேவனுடைய ஆவி அவர் மீது வருகிறது, அப்பொழுது அந்த நபரிடம் கூறுகிறது, ஏனெனில் அவர் சபையோரிடம் பேசவில்லை. அவர் இந்த தனிப்பட்ட நபரிடம் பேசுகிறார், சபையோருக்கல்ல, ஆகவே அதனால் பரவாயில்லை. 62கேள்வி: சரி, “அருமையான சகோதரன் பிரன்ஹாம், கர்த்தர் எனக்கு சொப்பனங்களில் காரியங்களை அநேகமுறை காண்பிக்கின்றார். கடற்படையில் பணிபுரியும் என் மகன் தெரிவிக்கப்படக் கூடாத இரகசியங்கள் (Secrets) என்று கூறுகின்ற காரியங்களை தேவன் எனக்கு காண்பித்தார். மக்களுடைய மரணத்தைக் குறித்தும், மக்களுடைய இருதயங்களின் இரகசியங்களையும் எனக்கு காண்பிக்கின்றார். இது தேவன் எனக்களித்த வரமா? மக்களுடைய இருதயங்களையும் சிந்தனைகளையும் தேவன் எனக்கு காண்பிக்கும் போது, சொப்பனத்தில் கண்ட விதமாகவே எல்லா காரியமும் எப்பொழுதுமே நடந்தேறுகிறது”. ஏன், ஆம், என் சகோதரன் அல்லது சகோதரி, அது யாராயிருந்தாலும் சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய கருத்தின்படி, அந்த காரியமானது அது தேவனுடைய வரம் ஆகும். அது தேவனுடைய வரமாகும். சொப்பனங்களைக் குறித்து வேதாகமம் கூறுவது உங்களுக்கு தெரியுமல்லவா? யோசேப்பு, எப்படி அவன் சொப்பனங்கள் கண்டு அதன் அர்த்தத்தையும் கூறினான், மற்றவர்கள் எப்படி சொப்பனங்கள் கண்டார்கள். அந்த காரியங்கள் தேவனாலுண்டானவைகள். இப்பொழுது, அது தேவனுடையதாயிருந்தால், அது எப்பொழுதுமே உண்மையுள்ளதாக இருக்கும், அவர் கூறின விதமாகவே சரியாக எப்பொழுதும் அப்படியே அது சம்பவிக்கும். 63மேலும் இப்பொழுது வேண்டாம்... நீங்கள் அதை காட்சி பொருளாக வெளிகாட்ட ஆரம்பிப்பீர்களானால், அது உங்களை விட்டுச் சென்று விடும். பாருங்கள், பயபக்தியுடனும் இனிமையாகவும் மாத்திரமே இருங்கள். ஆகவே அவர் உங்களுக்கு ஒன்றைக் காண்பித்தால், அது ஒருவர் ஏதோ ஒரு தவறைச் செய்து, அந்த தவறை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியதாக அந்த சொப்பனம் இருக்குமானால், நீங்கள் நேராகச் சென்று அந்த நபரைக் கடிந்து கொள்ளக் கூடாது நீங்கள் அவர்களிடம் சென்று “சகோதரியே, சகோதரனே, உங்களுக்கு தெரியுமா, நீங்கள் தவறான ஒன்றை, ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்த இரவு கர்த்தர் என்னிடம் கூறினார் என்று கூறுங்கள்”. அந்த நபர், ''நீங்கள் கூறுவது தவறு. அது பொய்! நான் அவ்வாறு செய்யவில்லை!'' என்று கூறுவாரானால். இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில் நீங்கள் திரும்பிச் சென்று “பரலோகப் பிதாவே, அது தவறான ஒன்றா?'' என்று கேளுங்கள். இப்பொழுது, அந்த நபர்... அந்த நபர் உங்களுக்கு கூறினது உண்மையாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் தவறான ஆவியைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த நபர் நீங்கள் சொல்கின்ற காரியத்தை செய்திருந்து, இல்லை என்று பொய் சொன்னால், தேவன் அந்த நபரைப் பார்த்துக் கொள்வார். புரிகின்றதா? ஆம் ஐயா. ஏனெனில், பாருங்கள், அந்த நபர் செய்திருப்பது என்னவென்றால், அவர் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணம் செய்துள்ளார், பரிசுத்த ஆவி அந்த நபருக்கு சொல்லத் தக்கதாக கூறியிருப்பதை மறுதலிக்கின்றார். புரிகின்றதா, ஆகவே அது தவறான ஒரு காரியமாகும். 64கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், எப்படி ஒரு சபையால் நடனமாடி, சத்தமிட்டு அந்நிய பாஷையில் பேசி, ஆவியில் நிரம்பி (நாம் பார்ப்போம், இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்)... மூழ்க முடிகிறது ஆனால் அதில் எப்பொழுதாவது ஒரு முறை தான் மிக அபூர்வமாக வேத வசனம் வாசிக்கப்படுகிறது, அது எப்படி. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கும் கூட இதைப் புரிந்துக் கொள்ள இயலவில்லை; பாருங்கள், ''சத்தமிடுவது, நடனமாடுவது, அந்நிய பாஷையில் பேசுவது, ஆனால் வேத வசனங்களே வாசிக்கப்படுவதில்லை“ நான் - நான் - நான் வில்லியம் பிரன்ஹாம், இதைக் கூறுகிறேன், நினைவில் கொள்ளுங்கள், இது ஒருக்கால் இலட்சக்கணக்கான மைல் அளவிற்கு தவறாக இருக்கக்கூடும். நான் நம்புகிறேன் அநேக மக்கள். அதைப் போன்ற ஒரு ஒழுங்கைக் குறித்து இன்று ஒரு சகோதரனால் அந்த கேள்வி என்னிடமாக கேட்கப்பட்டது. அதாவது, அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும்போது, ஒருக்கால் ஒரு சகோதரன் ஒருவருக்கு ஜெபிப்பார், அப்பொழுது அவர் அவர்கள் எல்லாரையும் ஆவியில் நடனமாட அல்லது பாடும்படி செய்வார், ஜனங்கள் மத்தியில் அது வல்லமையைக் கொண்டு வரும் என்று எண்ணி அவ்விதமாகச் செய்வார். இல்லை, என்னைப் பொறுத்த வரையில் நான் அது தவறான ஒன்று என்று விசுவாசிக்கிறேன். 65ஒரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு வருகின்ற ஒரு நபர் இரட்சிப்பிற்கென வருவது போல, பயபக்தியுடன், விசுவாசித்து வருகிறார் என நான் நம்புகிறேன். அதில் இருக்கின்ற ஒவ்வொரு நபரும், சத்தமிட்டு கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் தங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ தேவனுடைய இரக்கத்தை கேட்க அங்கே மேலே செல்வதைக் காண்கையில், அவர்கள் தலையைத் தாழ்த்தி தேவனே, என் சகோதரனை அபிஷேகித்து அவருக்காக மேய்ப்பர் ஜெபத்தை ஏறெடுக்கையில் சகோதரனை ஆசீர்வதியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அவர் மீது வந்து தன்னுடைய சுகத்திற்காக அவருக்கு விசுவாசத்தை அளிக்கட்டும். அவர் விலையேபெற்ற ஒரு சகோதரனாவார். அவள் ஒரு விலையேறப்பெற்ற சகோதரியாவாள்'' என்று ஜெபிப்பார்கள். பாடல்கள் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவதற்கு பதிலாக அவருக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். ஆனால் நம்முடைய பெந்தெகோஸ்தே கூட்டங்களில் அந்தக் காரியங்கள் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம், அது தொடர்ச்சியாக... அது ஒரு ஆராதனை என்று நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் தேவனை ஆராதிக்கிறார்கள் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. என் முழு இருதயத்தோடு நான் அதை விசுவாசிக்கிறேன். அந்நிய பாஷை பேசுதல், சத்தமிடுதல் மற்றும் நடனமாடுதலில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன். அதின் ஒவ்வொரு பாகத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆம். வேதாகமத்தில் அவர்கள் செய்த எந்த ஒரு காரியமும், அப்பொழுது இருந்தது போலவே இன்றும் சரியானதாகவே உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால் அதற்கு அதன் நேரமும், அதன் ஒழுங்கும் உள்ளது என நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அந்த மகத்தான ஆசீர்வாதம் வந்திருக்கிறது, மக்களும் சத்தமிட்டு, கர்த்தருடைய மகிமையும் விழுகின்றது, மக்கள் கூச்சலிடவும், சத்தம் போடவும், ஆவியானவர் அவர்கள் என்னவெல்லாம் செய்யும்படிக்குச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யவும் விரும்புகின்றனர். தொடர்ந்து செய்யுங்கள், அது சரியே. ஆனால் ஒரு மனிதன் சுகமாக்கப்பட வரும் போது, மரணம் மற்றும் ஜீவனை குறித்த ஒரு கேள்வியானது சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கையில், நான் விசுவாசிப்பது என்ன என்றால் நாம் பயபக்தியுடன் இருந்து பிதாவிடம் பேச வேண்டும். இந்த சகோதரனுக்காக நாம் அவரிடம் பேச வேண்டும். அவரை தொழுது கொள்வதற்கு பதிலாக, அவரிடம் ''பிதாவே, நான் உம்மைத் தொழுது கொள்கின்ற ஒருவனாவேன். நான் உம்மை நேசிக்கிறேன், நான் அவ்வாறு உள்ளேன் என்பதை நீர் அறிவீர், நான் என் அன்பை உம்மிடம் வெளிப்படுத்துகிறேன். இப்பொழுது என் விசுவாசத்தை நான் உம்மிடம் வெளிப்படுத்துகிறேன், என் சகோதரன் நலமாக இருக்கும்படிக்கு உதவி செய்யும், பிதா அவ்விதமாக செய்வீரா?'' என்று கேளுங்கள். நீங்கள் அந்த விதமாக செய்கையில் உங்களுக்கு நல்ல பலன்கள் - கிடைக்கும் என நான் நம்புகிறேன். உண்மையாகவே நானும் அதைச் செய்கிறேன். பயபக்தியுடன், தேவ ஆவியுடன். 66என்னே, இவை நூறு மைல் நீளத்திற்கு இருந்திருக்கலாம். ஆனால் இவைகளுக்கு நான் பதிலளித்தேன் என நம்புகிறேன், வெளிச்சத்தை சிறிது காண்பித்தேன். எப்படியாயினும், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன் - சிறிது நேரம் கழித்து இங்கே மேய்ப்பரிடம் கேட்க விரும்புகிறேன், எனக்கு உதவிசெய்ய... ஒருக்கால் கீழே வந்து, வரங்களின் உருவில் தேவனுடைய ஆவியை தங்கள் மேல் பெற்றுள்ள மக்கள் எல்லாரையும் ஒன்று கூடச் செய்து, சிறிது நேரம் அதைக் குறித்து நாம் பேசலாம். ஒருக்கால் நீங்கள் ஏணியில் சிறிது உயரமாக ஏறி தேவனண்டையில் இன்னும் நெருங்கிச் செல்ல என்னால் உதவி செய்ய முடியும், அதனால்... சபையில் அதை அதிகமாக ஒழுங்கிற்குள் அமைக்கலாம். நான் கவனித்துக் கொண்டே வருகிறேன், எனக்கு அது மிகவும் அற்புதமாகக் காணப்படுகிறது. அது இன்னுமாக மேலும், மேலுமாக முன்னே செல்வதை காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே நாம் வளர்ந்து வருகையில், சாத்தான் உள்ளே பதுங்கி ஊர்ந்து வர அனுமதிக்காதீர்கள். பையனே, அவன் திறமைசாலியாவான். அவனை சாதுரியமாக தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள், ஏனெனில் உங்களால் அது முடியாது. நீங்கள் தேவனை மாத்திரம் சார்ந்திருந்து தாழ்மையுடன் நடந்து கொண்டேயிருக்க மாத்திரம் செய்யுங்கள், அப்பொழுது தேவன் அதைச் செய்வார், தேவன் உங்களை இன்னும் அதிகமாக, அதிகமாக, அதிகமாக உபயோகிப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 67இருபது நிமிட பேச்சுக்கு நமக்கு நேரம் உள்ளதா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. பென், என்னை ஊக்குவிக்க இது போதுமான தாயுள்ளதென்று நான் யூகிக்கிறேன். சரி. நாம் சற்று சங்கீதத்திற்கு திருப்புவோமாக இன்றிரவு உங்களெல்லாருக்கும் ஒரு பிரசங்கத்தைப் போல நான் பேசத் தக்கதாக ஒரு சிறு சிந்தனையை கர்த்தர் எனக்கு அளித்தது போல் உள்ளது, உங்களால் கூடுமானால் ஒரு சில நிமிடங்களுக்கு... இங்கு உஷ்ணமாக இருக்கிறது என்பதை நானறிவேன், இங்கே மேலே கூட உஷ்ணமாக உள்ளது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள், புதன்கிழமை இரவு வரை நாம் திரும்பவுமாக சந்திக்கப் போவதில்லை. ஆகவே நாம் காத்திருந்து இந்த அருமையான பழைய பாடலாகிய “நம்மை இணைக்கும் பிணைப்பு ஸ்தோத்தரிக்கப்படுவதாக'' பாடும் முன்னர் - எழுதப்பட்ட வார்த்தையைக் குறித்து நாம் பேசுவோம். இந்த கேள்விகள் மூடிய பாத்திரத்தில் வைக்கப்பட்டது போல நம்மைச் செய்துவிடுகிறது. இப்பொழுது நாம் அதை விட்டு வெளியே வந்து, வார்த்தையை பேசுவோம். இப்பொழுது நாம் சற்று மறுபடியுமாக நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 68பரலோகப் பிதாவே, இந்த கேள்விகள், மக்கள் தங்கள் இருதயங்களில் என்ன வைத்துள்ளனர் என்பதை கண்டு கொள்ள நான் முயற்சித்து இதை குறித்து அதைக் குறித்து அவர்கள் கேட்பார்கள் என்று பார்க்கிறேன். கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். அவர்கள் ஆவிக்குரிய வரங்களை வாஞ்சிப்பதை என்னால் காண முடிகின்றது. ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுள்ளவர்கள் அதை எப்படி ஒழுங்கிற்கு நடத்துவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு, அது சபையின் மீது அந்த மகத்தான வெளிச்சத்தை போடும்படிக்கு இருக்கிறது; மற்றவர்களுக்கோ அது ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்பொழுது, கர்த்தாவே, எங்களுக்கு எங்களுக்கு உதவிசெய்யும், கர்த்தாவே. நாங்கள் உம்முடைய பிள்ளைகள். எங்களை நாங்கள் கனப்படுத்திக் கொள்ள இந்த காரியங்களை நாங்கள் செய்வதில்லை, தேவன் எங்களுக்கு அளித்துள்ள ஒரு வாரத்தினாலே இதை நாங்கள் தேவனுடைய கனத்திற்கென்று செய்கிறோம். பிதாவே, நீர் தாமே இந்த வரங்களை ஆசீர்வதித்து அவைகளை சபையிலே பிரத்தியட்சமாக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். அதனாலே யாத்திரீகர்களும், வெளியாட்களும், வந்து அந்த கதவண்டை நின்று உள்ளே வந்து சில நிமிடங்களுக்கு உட்காரும் போது, அந்த கதவினூடாக உள்ளே பிரவேசிக்கின்றவர்களுடைய ஒவ்வொரு இருதயத்தின் இரகசியத்தையும் தேவ ஆவியானவர் வெளிப்படுத்தி மிக மகத்துவமானவராக இருப்பாராக. கர்த்தாவே, இதை அருளும். அது தாமே இனிமையோடும், தாழ்மையுடனும் இருந்து, ஒருபோதும் கடுமையாகவும் கடிந்து கொண்டு, கிழித்தெரியாமல் இருப்பதாக. தேவனுடைய ஆவியானவர் அவ்விதம் இருப்பதில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே எல்லா காரியத்திலும் நீர் தாமே எங்களை ஆசீர்வதிக்கும் படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் சபையை ஆசீர்வதியும், எங்கள் சபை மக்களை ஆசீர்வதியும் - மற்ற சபைகளைச் சேர்ந்த மக்களை ஆசீர்வதியும். மேலும், பிதாவே, ஒரேயொரு சபை மாத்திரமே உண்டென்றும் நாங்கள் எல்லாரும் அதற்குள்ளாகப் பிறந்திருக்கிறோம் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும், பிதாவே, இன்று மதியம் எழுதும் மேசையருகே நான் உட்கார்ந்திருக்கையில் நீர் எனக்கு அளித்ததாக காணப்படுகின்ற இந்த சிறு வாசகத்தை நான் வாசிக்கையில் நீர் தாமே எங்களை இன்னுமாக ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இங்கே மக்களை நீண்ட நேரம் உட்கார வைக்காமல், சில காரியங்களை மாத்திரம் நான் பேசும்படிக்கு எனக்கு உதவி செய்யும். அதில் நீர் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். எங்களுக்கு ஒரு பொருளைத் தாரும், நாங்கள் அதனுடன் வீட்டிற்குச் செல்ல ஏதுவாக இருக்கும், கர்த்தருக்கு அவருடைய நன்மைக்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 69இப்பொழுது, மறக்காதீர்கள், அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்கு சித்தமானால். இப்பொழுது சங்கீதம் 106-அதிகாரம், 7 ஆம் வசனத்திற்கு நாம் திருப்புவோம். இங்கே கீழே ஒரு பாகத்தை நான் வாசிக்க போகின்றேன்... சங்கீதத்தின் இந்தப் பகுதியை. ஆனால், அது தாவீதாகும். இது ஏன் எனக்கு வந்ததென்றால், காலை கொடுக்கப்பட்ட செய்தியால் தான் இது எனக்கு வந்தது. நான் என்னுடைய கைக் கடிகாரத்தை இங்கே வைத்து, ஒன்பதரை மணிக்கு முடிக்க முயற்சிக்கிறேன். இப்பொழுது சங்கீதம் 106:7 ஆம் வசனம். எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம் பண்ணினார்கள். அடுத்த வசனத்தை நான் வாசிக்கப் போகின்றேன். ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. கர்த்தருக்கு சித்தமானால், தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்னும் தலைப்பின் பேரில் நான் உங்களுடன் பேசப் போகிறேன், தேவன், தவறாகப் புரிந்து கொள்ளுதல். இந்த விதமாக நான் கூறப் போகிறேன்: “தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல்”. 70உங்களுக்குத் தெரியுமா, தவறாகப் புரிந்து கொள்ளுதல் நம்மை அநேக பிரச்சனைகளுக்குள்ளாக கொண்டு சென்றுவிடும். அநேக சமயங்களில் மக்கள் மற்றவர் கூறினதை அப்படியே திரும்பக் கூறுகையில், அங்கே தான் அவர்கள் அவர்களை தவறாக புரிந்து கொள்கின்றனர். அது ஒரு நபரை தொல்லைக்குள்ளாகத் தள்ளிவிடும். நாம் எதைக் குறித்துப் பேசுகிறோமோ அதை புரிந்து கொள்கிறவரைக்கும் நாம் சற்று காத்திருத்தல் நமக்கு நல்லதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அப்படித் தானே நினைக்கிறீர்கள்? முதலில் நான் அது என்னவென்று கண்டுகொண்டு பிறகு அதைக் கூறுதல் எனக்கு மிகவும் நல்லதாக இருக்குமென்பதை நான் அறிவேன். பாருங்கள்? ஆனால் எப்பொழுதுமே நாம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறோம் என்பதுபோல் காணப்படுகிறோம். மேலும் இங்கே தாவீது இஸ்ரவேலைக் குறித்து பேசுகிறான், அவர்கள் எகிப்தில் இருக்கையில் அவருடைய அற்புதங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தனர். இப்பொழுது, தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது “நல்லது, அவர் என்ன கூறினார் என்பதை நான் கேட்கவில்லை'' என்று கூறிவிடுதல் அல்ல, ஆனால் ஒரு காரியம் செய்யப்படுவதைக் கண்டு, அது எதற்காக செய்யப்படுகிறது என்பதை தவறாய் புரிந்துக் கொள்ளுதல். அதுதான்... அதுதான் நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை முழுவதுமாக நழுவ விடுதல். 71இப்பொழுது, ''பார் நான் தேவன்'' என்று கூறும்படிக்காக தேவன் அற்புதங்களைச் செய்வதில்லை. ஒரு காரியத்தை புரிந்து கொள்வதற்காக தேவன் ஒரு அற்புதத்தைச் செய்கிறார். பாருங்கள்? தேவன் அதை ஒரு நோக்கத்திற்காகவே செய்கின்றார். மேலும் இங்கே சங்கீதத்தில் 7 ஆம் வசனத்தில் உள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? அது மிகவும் அழகான ஒன்று என்று நான் நினைக்கிறேன், அதை நான் மறுபடியுமாக வாசிக்க விரும்புகிறேன். எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், (பாருங்கள் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வில்லை...) உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம் பண்ணினார்கள். ஆனால் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். பாருங்கள், எகிப்தில் தேவன் ஏன் இந்த அற்புதங்களைச் செய்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் தம்முடைய கிருபைகளை அவர்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர்கள் மத்தியில் இருக்கும் தேவன் அவர் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அது எனக்கு பிடிக்கும். 72சில காலத்திற்கு முன்னர் சிக்காகோவில் நான் பிரசங்கித்த என்னுடைய சிறு பிரசங்கத்தில், இங்கே நான் பிரசங்கித்திருக்கிறேன் என்று நம்புகிறேன், பையன்கள் அதை ஒலி நாடாவில் பதிவு செய்துள்ளனர். கழுகு தன் கூட்டை கலைத்தது போல், அது தன் குஞ்சுகளின் மேல் சிறகடித்துக் கொள்கிறது போல் - எப்படி அந்த தாய்க் கழுகு தன்னுடைய சிறு குழந்தைகளை... அது குஞ்சுகளை பறப்பதற்காகக் கொண்டு செல்கிறது, அவைகளின் நிறைய சிறகுகள் தளர்ந்த நிலையில் இருக்கும். தன் தாய் கழுகு சிறப்பாக பறப்பதை அவைகள் கண்டதில்லை. ஏனெனில் அவைகளெல்லாம் கூட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தன. ஆனால் அது கூட்டிற்கு மேலே எழும்பி தன்னுடைய பெரிய மகத்தான சிறகுகளை விரிக்கின்றது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அது கூக்குரலிடுகிறது, தன்னுடைய குரலை அக்குஞ்சுகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறது. தன்னுடைய பெரிய சிறகுகளை விரிக்கின்றது. சில சமயங்களில் பெண் கழுகு கழுகுகளில் பெரியவைகளாக இருக்கும். அநேக பெண் கழுகுகளுக்கு, சிறகுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனை மட்டும் பதினான்கு அடி இருக்கும் எனக் கூறப்படுகிறது, அது ஒரு கன்று குட்டியை அப்படியே தூக்கி அதனோடு மேலே பறந்து சென்றுவிடும். முனைக்கு முனை பதினான்கு அடிகள். அதன் சிறகுகள், இங்கே ஏறக்குறைய பிரசங்க மேடை அளவிற்கு அந்த கம்பத்திலிருந்து இந்த கம்பம் வரைக்கும் இருக்கும். 73இந்த சிறிய குஞ்சுக்கு முன்பாக அது எழும்புகிறது, ஏன்? ஏனெனில் அக்குஞ்சை அது பறப்பதற்கு கொண்டு செல்லப் போகின்றது. அக்குஞ்சு கூட்டை விட்டு வெளியில் சென்றதேயில்லை. அது அக்குஞ்சை மேலே வானங்களுக்கு கொண்டு சென்று பிறகு அக்குஞ்சை குலுக்கி கீழே தள்ளிவிடுகிறது, அப்பொழுது அது தன் சிறகை அடித்துக் கொண்டு எப்படி பறக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறது. அத்தாய்க் கழுகு தனக்கு இருக்கும் அதிகாரத்தை காண்பிக்க விரும்புகிறது. அது தன் பெரிய சிறகுகளை மேலும் கீழும் அசைத்து அப்படி விரிக்கின்றது, கூச்சலிடுகின்றது, பிறகு அக்குஞ்சுகளின் மீது விசிறுகிறது. ஓ, என்னே! அக்கூட்டிலிருந்து இறகுகள், மற்ற எல்லாமும் பறந்து போய் விடுகிறது, ஒரு ஜெட் விமானம் காற்றை வீசுவதைப் போன்று அத்தாய்க் கழுகு காற்றை வீசுகிறது. அக்குஞ்சை தலைக்கீழாக அடிக்கிறது, அது தன்னுடைய சிறு முதுகின் மீது படுத்துக் கொண்டு மேலே நோக்கி, “அம்மா, நீங்கள் எவ்வளவு பெரிதாயிருக்கிறீர்கள் எவ்வளவு பெரியதாக இருக்கிறீர்கள்'' என்று நினைக்கிறது. ''பார், என் செட்டைகள் எவ்வளவு பலம் கொண்டதாக உள்ளது? உன்னை நான் அப்படியே தூக்கி, எனக்கு விருப்பமான இடத்திற்கு உன்னை கொண்டுச் செல்ல என்னால் முடியும். நான் வல்லமை பொருந்திய கழுகு!'' 74அதைத் தான் தேவன் இஸ்ரவேலுக்குச் செய்து கொண்டிருந்தார். “கழுகு தன் கூட்டைக் கலைப்பது போல என்று அவர் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா, அந்த அதே காரியம் தான். அங்கே அந்த கூக்குரல் மிகுந்த தேசத்தில் அவர் இஸ்ரவேல் இருப்பதைக் கண்டு அதை எகிப்திலிருந்து அவர் வெளியே கொண்டு வந்து, அதை கழுகின் செட்டைகள் மேலே சுமந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே கொண்டு சென்றார். பாருங்கள்? மேலும் தேவன் எதற்காக அந்த அற்புதங்களைச் செய்தார்? அந்த வல்லமையான யேகோவா தாமே, என்று தம்முடைய மக்கள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்து கொண்டிருந்தார். இன்றும் அதைத்தான் அவர் செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார். தம்மால் சுகப்படுத்த முடிகிறது என்று அவர் மக்களை சுகப்படுத்துவதில்லை. அவர்தான் அந்த உயிர்த்தெழுதல் என்றும் அவர்தான் உங்களை குணமாக்க முடியுமென்றும், உங்களுடைய சரீரத்தை அவரால் எழுப்ப முடியுமென்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் முயற்சிக்கின்றார். தாம் விரும்புகிற எதை வேண்டுமானாலும் அவரால் செய்ய முடியும், அவர் யேகோவா அது எனக்கு பிடிக்கும். ஆனால் மக்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். அவிசுவாசிகளாலும் மற்றும் புரிந்து கொள்ளக் கூடாது என்றிருப்பவர்களாலும் சுலபமாக தேவனை புரிந்து கொள்ளாமல் இருக்க முடிகிறது. (அநேக மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்) அநேகர் புரிந்து கொள்ள விரும்பாமல், தங்களைத் தாங்களே அடைத்துக் கொண்டு, “அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையவே கிடையாது என்றும் அப்படிப்பட்ட ஒன்றை நான் விசுவாசிப்பது கிடையாது'' என்றும் கூறி விடுகின்றனர். அப்படியானால் அவர்களாலே புரிந்துக் கொள்ளவே முடியாது. 75ஆனால் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற, உட்கார விரும்புகின்ற ஒரு மனிதன், (வழக்காடுவோம் (reason) வாருங்கள் என்று “கர்த்தர் சொல்லுகிறார்”). இப்பொழுது, அந்த மனிதன் கர்த்தரிடமிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள சரியான பாதையில் அவன் இருக்கிறான். ஆனால் தேவனுடனும், தேவனுடைய வல்லமையுடனும் தொடர்பு கொண்டுள்ள அநேக மக்கள்... அவருடைய வல்லமையுடன் தொடர்பு கொள்ளாமல் உங்களாலே தேவனுடன் தொடர்புள்ளவர்களாக முடியாது. ஏனெனில் நீங்கள் தேவனுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கையில் நீங்கள் அவருடன் நெருங்கிய பழக்கமுள்ளவர்களாக அல்லது அவருக்கு நீங்கள் ஒரு உறவினராக இருக்கிறீர்கள். அப்பொழுது அவருடைய வல்லமையை உங்களுக்குள் கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அதன் காரணமாகத்தான் இன்றைக்கு மக்களால் அற்புதங்களை விசுவாசிக்க முடியவில்லை, அதன் காரணம் என்னவெனில் விசுவாசிக்கும்படிக்கு அவர்களுக்குள்ளே எதுவுமே இல்லாதிருக்கின்றனர். விசுவாசிக்கத்தக்கதாக ஏதாவதொன்றை அவர்களுடைய இருதயத்தில் மக்கள் கொண்டிருக்க வேண்டும். ஆகவே தேவனுடைய ஆவி ஒரு மனிதனுக்குள் இருக்குமானால், அவன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும், தேவனுடைய ஒவ்வொரு அற்புதத்திற்கும் “ஆமென்” என்று கூறுவான். “ஒரு சிகப்பு முள்ளங்கியிலிருந்து இரத்தத்தை உன்னால் எடுக்க முடியாது. ஏனெனில் அதில் இரத்தமே கிடையாது'' என்று என் தாயார் கூறுவது வழக்கம். ஆகவே அதேவிதமாகத்தான், ஒரு அவிசுவாசியிடமிருந்து விசுவாசத்தை உங்களாலே வெளியே எடுக்கவே முடியாது, ஏனெனில் விசுவாசிக்கத் தக்கதாக அவர்களுக்குள் ஒன்றுமே இல்லாதிருக்கிறது. 76ஒரு மனிதன், ''நீர் என்ன கூறினாலும் சரி, தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கமாட்டேன்'' என்று கூறினார். நிச்சயமாக அது அவருக்கல்ல, அது விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் தான். நீங்கள் இரத்தம் எடுக்க வேண்டுமென்றிருந்தால், இரத்தம் இருக்கின்ற ஒன்றிலிருந்தே நீங்கள் எடுங்கள். நீங்கள் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், விசுவாசத்தை உடையதாக இருக்கின்ற ஒன்றிலிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த விதமாகத்தான் - விசுவாசத்தை தனக்குள்ளாகக் கொண்டிருக்கிற ஒன்றைத் தான் தேவன் உபயோகிக்கின்றார். சுகமளித்தலை விசுவாசிக்க போதுமான விசுவாசத்தை நீ கொண்டிருக்காவிட்டால் தேவன் உன்னை சுகமளித்தல் கூட்டத் துக்கு அனுப்பமாட்டார். அதை விசுவாசிக்க உனக்கு போதுமான விசுவாசம் இல்லாதிருக்கையில் எப்படி அவரால் உன்னை ஒரு அற்புதம் நிகழும் எழுப்புதல் கூட்டத்துக்கு அனுப்ப முடியும்? அவர் எதைக் கொண்டுக் கிரியை செய்கிறாரோ அதைப் பெற்றுள்ள ஒருவரையே அவர் விரும்புகிறார். ஆகவே ஜனங்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். 77நோவா தன்னுடைய நாளில் மிகவுமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். நோவா, தேவனுடன் நெருங்கிய பழக்கம் உடையவன், தேவனுடைய ஊழியக்காரன், தேவனை விசுவாசிப்பவன். ஆகவே நீ தேவனை விசுவாசிக்கும் ஒருவனாக ஆகும் போது, மக்கள் சரியான ஒன்று என்று நினைப்பதற்கு முரணாக காரியங்களை நீ செய்து நீ பைத்தியம் பிடித்தவன் என்று அவர்கள் நினைக்கும்படிக்கு ஆகிவிடுவாய். தேவனாலே எச்சரிக்கப்பட்ட நோவா, தன்னுடைய வீட்டாரை காப்பாற்ற ஒரு பேழையை ஆயத்தம் பண்ணினான். மக்கள் அவனை பைத்தியம் பிடித்தவன் என்று நினைத்தார்கள். அவன் பைத்தியம் பிடித்தவன் அல்ல, அவன் தேவனுடைய கட்டளையை பின்பற்றினதால் தான் அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஆமென்! எனக்கு அது பிடிக்கும். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். “எப்படி ஒரு மனிதனால்...'', ”வானத்திலிருந்து மழை என்பது வந்ததே கிடையாது. மழை என்றால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். மழை பெய்யவே இல்லை, தேவன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார்'', “நோவா, அந்த மழையானது எங்கே இருக்கிறது?'' ''எனக்குத் தெரியாது''. ''அது எங்கேயுள்ளது என்று எனக்கு காண்பி“. “என்னால் அதை உனக்கு காண்பிக்க முடியாது'' “நல்லது, மேலேயிருந்து கீழே வருவதற்கு ஒன்றுமே அங்கே இல்லாதிருக்கையில், அது மேலேயிருந்து கீழே விழப்போகிறதென்று உனக்கு எப்படி தெரியும்?'' நோவா இவ்விதமாக கூறியிருப்பான், ''அது கீழே வரப் போகிறதென்று தேவன் என்னிடம் கூறினார்“. அது கீழேவரப் போகிறதென்று தேவன் கூறியிருப்பாரானால், அவராலே அதை மேலே கொண்டுச் சென்று பிறகு அதை கீழே கொண்டு வர முடியும். ஆமென். அது அதை முற்றுப்பெறச் செய்துவிட்டது. தேவன்அதை கூறியிருப்பாரானால், அதுதான் அதன் முடிவு. பாருங்கள்? அவன் தேவனைப் பின்பற்றினதால் அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். 78எலியா. (இந்த பொருள்களின் மீது நீண்ட நேரம் என்னால் பிரசங்கிக்க முடியும் ஆனால் அதைப் போன்று அநேக காரியங்களை நான் இங்கே வைத்துள்ளேன். ஆகவே நான் சீக்கிரமாக கடந்து செல்கிறேன்). எலியா தன்னுடைய தேசத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். எலியா ஒரு இஸ்ரவேலனாயிருந்தான், அவன் ஒரு யூதனாக இருந்தான், அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஏனெனில் அவன் எப்போதுமே தன்னுடைய தேசத்தை கடிந்து கொண்டான், இராஜாவை கடிந்து கொண்டான் இராணியை கடிந்து கொண்டான், அவனை சுற்றியுள்ள அனைத்தையும் கடிந்து கொண்டான். மேலும் அவர்களை கடிந்து கொண்டால் அவன் எப்படிப்பட்ட ஒரு பைத்தியமாகக் காணப்பட்டிருப்பான். ஏன், என்னே, எல்லாமே ''கர்த்தர் உரைக்கிறதாவது“. யேசபேலே, இன்னார் - இன்னார் அவர்களே, தேவன் உங்களை தண்டிக்கப் போகிறார்'' என்று வந்தது. அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஏன்? அவன் தேவனைப் பின்பற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் எலியாவை தவறாகப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் எலியாவிற்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் செயல்களைத் தானே தவறாகப் புரிந்து கொண்டனர். 79எப்படி ஒரு மனிதனால் தன்னுடைய சொந்த தேசத்திற்கு விரோதமாக எழும்ப முடியும்? தன்னுடைய சொந்த தேசத்தை தூஷித்தான், திருத்தினான், தேவனுடைய சாபங்களை அதன் மீது வைத்தான், அவன் வாழ்ந்து கொண்டிருந்த அதே தேசம், அதே மக்கள். தன்னுடைய சொந்த இனம், தன்னுடைய சொந்த நிறம், தன்னுடைய சொந்த கோட்பாடு, தன்னுடைய சொந்த மக்கள், ஆனாலும் இன்னுமாக தேவனுடைய நியாயத் தீர்ப்புகளை முன்னுரைத்து அவர்கள் மீது பஞ்சத்தை வருவித்தான். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான், ஏனெனில் அது எலியா அல்ல, அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டது எலியாவுக்குள் இருந்த தேவனையே. எலியா தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, அது எலியாவை வழி நடத்திக் கொண்டிருந்த தேவன், ஆகவே பரிசுத்த தேவனையே அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர், அவரால் பாவத்தை சகிக்க முடியாது. அது உங்கள் சகோதரன், சகோதரி அல்லது தாயின் மீது இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது யாராயிருந்தாலும் சரி, தேவனுடைய பார்வையில் அது பாவமே, அதற்காக நியாயத் தீர்ப்பானது அவர்கள் மீது வரும். தவறாகப் புரிந்து கொள்ளுதல். 80இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அந்த சிலையை தாழ விழுந்து பணிந்து கொண்டிருக்கையில் தானியேல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான், அவனும் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவும் தாழ விழுந்துதொழுது கொள்ள மறுத்தனர். நல்லது அவர்களோ, “அவனுக்கு என்ன ஆயிற்று?'' என்றனர். முழுதேசமும், இந்த பைத்தியக்காரனுக்கு என்ன ஆயிற்று? பார், மற்ற எல்லா எபிரெயரும் நம்முடைய தேவனை அங்கிகரித்துவிட்டனர், அவர்கள் அதை அங்கிகரித்துவிட்டனர், நாம் எக்காளங்களை ஊதுகையில் எக்காளங்களின் சத்தம், சுரமண் டலங்கள் வாசிக்கப்படுகையில், நாதஸ்சுரம் சத்தம் கேட்கையில் அவர்கள் தாழ விழுகின்றனர். அவர்கள் எல்லாரும் தாழ விழுகின்றனர், ஆனால் இந்த மூளைக்கோளாறு பிடித்தவனுக்கு என்ன ஆயிற்று? அவனுக்கு என்ன ஆயிற்று, ”அவன் அவ்வாறு செய்யமாட்டானா?'' என்றனர். ஏனெனில் அவன் தேவனோடு தொடர்பு கொண்டிருந்தான். அதுதான் காரணம். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது பைத்தியம் பிடித்தவன், என எண்ணப்பட்டான். ''ஆம் அவர்கள் பைத்தியம் பிடித்தக் கூட்டம் ஆவர்“ ஆனால் அவர்களோ ஆவியானவருடைய வழி நடத்துதலை மட்டும் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் தவறாக எண்ணப்பட்டனர். 81பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளும், எப்படி அவர்கள் எழும்பி தங்கள் தேசத்திற்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், எப்படி அவர்கள் மக்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், எப்படி அவர்கள் காரியத்திற்கெதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், அவர்கள் மீது சாபங்களை போட்டு, அதைப் போன்ற காரியங்களைச் செய்தனர். அவர்கள் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏன்? அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாக இருந்தனர், அவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருந்தனர் , அவர்கள் தேவனுடைய சேவையை செய்து கொண்டிருந்தனர், ஆகவே தான் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். தேவனைப் பின்பற்றுகிற எந்த ஒருவரும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவர். நம்முடைய கர்த்தராகிய இயேசு, அவருடைய பிறப்பிலிருந்து, அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அந்த சாஸ்திரிகள், அவர்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற ஒரு ராஜாவை காண ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை அவர்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தானியேலின் தீர்க்கதரிசனங்களின் படி, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த ராஜா ஒரு இரட்சகராயிருப்பாரென்றும், இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரண்டு வருடங்களாக, இந்தியாவிலிருந்து புறப்பட்டு, டைக்ரீஸ் நதியைக் கடந்து, பாலைவனங்களைக் கடந்து, மலைகளின் வழியாக வந்து, எல்லா இடத்தையும் கடந்து ஒரு நாள் மாலையில் சூரியன் மறைகின்ற நேரத்தில் எருசலேம் பட்டினத்திற்குள் வந்து 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் எங்கே?'' என்று கூக்குரலிட்டனர். 82அதை குறித்து யாருமே அறியாதிருந்தனர். யூதருக்கு ராஜா பிறந்ததை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த ஜனங்கள் அதைக் குறித்து அறிந்திருந்தனர்; ஆனால் அவர் பிறந்திருந்த அதே பட்டினத்தில், அவர் பிறந்திருந்த அதே இடத்தில், அவர் எந்த மக்களுக்காகப் பிறந்தாரோ அந்த மக்கள் மத்தியில், அவர்கள் அதைக் குறித்து அறியாமல் இருந்தனர். அவர்கள் சாஸ்திரிகளை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர்கள், ''யூதருக்கு ராஜா என்னும் ஒரு காரியம் என்பது கிடையாது. எங்களுக்கு இங்கே ஏரோது ராஜா இருக்கிறார்'' என்றார்கள். அவர் பிறக்கையில், அவருடைய பிறப்பில் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். மரியாள் யோசேப்பை மணப்பதற்கு முன்பாகவே ஒரு தாயாக இருக்க வேண்டியவளாக இருந்தாள். தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல். அது பரிசுத்த விவாகத்திற்குப் புறம்பாக பிறந்த ஒன்று என்று எண்ணினர், அவளுக்குள் அந்த பிள்ளை ஆவியினால் உண்டானது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அது தேவனுடைய செயலாயிருந்தது. ஆனால் மக்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். இன்னுமாக அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர், தேவனுடைய செயலானது எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. 83ஆவிக்குரிய விசுவாசமிருக்கின்ற மக்களால் மாத்திரமே, ஆவியானவரை விசுவாசிக்கின்ற மக்கள். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, சாஸ்திரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். ஏரோதும் அதைத் தவறாகப் புரிந்து கொண்டான். ''நல்லது, குழந்தை எங்கே இருக்கிறது என்று எனக்கு சொல்லுங்கள், நானும் கூட சென்று அவரைப் பணிந்து கொள்வேன்'' என்று ஏரோது கூறினான். அவன் ஒரு மாய்மாலக்காரனாயிருந்தான், அவன் பொய் சொன்னான். அவன் பயந்தது... பரலோகத்தின் ராஜாவாகிய மேசியா வரப்போகிறார் என்கின்ற வேத வசனங்களை அவன் அறியாதிருந்தான். அது பூமிக்குரிய ராஜா என்று ஏரோது நினைத்தான், ஆகவே அவரை ஒழித்து விட வேண்டுமென்று எண்ணி அவரைக் கொன்று போட எண்ணினான். பூமிக்குரிய ராஜா அல்ல, இந்த பூமி அவருடைய ராஜ்யம் அல்ல என்று அவர் கூறினார், “இது என் ராஜ்யமாக இருந்ததானால் என் பிரஜைகள் எனக்காக போராடியிருப்பார்களே, ஆனால் என்னுடையது உன்னதத்திற்குரியது''. ஏரோதோ அதை தவறாகப் புரிந்து கொண்டு, அது ஒரு பூமிக்குரிய ராஜா என்று நினைத்தான். 84அந்த விதமாகத் தான் இன்றைக்கும் கூறுகிறார்கள், “நீ ஒரு கிறிஸ்தவனானால், நீ எந்த சபையைச் சேர்ந்தவன். எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்?'' ''எதுவுமில்லை!'' அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பாருங்கள், அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஸ்தாபனம் என்பது “கிறிஸ்தவன்'' என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை திருப்பி போட்டாலும் அதே விதமாகத்தான் உள்ளது. ஆனால் அது மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இப்பொழுது ஏரோது அதை தவறாகப் புரிந்து கொண்டான் என்று நாம் கண்டு கொண்டோம், அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிக்கொதேமு இயேசுவிடம் இரவில் வந்த போது, அந்த புதிய பிறப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவர் அவனை கடிந்து கொண்டு பேசினார். நான் அவனை கடிந்து கொண்டு பேசுவதில்லை. அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான், ஒரு காரியத்தை கண்டு கொள்ள அவன் விரும்பினான். நாள் முழுவதுமாக அவன் வேலையில் மும்முரமாக இருந்தான், ஒருக்கால் தன்னுடைய ஆசாரியனுடைய அலுவலகத்தில் அல்லது வேறெதோ ஒன்றில், இருந்திருப்பான், ஆதலால் அவன் அங்கு வந்தான், என்னவாயிருந்தாலும் அநேக மக்கள் செய்வதைக் காட்டிலும் அவன் செய்தது மிகவும் மேம்பட்டதாக இருந்தது. பகலோ அல்லது இரவோ இவர்கள் வரவேமாட்டார்கள். அவனோ முடிவில் வந்தான்; அவனை நீங்கள் குற்றப்படுத்துவதற்கு முன், நீங்கள் அதை செய்தீர்களா? முடிவாக அவன் இயேசுவிடம் வந்தான், நாம் அங்கே செல்லாதிருக்கும் பட்சத்தில் அவனை நாம் குற்றப்படுத்த வேண்டாம். மேலும் நீங்கள் அங்கே சென்றடைவீர்களென்றால், அப்பொழுது நீங்கள் அவனை கடிந்து கொண்டு பேசமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். இல்லை, அவன் - அவன் இரவு வேளையில் அங்கு சென்றான். ஒருக்கால் அவன் நாளெல்லாம் அலுவலில் மும்முரமாக இருந்திருக்கலாம், அதனாலே தான் அவன் இரவிலே வந்தான். எப்படியாயினும் அவன் வந்தான். ஒருக்கால் இயேசு வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலும் மற்ற காரியங்களிலும் மிகவும் மும்முரமாக இருந்திருப்பார். அவரை தனிப்பட்ட போட்டிக்காக பிடிக்க முடிந்த ஒரே நேரம் இரவு தான். ஆனால் அவன் இறுதியாக அங்கே அடைந்தான். ஆகவே அவரை தனிப்பட்ட பேட்டிக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அவன் அங்கேயே இருந்தான். அப்பொழுது இயேசு... அவன் - அவன், “ரபீ, நீர் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டான்'', என்று கூறினான். இயேசு, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், ராஜ்யத்தை காணக் கூடமாட்டான்” என்று கூறினார். மேலும் இஸ்ரவேலிலே இருந்த அந்த மகத்தான ரபீ, போதகன், “என்ன, நானா, ஒரு வயதான மனிதனான நான் என் தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்து மறுபடியும் பிறக்க முடியுமா?'' என்று கூறினான். பாருங்கள் இயேசு எதைக் குறித்துப் பேசினாரோ அதை அவன் தவறாகப் புரிந்து கொண்டான், அவன் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. ஏனெனில் இயேசு ஆவிக்குரிய பிறப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார், அவனோ அதை ஒரு இயற்கைப் பிறப்பிற்கு ஒப்பிட முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவரை அவன் தவறாகப் புரிந்து கொண்டான். அவர் கூறினதை அவன் புரிந்து கொள்ளவில்லை. அவன்... மக்கள் செய்யும் விதமாகவே அவனும் செய்தான். நிக்கொதேமுவைப் போல் நம்மில் அநேகர் தேவனுடைய காரியங்களை தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் நாம் அதை எடுத்து ஒரு இயற்கைக் காரியத்திற்கு பொருத்திவிடுகிறோம். 85உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர், “ஓ, தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதைப் போன்ற ஒன்று உள்ளதென்று எனக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறுகிறார். ஒரு சமயம் ஒரு மருத்துவர் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பேசியதை நான் கேட்டேன்... அவளுக்கு தெரியவில்ல... அவள் உடம்பில் இருந்த ஒரு சதை வளர்ச்சிக்கு என்ன ஆயிற்று என்று அறிய அவர் விரும்பினார். அவள், சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபித்தார். கர்த்தர் என்னை சுகமாக்கினார்'' என்று கூறினாள். அவரோ, ''நான் அதை நம்புவதில்லை'' என்றார். அவர், என்னால் - என்னால் அதைப் போன்ற ஒன்றை என்னால் விசுவாசிக்கவே முடியாது. யார் அதை எடுத்துப் போட்டது என்று என்னிடம் கூறு'' என்றார். ''தழும்பு இருக்கிறதா என்று பாருங்கள்“ என்றாள். ''அதன் மீது என்ன தடவியிருக்கிறாய்?'' என்று கேட்டார். அவள், “எதுவும் இல்லை, ஒன்றுமே தடவவில்லை, கூட்டத்தில் அவர் என்னை அழைத்ததை மாத்திரமே செய்தார், அந்த சதைவளர்ச்சி மறைந்துவிட்டது'' என்றாள். நான் சரியாக அடுத்த அறையில் அமர்ந்திருந்தேன், அது சரியே, நான் அடுத்த அறையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அங்கே இருந்தது அவளுக்குத் தெரியாது. நான் அங்கே இருந்தது அவருக்கும் தெரியாதிருந்தது, ஏனெனில் அவருக்கு என்னைத் தெரியவே தெரியாது. ஆகவே நான் அங்கே அமர்ந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் கூறினார். மருத்துவரின் அலுவலகத்துக்கு ஒருவரை அழைத்துச் சென்றேன். அது முற்றிலும் சரியே. அவர் என்ன கூறினார் என்பதை என்னால் கேட்க முடிந்தது, அவர் அதை விசுவாசிப்பதில்லை என்பதை நான் கண்டு கொண்ட உடனே நான் நோயாளியை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். ஆகவே அவர், ''அதைக் குறித்த ஒரு வார்த்தையைக் கூட நான் விசுவாசிப்பதில்லை, அதைப் போன்ற ஒன்றை செய்யக் கூடிய எதையுமே நான் இதுவரை கண்டதேயில்லை. அதை நான் விசுவாசிப்பதே இல்லை'' என்றார். மேலும் ''நான் அதை விசுவாசிக்கும் முன்னர் அதை நான் காணவேண்டும்“ என்று கூறினார். “நல்லது, என்னுடைய சதை வளர்ச்சியைக் குறித்து என்ன?'' என்று அவள் கேட்டாள். அவர், ''அதை நான் விசுவாசிக்கும் முன்னர் அது மறைவதை நான் காண வேண்டும்'' என்றார். 86பார்ப்பது என்பது விசுவாசித்தல் அல்ல. “விசுவாசமானது நீ காணாத காரியங்களின் உறுதியாயிருக்கிறது''. பாருங்கள், முதலில் நீ அதை விசுவாசிக்கிறாய், பிறகு அது சம்பவிக்கிறது. ஆகவே அந்த அந்த மனிதன் ஒரு விசுவாசி அல்ல, ஆதலால் அது அவருக்கு எல்லாமே ஒரு விளங்காத மர்மமாக இருந்தது. அவர் எதைக் குறித்து பேசுகிறார் என்பதை அவர் அறியாதிருந்தார் ஏனெனில் அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அது அவருக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. மக்கள் இன்றைக்கு, “ஓ, அந்த தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அந்த பரிசுத்த ஆவியை நான் விசுவாசிப்பதில்லை. அந்நிய பாஷையில் பேசுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதைப் போன்று சத்தமிடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதைப் போன்ற காரியங்களை நான் விசுவாசிப்பதே கிடையாது. அதில் எனக்கு விசுவாசமே கிடையாது'' என்று கூறுகின்றனர். ஏன்? அது அவர்களுக்கு புரியாத மர்மமாக உள்ளது! நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாத்திரமே செய்கிறீர்கள். அது தேவன், இங்கே அது வேதாகமத்தில் இருக்கின்றது. செயல்முறைக்கு கொண்டு வரும் என்று வேதாகமம் உரைத்த அதே காரியங்களை இங்கே அது பிறப்பிக்கிறதென்றால், அப்படியானால் அது தேவனாகத்தான் இருக்க வேண்டும். நீ அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய், அவ்வளவுதான். தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். 87அவருடைய சீஷர்கள் கூட அவருடைய அற்புதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த இரவில் அவர் படகிற்குள்ளிருந்தபோது, “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்கும் கீழ்ப்படிகிறதே'' என்று அவன் கூறினான். அவர் தேவன் என்றும் அவர் மனிதன் அல்ல என்றும் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அது தான் இன்றைக்கு மக்களிடம் இருக்கின்ற ஒரு காரியமாயிருக்கிறது, அவர்கள் அவரை ஒரு நற்பொருள் கொண்டுவரும் சின்னம் பொருந்திய ஒரு சிறு பையனாக அல்லது மரத்தாலான ஒரு மட்டையை கையில் ஏந்தியவராக செய்ய விரும்பினர். கூடாரத்தை சுற்றி இருக்கின்ற ஒரு சிறு ஆளாக அவரை காண முயன்றனர். அவர் கூடாரத்தை சுற்றி வருகின்ற ஒரு சிறு ஆள் அல்ல, அவர் யேகோவா, தேவன். அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக அவர் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தனர். அவர் அவர்களில் ஒருவராக இல்லை, அவர் அவர்கள் மத்தியில் தேவனாக இருந்தார்! அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் அதிகமானவராக இருந்தார். நான் அடிக்கடி கூறுவது போல், அவர் பசியாயிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அவர் ஒரு உலர்ந்த ரொட்டியை, இரண்டு ரொட்டிகள் மற்றும் சில மீன் துண்டுகளைக் கொண்டு ஐயாயிரம் பேர்களை போஷித்த போது தேவனாயிருந்தார். படகின் பின்புறத்தில் அவர் சோர்ந்திருந்த போது ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் அவர் காற்றையும் அலைகளையும் அமைதியாக்கி அவருக்கு கீழ்ப்படியச் செய்த போது அவர் தேவனாயிருந்தார், “இந்த மனிதன் எப்படிப்பட்டவரோ?'' அவர் மனித பாங்குடையவர் அல்ல, அவர் மனிதனில் வெளிப்பட்ட தேவனாக இருந்தார். அவர்கள் அவரை தவறாக புரிந்து கொண்டனர். அவர் ஒரு மனிதனாக, மரியாளின் மகனாக, ஒரு தச்சன் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவரோ மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக இருந்தார். ஆமென். 88ரோம் போர்ச் சேவகர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, அவருடைய கண்களைச் சுற்றிலும் துணியைக் கட்டி, அவருடைய தலையின் உச்சியில் அடித்து, “இப்பொழுது, நீ ஒரு தீர்க்கதரிசியானால், நீ ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் எல்லாரும் கூறுகின்றனர், உன் உச்சந்தலையில் யார் அடித்ததென்று சொல்லு பார்க்கலாம்'' என்று கூறினார், அவர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர். ''நான் செய்ய வேண்டும் என்று பிதா எனக்கு காண்பிப்பதை மாத்திரமே நான் செய்கிறேன். பிதா எனக்கு காண்பிக்கிறதை நான் செய்கிறேன், நான் செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுவதை நான் செய்கிறேன்'' என்று இயேசு கூறினதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டனர் 89அவர்கள் அவருடைய ஊழியத்தை தவறாக புரிந்து கொண்டனர். யூதர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் அவர்களுடைய நண்பராகவும் இரட்சகராகவும் வந்தார், ஆனால் அவர்களோ அவரை தீமையான ஒன்றிற்கு சமமாக கூறிட முனைந்தனர். அவருடைய ஊழியத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர், ''தென் தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள்'' என்று கூறினார். அவர் சாலொமோனிலும் பெரியவர் என்பதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் ஒரு மனிதன் மாத்திரமே என்று அவர்கள் எண்ணினர். அவர் பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாகக் பிறந்த ஒருவர் என்றும், இந்த விதமான கெட்ட ஆசைகளைக் கொண்டிருந்த ஒரு கீழ்த்தரமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் என்றும், ஒரு தகாத உறவினால் பிறந்த குழந்தை என்றும் அவர்களில் அநேகர் எண்ணங் கொண்டிருந்தனர். அந்த கேள்வியை நாம் வைத்திருந்தோம், அவர்களாலே... அவர்கள், “நீ பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாய்ப் பிறந்த ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும், உன் மீது பிசாசைக் கொண்டவனாக இருக்கிறாய். என்ன, நீ எங்களுக்கு போதிக்க போகின்றாயா? நாங்கள் ரபீக்கள்!'' என்று கூறினர். அவர், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்'' என்று கூறினார். பாருங்கள், அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். 90ஒரு சமயம் ரோம் போர்ச் சேவகர் அவர் பேசுவதை கேட்டு திரும்பிவந்து, ''அந்த மனுஷன் பேசுகிறது போல் ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை. ஒரு மனுஷன் இந்த விதமாக பேசி நாங்கள் கேட்டதேயில்லை'' என்று கூறினார்கள். அது ஒரு மனிதன் பேசுவது அல்ல, அது தேவனே! ஆம், ஐயா. மனிதன் இந்த விதமாக பேச முடியாது. ஒரு மனிதன் வேத வசனங்களை சொல்லி பேசுகிறான், இயேசு அந்த வேத வசனங்களை ஜீவிக்கும் படிக்குச் செய்கிறார். ஒரு மனிதன் இந்த விதமாக ஜீவிக்க முடியாது: “வேதாகமம் இங்கே இதைக் கூறுகிறது, இதோ அது!'' ஒரு மனிதனால் , ''வேதாகமம் அதைக் கூறுகிறது'' என்று மாத்திரமே கூறமுடியும், அதைத் தான் அவனாலே செய்ய முடியும். ஆனால் இயேசுவால், ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'' என்று கூற முடிந்தது. வேறு யாராலும் இந்த விதமாகக் கூற முடியாதிருந்தது! ஆமென். அல்லேலூயா அது சரி. ”என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'' யாராலுமே அதைக் கூற முடியாதிருந்தது! “அந்த சேவகர் அந்த மனுஷன் பேசுகிறது போல் ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை'' என்று கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் ஒரு பிரசங்கியைப் போல அல்லது ஒரு வேத பாரகனைப் போல பேசவில்லை, அவர் அதிகாரத்துடன் பேசுகிறார் பிசாசுகள் கூட அவருக்கு கீழ்ப்படிகின்றன, காற்றும் அலைகளும் அவருக்கு கீழ்ப்படிந்தன. அவர் ஒரு மனிதன் என்று அவர்கள் எண்ணியிருந்தனர், ஆனால் அவர் தேவனாயிருந்தார். பாருங்கள், அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். 91''என்ன, நீ - நீ தவறான உறவினால் பிறந்த ஒருவனாயிற்றே. நீ பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாக பிறந்த ஒருவனாயிற்றே. நீயா எங்களுக்கு போதிக்கப் போகிறாய்? என்ன, நீ பைத்தியம் பிடித்தவனென்றும், பிசாசைக் கொண்டிருக்கிறவனென்றும் எங்களுக்குத் தெரியும். நீ ஒரு சமாரியன், நீ அங்கே சென்று அந்த பிசாசுகளை உன் மீது ஏற்றிக் கொண்டு வந்துவிட்டாய். பரிசுத்த ரபீகளாகிய எங்களுக்கு நீ போதிக்க முற்படுகிறாயா?'' என்றனர். அவர், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்'' என்று கூறினார். ஆம், அவர்கள் அவரை தவறாகப்புரிந்து கொண்டனர், அவர் யார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அதே போன்று இன்றும் நடந்து கொண்டிருக்கிறது, அவர் இல்லாதிருக்கிற ஒன்றாக மக்கள் அவரை சித்தரிக்க முயல்கின்றனர். அவர் மனிதன் மாத்திரம் அல்ல, அவர் மனிதனுக்குள் இருக்கும் தேவன் ஆவார் மூன்றாம் நபரல்ல, அவர் தான் அந்த ஒரே நபர். ஆம், ஐயா. நல்லது, நிச்சயமாக, அவர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். 92அப்பொழுது அந்த சமயத்தில் ஒரு இரவு விருந்திற்கு, ஒரு பெரிய விருந்திற்கு அவரை அழைத்த அந்த பரிசேயன், அந்த பரிசேயன் கூட அவரை தவறாகப் புரிந்து கொண்டான். அவர் அங்கு இருந்தால் மட்டும் போதும் என்று அவன் நினைத்தான். சமீபத்தில், சிக்காக்கோவில், அந்த காலை உணவு கூட்டத்தில் அந்த செய்தியைக் குறித்து பேசினேன் என்று நான் நம்புகிறேன். அந்த பரிசேயன், இப்பொழுது, அங்கே பின்புறத்தில் உட்கார்ந்திருக்கும் அவரைப் பார், கழுவப்படாத கால், மற்ற எல்லாம். அந்த சிறு பெண் உள்ளே வந்து அவரை அவளுடைய கண்ணீரால் கழுவினாள், தன்னுடைய தலை மயிரால் துடைக்கின்றாள், இவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், தன்னுடைய கால்களை கழுவிக் கொண்டிருக்கின்ற இந்த ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார். ஆகவே இவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்பதை இது காண்பிக்கிறது!'' என்று கூறினான். இயேசு எழுந்து நின்று, ''சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும்!'' என்றார். ஆமென், அவன் தவறாகப் புரிந்துக் கொண்டான், அவ்வளவுதான். அவர், ''நான்... நான் வரும்படிக்கு நீ எனக்கு அழைப்பு கொடுத்தாய், நானும் உன்னுடைய அழைப்பை ஏற்று, தொடர்ச்சியாக இருக்கின்ற என்னுடைய நிகழ்ச்சி அட்டவணையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். கதவண்டையில் நீ வந்து என்னை சந்திக்கவில்லை. என் தலைக்கு எண்ணெய் பூசவில்லை. என்னுடைய பாதங்களை நீ கழுவவில்லை. நீ என்னை முத்தஞ் செய்து வரவேற்கவில்லை. அழுக்காக, வியர்வையால் முழுவதுமாக நனைந்தவனாக நான் உள்ளே வரும்படி விட்டுவிட்டு, என்னை பரியாசம் செய்யும் படிக்கு அங்கே அந்த மூலையில் உட்கார வைத்தாய். ஆனால் இந்த ஸ்திரீ, இந்த ஸ்திரீயோ, என் பாதங்களை ஓயாமல் முத்தஞ் செய்தாள். அவைகளை மனந்திரும்புதலின் கண்ணீரினால் அவள் கழுவினாள்'' (என்ன அழகான தண்ணீர்) “தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள். சீமோனே, உனக்கு எதிரான காரியத்தை நான் கூறப் போகிறேன். மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது'' என்று கூறினார். சீமோன் தவறாகப் புரிந்து கொண்டான்; அவளோ சரியாக புரிந்து கொண்டாள். சீமோன், ''அவர் ஒரு மனிதன் மாத்திரமே'' என்றான்; அவளோ, ”அவர் தேவன், என் இரட்சகர்'' என்றாள். அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அவர் இன்னுமாக தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார். 93அந்த சீஷர்கள் கல்வாரியில், அவர்களெல்லாரும் அவரை மறுதலித்து சென்றபோது, அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருந்தனர். அற்புதங்களைச் செய்து மரித்தோரை எழுப்பின் ஒரு மனிதனாக அவர்கள் அறிந்திருந்த இவர் தம்மையே மரணத்திற்கு அற்பணித்து, அதினூடாக நடந்து சென்று, அடிக்கப்பட்டு, அழுது கொண்டு, முகம் முழுவதுமாக எச்சில் வடிந்து கொண்டு, அவர்கள் அவருடைய முகத்திலிருந்த தாடியை கை நிறைய பிடுங்கி எடுத்த போது வந்த இரத்தம் எச்சிலோடு கலந்தது; அவருடைய முதுகை எலும்புகள் வெளியில் தெரிந்து பளபளக்கும் வரை சாட்டையால் அடித்தனர், எதற்கும் கவலை கொள்ளாத, குடி போதையில் இருந்த போர் சேகர்கள், அவரை தெருவில் அடித்துக் கொண்டிருந்தனர். ''எப்படி இவர் அவர்கள் இவ்விதமாக செய்யவிட்டுவிட்டாரே?'' என்று நினைத்து அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டனர். அது சரி. பிசாசும் அவரை தவறாக புரிந்து கொண்டான். பிசாசும், ''அங்கே மிக மோசமாக நடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்ற அவர் நிச்சயமாக தேவனுடைய குமாரனாக இருக்க முடியாது, ஏனெனில் என் சீடர்கள் அவரை சபித்துக் கொண்டு எல்லா விதத்திலேயும் மோசமாக நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரும் அதை ஏற்றுக் கொண்டு அப்படியே இருக்கின்றாரே. அவர் தேவனுடைய குமாரன் அல்ல'' என்று கூறினான். 94பரிசேயரும், ஆசாரியர்களும் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு, ''நீ தேவனுடைய குமாரனானால், அங்கிருந்து கீழே இறங்கி வா“ என்றனர். அவருக்கு இடது பக்கத்திலிருந்த கள்ளன் அவரை தவறாகப் புரிந்து கொண்டு, ''நீர் தேவனுடைய குமாரனானால், நம்மெல்லாரையும் சிலுவையிலிருந்து எடுத்துப் போட்டு உன்னை இரட்சித்துக் கொண்டு எங்களையும் கூட இரட்சியும்'' என்று கூறினான். ஆனால் வலது பக்கத்திலிருந்த கள்ளன் அவரைப் புரிந்து கொண்டு, “நாம் தீமை செய்தோம், நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம், ஆனால் இந்த மனிதனோ ஒன்றுமே செய்ய வில்லையே'' என்றான். ''ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்றான். “நிச்சயமாக நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்'' திரும்பி வந்த அந்த சத்தத்தை கவனியுங்கள், நம்முடைய பாவங்களுக்காக மரித்துக் கொண்டிருக்கிற தேவன் அவர் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர் மரிக்கக் கூடிய ஒரே வழி, மாம்சத்திலே மரணத்தில் ஆழ்த்தப்படுவதே. ஆவியிலே அவரை மரிக்கச் செய்ய முடியாது, ஏனெனில் அவர் தான் அந்த நித்திய ஆவி. ஆகவே அவர் மரிக்கும்படியாகச் செய்யப்படத் தக்கதாக அவர் மாம்சத்தில் இருந்தாக வேண்டும், ஆகவே அவரை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவனோ அதைப் புரிந்து கொண்டான். 95ஒரு நாளிலே, அதற்கு பிறகு பத்து நாட்கள் கழித்து, அல்லது அதற்கு பிறகு சுமார் நாற்பது நாட்கள், ஐம்பது நாட்கள் கழித்து, சீஷர்கள் ஒரு மேலறைக்குள்ளே ஏறி அங்கே பத்து இரவுகளும் பகலும், ஐம்பதாவது நாள் வரையிலும் தங்கினார்கள். அப்பொழுது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது, ஏனெனில் இயேசு, “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்'' என்று கூறியிருந்தார். அது வரப் போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது சம்பவித்தாக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ''நான் அதை அனுப்பும் வரை நீங்கள் அங்கே சென்று காத்திருங்கள்''. அவர்கள் அங்கே மேலே காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அறிக்கை செய்தனர், தங்கள் மனங்களிலும் இருதயங்களிலும் இருந்த எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் எல்லாரும் ஒரே மனதுடன், ஒரே இடத்தில், வாக்குத்தத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்: முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தனர், ஆண்களும் பெண்களுமாக அங்கே இந்த மேலறையில் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர், யூதர்கள் உள்ளே நுழைந்து அவர்களுக்கு காயம் உண்டாக்காதபடிக்கு எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. 96அங்கே மேலே அவர்கள் நடந்து கொண்டிருக்கையில், பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது, அங்கே சுற்றி சுற்றி பலத்த காற்று அடித்தது, அப்பொழுது அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மீது அமரத்துவங்கினது. கதவுகள் திறந்து கொண்டது. ஜன்னல்கள் திறந்து கொண்டது, அவர்கள் வெளியே தெருக்களில் சென்றனர். அப்பொழுது அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் அல்லவா? இந்த ஜனங்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் ஏதோ ஒன்றை உளரிக் கொண்டிருக்கிறார்கள், “அவர்கள் எதைக் குறித்து பேசுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லையே” என்று அவர்கள் கூறினர். உடனே அவர்கள், ''எப்படி நாம் ஒவ்வொருவரும் அவர்கள் நம் சொந்த மொழிகளில் பேசக் கேட்கிறோம், அவர்கள் எல்லாரும், கலிலேயரல்லவா?'' என்று கூறினர். இது பிதாவினுடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது என்பதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அங்கே எழுந்து நின்று பேசத்தக்கதாக தேவன் அங்கே ஒரு தீர்க்கதரிசியை வைத்திருந்தார், பேதுரு “எருசலேம் மனிதரே, யூதேயாவில் வாசம் பண்ணுகிற ஜனங்களாகிய நீங்கள், இதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும், என் ஆவியை ஊற்றுவேன். என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக் காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்,'' என்று கூறினான். அது தேவனுடைய செயலாக இருந்தது. அது பரிசுத்த ஆவியாக இருந்தது, ஆனால் அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். 97அவர் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். இஸ்ரவேல் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டது. நோவாவின் காலத்தில் இருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். தானியேலின் காலத்தில் இருந்தவர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். யோவானின் காலத்திலிருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். தீர்க்கதரிசியின் காலத்திலிருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். பெந்தெகோஸ்தே காலத்திலிருந்த ஜனங்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். இந்தக் காலத்திலிருக்கிற மக்களும் அவரைத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர், அது இன்னும் அதே விதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைக் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். இயற்கையை ஆவிக்குரியதோடு ஒப்பிட வேண்டிய காலம் இதுதான். மக்கள்... பெந்தெகொஸ்தே நாளிற்கு பிறகு, அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பிறகு, இந்த மகத்தான பெரிய கூட்டத்தை அங்கே நடத்தினர், தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த அங்கே இருந்த அந்த மனுஷனை அவர்கள் அழைத்தனர். அவர்களில் இருவர் அங்கே தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது இந்த பிச்சைக்காரன் குவளையை குலுக்கி காசு கேட்டான். அதற்கு அவன், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட!'', என்று கூறினான். அவன் தன்னுடைய கையினால் அவனைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் நடக்கத் துவங்கினான், குதித்தான், ஓடினான், எகிறி பாய்ந்தான், தேவனைத் துதித்தான், தேவாலயத்திற்குள் சென்றான். எல்லா மக்களும் ஒன்று கூடத்துவங்கினர், கூச்சலிட்டனர், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். என்ன, அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. 98ஆகவே அவர்கள் அவர்களை சிறையில் அடைத்து ''இயேசுவின் நாமத்தில் இனிமேல் பிரசங்கிக்கவே கூடாது'' என்று அவர்களை மிரட்டி பயமுறுத்தினர். அப்பொழுது பேதுரு ''யாருக்கு நாங்கள் செவிகொடுக்க வேண்டும், தேவனுக்கா அல்லது மனுஷனுக்கா?'' என்றான். அப்பொழுது அவர்கள் இவர்களை சற்று அடித்துவிட்டோம், சற்று பயமுறுத்திவிட்டோம் (அடுத்த முறை தூக்கில் போடப்படுவீர்கள், அல்லது எரித்து போடப்படுவீர்கள், அல்லது சிலுவையில் போடப்படுவீர்கள் என்பதை போன்று) அவர்கள் நிறுத்திவிடுவர் என்று நினைத்துக் கொண்டு விடுவித்தனர். ஆனால் அடுத்த காரியமாக எதைப் பார்த்தார்கள் என்றால், மறுபடியுமாக இவர்கள் அங்கே தெருவில் அதே விதமாகச் செய்தனர். ஏன்? அவர்கள் அவர்களைத் தவறாக புரிந்து கொண்டனர். அது ஜனங்கள் செய்வது அல்ல; அது தேவன் அந்த ஜனங்களுக்குள்ளாக இருந்து அந்த காரியங்களைச் செய்தல். 99அந்த காலையில் அந்த சிறு ஸ்தேவானை சனகரீம் சங்கத்தில் அவர்கள் பிடித்த போது, “நாம் இவனை அந்த சங்கத்திற்கு முன்பாக கொண்டு செல்வோம். இந்த ரபீக்களும், யூதர்களும், பிரதான ஆசாரியர்களும், பரிசுத்த பிதாக்களும், மற்றும் எல்லாரும் அங்கே கூடியிருக்கையில், தெய்வீகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர்களைக் காணும் போது இவன் மிகவுமாக பயந்து போய்விடுவான்'' என்று கூறினர். ஆகவே அவர்கள் இவனை சங்கிலிகளால் கட்டி, அவனை அங்கே, பட்சிக்கின்ற ஓநாய்கள் கூட்டத்தின் மத்தியில் ஒரு சிறு ஆட்டுக் குட்டியைப் போல நிறுத்தினார்கள். அவர்கள், ”இப்பொழுது இவனை கவனியுங்கள், சகோதரனே, அதை எல்லாம் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், என்னை தொல்லைப்படுத்தாதீர்கள் என்று கூறுவான் பாருங்கள்'' என்றார்கள். அவனோ, “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே. உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் ஏன் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்!'' என்று கூறினான். ஆமென்! அது அவனல்ல என்பதை அவர்கள் கண்டு கொண்டனர் அவர்கள் மண்கட்டிகளை எடுத்துக் கொண்டனர், தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டு, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்து, மண்கட்டிகளை அவன் மீது வீசி அவனைக் கொன்று போட்டார்கள். அவன் தன் தலையை வானத்துக்கு நேராக உயர்த்தி, கற்கள் அவனை ஒரு புறத்திலிருந்து மறுபுறம் மாறி மாறி அடித்தது, அவன், ''அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும் இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன், என்று கூறினான். ஆமென்! அவன் கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் நித்திரையடைந்தான். அவன் மரித்த போது, ''பிதாவே இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்'' என்று கூறினான். பாருங்கள், அவன் செய்ததை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். பவுல் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தான், பின்னர் அது அவனுடைய மனதை பாதித்தது, அவன், ''அவர்களெல்லாரிலும் நான் சிறியவன், ஏனெனில் உம்முடைய பரிசுத்தவானாகிய ஸ்தேவானுடைய மரணத்திற்கு நானும் அருகே நின்று பார்வையாளனாக இருந்தேன்'', என்றான். அவ்வளவுதான். 100பாருங்கள், இந்த ஆர்வத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இன்றைக்கு மக்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அதை பரிசுத்த உருளையர்களின் கூட்டம் என்று அவர்கள் அழைக்கின்றனர். மனநிலை சரியில்லாத மக்களின் கூட்டம் அது என்று அவர்கள் அழைக்கின்றனர். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ''உங்களுடைய சரியான மனதை அவர்கள் விமர்சிக்க தங்களுடையதை அவர்கள் இழந்து போகின்றனர், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்குள்ளே உடையவர்களாக இருக்கிறீர்கள். ஒன்று மாம்ச பிரகாரமாகவும் இன்னொன்று ஆவிக்குரிய பிரகாரமாகவும், உலகத்தின் சிந்தையையும் கிறிஸ்துவின் சிந்தையையும் ஒரே சமயத்தில் உங்களாலே கொண்டிருக்க முடியாது. மாம்சத்தின்படி நடக்கிறவன் மாம்சத்துக்குரியவனாக இருக்கிறான், ஆவியின்படி நடக்கிறவன் ஆவிக்குரியவனாக இருக்கிறான்''. ஆமென். அதை கர்த்தாவே உமக்குள்ளாக அதை கண்டெடுக்கத்தக்கதாக என்னையே நான் இழந்து போகச் செய்வேன், ஆம் ஐயா, ஆகவே தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது நீங்கள் அல்ல, அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை அவ்விதமாக செய்யும் படிக்கு செய்கிறார். ஆமென். அவர்கள் உங்களுக்கெதிராக பேசவில்லை, அவருக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள். மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். அங்கே, அவர்களை அவர்கள் விட்டுவிடலாம், ஆனால் அவர்கள் உடனே திரும்பவுமாக தெருவில் வந்து மறுபடியுமாக துவக்குவார்கள். இன்றைக்கும் அதே காரியம் தான். அவர்கள் மக்களை தவறாக புரிந்து கொள்கின்றனர். அது என்னவென்பது அவர்களுக்கு தெரியாது. 101இன்றைக்கு அவர் என்னை மக்களிடத்திற்கு அனுப்பினார் என்னும் என் ஊழியத்தில் என்னை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும், “நாங்கள் விசுவாசிப்பது சகோதரன் பிரன்ஹாம்...'' என்றனர். சில காலத்திற்கு முன்னர் ஒரு பிரசங்கியோடு நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர், ''சகோதரன் பிரன்ஹாம், நீர் சபைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றீர் என்பதை நாங்களெல்லாரும் அறிவோம், ஆனால், கருத்து என்னவென்றால் நீர் எப்படி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறவராக வரலாம்? என்பதே'' என்றார். அவர்கள் வேதாகமத்தை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதற்காகத்தான் அவர் என்னை அனுப்பியுள்ளார், நான் இங்கிருப்பதின் நோக்கம் அதுவே தான். ”நீங்கள் சர்ப்பத்தின் வித்தைக் குறித்தும் மற்றும் அது போன்ற காரியங்களை குறித்தும் நாங்களெல்லாரும் போதிக்கிறதற்கு முரணாக நீங்கள் ஏன் போதிக்கிறீர்கள்?'' நல்லது சகோதரனே, அதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன். அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஆமென். ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையின் படியும் மற்றும் பரிசுத்தஆவியின் அடையாளங்களிலும்... சாட்சி பகருகின்றார். அவர்கள் எவ்வளவாக அதை தவறாகப் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை, தேவன் அந்த வார்த்தையை உறுதிபடுத்துகின்றார்! ஆமென். தேவன் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார். தேவனோடு ஜீவிக்கும் ஒவ்வொருவரும் தேவனுடன் சேர்த்துத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அது தேவன் அவர்களுக்குள் கிரியை செய்தலாகும். ஆமென் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் (நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்தி துதிகளை ஏறெடுங்கள்) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 102தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ஒரு சிறிய பாடலை நாங்கள் பாடுவது வழக்கம், ''இப்பொழுது நான் குறியிடப்பட்டுள்ளேன், குறியிடப்பட்டுள்ளேன், குறியிடப்பட்டுள்ளேன், தெய்வீக ஆவியினால் குறியிடப்பட்டுள்ளேன்“ என்றவாறு இருக்கும். அது சரி. ஒரு காலத்தில் என்னை நேசித்த மக்கள், இப்பொழுது என்னைப் பார்த்து முதுகைத் திருப்பி சென்றுவிடுகிறார்கள். ஏனென்றால் நான் குறியிடப்பட்டுள்ளேன், ஆவியானவராலே குறியிடப்பட்டுள்ளேன். ஆமென். கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக உலகக் காரியங்களை என் சிந்தை இழந்து போகும்படிக்குச் செய்துவிட்டேன்; ஆதலால் நான் கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டிருப்பேனானால், என் சிந்தையானது மேலே இருக்கின்ற காரியங்களை தான் நாடுகிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்திற்கப்பால் வேறே ஒரு சரியான ஞானஸ்நானம் உள்ளதா என்று யாராவது காண்பிக்கும்படிக்கு விரும்புகிறேன். சர்ப்பம் வித்தை உடையதாக இருக்கவில்லை என்று கூறும் ஒரு வேத வசனத்தை யாராவது காண்பிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். மூன்று தேவர்கள் உண்டென்று கூறும் ஒரு வேத வசனத்தை யாராவது காண்பிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். அப்பொழுது அவர்கள், ''நல்லது, அது என்ன?'' என்று கேட்கின்றனர். 103தேவன் தம்முடைய செய்தியை என்னிடம் அனுப்பி அதைக் குறித்து சாட்சியும் கொடுக்கின்றார். அடையாளங்கள் பின்தொடர வார்த்தையை அவர் உறுதிப்படுத்துகின்றார். அதைத்தான் வேதாகமும் கூறினது. அதை அவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இது கண்கூடாக நடக்கின்ற செயலாகும். ஆனால் அவர்கள் என்ன செய்கின்றனர்? அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஏனெனில் அசெம்பிளீஸ் ஆப் காட், ஒருத்துவம் அல்லது இருத்துவம், அல்லது திருத்துவம், அல்லது தேவனுடைய சபை, அல்லது பாப்டிஸ்டு, மெத்தொடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் ஸ்தாபனங்களின் பெயரிலே நான் வரவில்லை. நான் அவர்களுடைய நாமங்களில் ஒன்றினாலும் வரவில்லை, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வருகின்றேன். தேவன், தம்முடைய இரக்கத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினாலே செய்தியை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே மக்கள் இன்னுமாக தேவனுடைய ஆவியைத்தான் தவறாகப்புரிந்து கொள்கின்றனர். அது சரி. தவறாகப் புரிந்து கொள்ளுதல். நிச்சயமாக, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவீர்கள், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தேவ பக்தியுள்ள எல்லாரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள். நீதிமானாகிய நோவா முதற்கொண்டு இன்று உள்ள நவீன - நாள் பரிசுத்தவான் வரையிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவர். எப்பொழுதுமே அவ்விதமாகத் தான் உள்ளது, ஜனங்கள் அதை தவறாகப் புரிந்து கொள்வர். இஸ்ரவேல் அதைத் தவறாகப் புரிந்து கொண்டது. அவர்கள் அதை புரிந்து கொள்ளமாட்டார்கள்; அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் ஆவியிலே மாம்சத்தில் இருக்கிறார்கள்... அது ஆவிக்குரியதோடு இடைப்பிரிந்து கூடவே செல்லாது, ஏனெனில் அது கலவாது. 104மனுஷனுடைய கைகளால் உண்டாக்கப்படாத ஒரு ராஜ்யத்திலே நாம் ஜீவிப்பதற்காக நான் மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன். மனிதனால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு ராஜ்யத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நம்முடைய ராஜ்யம் மேலே உள்ளது என்பதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆகவே நம்முடைய ராஜ்யமானது மேலே உள்ளதென்றால், நாம் மேலேயிருந்து பிறந்தவர்கள், அப்படியானால் நாம் மேலான காரியங்களை நாடித் தேடுகிறோம், அங்கே கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார், ஓ, அங்கே அவர் நம்மைக் குறித்து வெட்கப்படுவதில்லை. நம்முடைய சாட்சி.... இந்த பூமியிலே நாம் அவரைக் குறித்து வெட்கப்படுவதில்லை. ஏனெனில் நாம் அந்நியரும், பிரயாணம் செல்கிறவர்களுமாயிருக்கிறோம். நாம் இந்த பூமிக்குரியவர்கள் அல்ல, நாம் தேவனுடைய ஆவியினாலே பிறந்திருக்கிறோம். நாம் அவருடைய இரத்தத்தாலே கழுவப்பட்டு, அவருடைய ஆவியினாலே பிறந்து, அவருடைய கிருபையினாலே நிரப்பப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். அது தான், தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல். ஆனால், நாம் அக்கறைக் கொள்வதெல்லாம் அவரை நேசிக்கத்தான். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? 105சரி, டெட்டி, நேசிக்கிறேன். பாடலிற்கு சுரம் எங்களுக்கு கொடுக்கவும், நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் அதைப் பாடுவோம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்புஅவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் அவர் அற்புதமானவரல்லவா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவருடைய சொந்த ஜனமாயிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறீர்களா? ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாயும், அவருக்கு சொந்த ஜனமுமாய் ஆவிக்குரிய பலிகளை உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியையும் செலுத்தும் ஜனமாயிருப்பதற்கு மகிழ்ச்சியுடைவர்களாய் இருக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஒரு பாடலைப் பாடப் போகிறேன், பாடல் பாடும்படிக்கு நான் உணருகிறேன்: நான் ஏன் சந்தோஷமும் விடுதலையுமாயிருக்கிறேன் என்று அநேக மக்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதை நான் காண்கிறேன்; ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் காரணம். ஓ, அது தான் என்னுடனுள்ள காரணம், ஓ, அது தான் என்னுடனுள்ள காரணம் ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் என்னிடமுள்ள காரணம். உங்களுக்கு அது பிரியமா? அப்படியானால் நாமெல்லாருமாகப் பாடுவோம்: நாம் ஏன் சந்தோஷமும் விடுதலையுமாயிருக்கிறோம் என்று அநேக மக்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதை நாம் காண்கிறோம்; நாம் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறோம், அதில் ஒரு சந்தேகமுமில்லை அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம், (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம் ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, நான் சந்தோஷமடைகையில், நான் பாடுவேன், நான் சத்தமிடுவேன், சிலர் அதை புரிந்து கொள்ளாதிருப்பதை நான் காண்கிறேன் ஆனால் யோர்தானைக் கடந்து அருமை தேசம் கானானிற்குள் சென்றுவிட்டேன் அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம் (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம்; யோர்தானைக் கடந்து அருமை தேசம் கானானிற்குள் சென்றுவிட்டேன், அது தான் என்னிடமுள்ள காரணம். 106ஓ, அது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் தானே? யோர்தானைக் கடந்து அருமையான தேசமாகிய கானான் தேசத்திற்குள் செல்லுதல், உலகத்திற்கு விடை கொடுத்துவிட்டு, உலக காரியங்களுக்கு மேலாக உயர்ந்து, இப்பொழுது நான் இந்த பரலோக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கே கீழே இருக்கின்ற அந்த பருந்துகளுக்கு நான் செய்வது விநோதமானதாக இருக்கும், ஆம், நிச்சயமாக, நான் அதற்கு மேலாக பறந்து கொண்டிருக்கிறேன். அது சரி. நமக்கு என்ன கவலை? நாம் கானான் தேசத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆமென்! ஆம், ஐயா. புதிய திராட்சைகளை நாம் சாப்பிட்டு, ஒரு அருமையான தருணத்தைக் கொண்டவர்களாக; முழுவதும் மகிமையால் நிரப்பட்ட, முழுவதும் வல்லமையால் நிரம்பிய, முழுவதும் பரிசுத்த ஆவியைக் கொண்டதாக இருக்கும், ஆம். ஐயா. “நிரப்பப்பட்ட ஒரு மனிதன்...'' என்று ஸ்தேவானைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. எதை முழுவதுமாக கொண்டிருத்தல்? எதை முழுவதுமாக கொண்டிருத்தல்? அவன் பரிசுத்த ஆவியால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான், அவன் வல்லமையால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான், அவன் ஞானத்தினால் முழுவதுமாக நிறைந்தவனாக இருந்தான், அவன் முழுவதுமாக மகத்துவத்தால் நிறைந்தவனாக இருந்தான். அது எல்லாம் ஒன்று சேர்ந்து என்னவாயிருந்தது? அவன் பரிசுத்த ஆவியால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான். அங்கே தான் இந்தக் காரியங்களெல்லாம் வாசம் செய்கின்றன. ஜீவிக்கின்ற தேவனுடைய சபையும் அதுவே தான். கிறிஸ்தவனே, அதற்காக நீ மகிழ்ச்சியாயிருக்கின்றாயா? சந்தோஷமாக இரு. நீ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் ”கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தேவ பக்தியுள்ளவர்களெல்லாரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவர்“ வேதாகமம் முழுவதுமாக அவர்கள் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். இப்பொழுது, நான் என்ன கூற முயன்றுக் கொண்டிருக்கிறேன்? அந்நிய பாஷையில் பேசும் மக்களாகிய உங்களுக்கு, சத்தம் போடுகிற நீங்கள், ஆவியில் நடனமாடுகிற நீங்கள், ''ஓ, அது அர்த்தமற்றது'' என மக்கள் கூறுவர், நான் உங்களுக்கு காண்பித்ததை நினைவு கூறுங்கள். வேதாகமம் முழுவதுமாக, அவர்கள் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். நினைவில் கொள்ளுங்கள், நீங்களும் வேத வசனத்தில் இருக்கிறீர்கள், சரியானதையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். சரியாக அதோடு தரித்திருங்கள், தேவன் உங்களோடு இருக்கிறார். வேதாகமத்தோடு சரியாக தரித்து நில்லுங்கள், மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார். ஆமென். 107நான் அவரை நேசிக்கிறேன். அவருடைய பிரசன்னத்தில், கர்த்தருடைய தூதன் முதன் முறையாக மனிதர் முன்பாக தோன்றின்போது நாம் பாடிக் கொண்டிருந்த அந்த அருமையான பழைய ஞானஸ்நான பாடலை நாம் பாடுவோமாக. முன்னதாக நான் அதைக் கண்டிருக்கிறேன், ஆனால் முதல் முறையாக அவர் கீழே இறங்கி வந்தபோது - அவர் கீழே வந்த போது, அவர் - அவர், ''கிறிஸ்துவின் முதல் வருகைக்கு யோவான் முன்னோடியாக அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடும்''. அங்கே நதியில் 1933 ஆம் வருடம், ஜூன் மாதம் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே கரையோரத்தில் நிற்கையில் அது கீழே இறங்கி வந்தது. நாங்கள் கரையில் நின்று கொண்டு பாடிக் கொண்டிருந்தோம்: புரண்டோடும் யோர்தானின் கரையில் நான் நின்று, என் ஆவலுள்ள பார்வையை செலுத்தினேன், என் சுதந்தரங்கள் இருக்கின்ற அந்த சந்தோஷ, அருமையான கானானை நோக்கி நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் அந்த ஆரோக்கியம் நிறைந்த இடத்தை அடைகையில் என்றென்றுமாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன்! என் பிதாவின் முகத்தை நான் எப்பொழுது காண்பேன், அவருடைய மார்பில் எப்பொழுது இளைப்பாறுவேன்? ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா.. நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். அந்த பரந்த சமவெளிகளின் மேல் நித்திய நாள் ஒன்று பிரகாசிக்கும்; அங்கே தேவனாகிய குமாரன் (Son) என்றென்றைக்கும் அரசாளுவார், இரவை சிதறடிப்பார். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... நாம் அதை மறுபடியுமாக பாடுவோம், உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கை குலுக்குங்கள். நான் வாக்குத்தத்தம்... ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா.. ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 108இப்பொழுது, துளி சந்தேகமும் இல்லாமல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, நீங்கள் ஆவியினாலே மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துள்ள ஒவ்வொருவரும், நாமெல்லாரும் இப்பொழுது எழுந்து நம்முடைய கரங்களை உயர்த்தி பாடுவோமாக. நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... இதை நான் நீண்ட காலமாக காணவில்லை. பெண்களே , உங்கள் பையைத் திறந்து உங்களுக்கு ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்களே உங்கள் பாக்கெட்டில் கைவிட்டு உங்களுக்கு ஒரு கைகுட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாமெல்லாருமாக தேவனுக்கு கைக்குட்டை அசைவு வெகுமதியை அளிக்கப்போகிறோம். சரி, நாமெல்லாருமாக, நாம் கானானிற்குள் செல்லும் போது அசைக்கும் விதத்தில் நாமெல்லாரும் அசைக்கப் போகிறோம், உங்கள் கைக்குட்டையை அசையுங்கள் சரி. இப்பொழுது: நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... இப்பொழுது, தங்களுடைய தெரிந்து கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயப்படுத்தாதிருக்கிற யாராவது இங்கே இருப்பீர்களானால், நாங்கள் அதை மறுபடியுமாக பாடுகையில் இங்கே நீங்கள் வர விரும்புகிறீர்களா, உங்களுடைய கைக்குட்டையையும் வெளியே எடுத்து எங்களுடன் சேர்ந்து மறுபடியுமாக அசைப்பீர்களா. கதவுகள் திறந்திருக்கின்றன, பயணச் சீட்டுகள் இலவசம். நீங்கள் வரலாமல்லவா? சீயோனின் அந்த பழைய கப்பலில் ஏறி வாருங்கள், அக்கப்பல் பிரயாணப்படப் போகிறது. நாம் செல்வோம். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், (நேரம் நீண்டதாக இருக்காது) நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 109நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்: இயேசுவைப் போல, இயேசுவைப் போல, இப்பூமியிலிருக்க நான் வாஞ்சிக்கிறேன்; இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவப் பயணமெல்லாம் நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன் பெத்லகேம் தொழுவத்திலிருந்து அந்நியர் ஒருவர் தோன்றினார், இப்பூமியில் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன்; இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவப்பயணமெல்லாம் நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மறக்காதீர்கள். புதன்கிழமை இரவு ஜெப கூட்டத்தை மறக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், அதிகமாக ஜெபியுங்கள், எனக்காக ஜெபியுங்கள், உங்கள் மேய்ப்பருக்காக ஜெபியுங்கள், உங்கள் அண்டை வீட்டாருக்காக ஜெபியுங்கள், உங்கள் டீக்கன்மார்களுக்காக ஜெபியுங்கள், உங்கள் தர்மகர்த்தாக்களுக்காக ஜெபியுங்கள், நம்மோடு தேவன் தம்முடைய வழியையே கொண்டிருக்கத்தக்கதாக ஜெபியுங்கள். இயேசுவைப் போல, இயேசுவைப் போல, இப்பூமியிலிருக்க நான் வாஞ்சிக்கிறேன் (அது தான் என் இருதயத்தின் வாஞ்சை அவர் புரிந்து கொள்கின்றார்) (அநேக மக்கள் அதை புரிந்து கொள்வதில்லை. நினைவில் கொள்ளுங்கள், தேவன் ஒரு வழியை உண்டாக்குவார்) இப்பூமியினின்று மகிமைக்கு... நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன். (சகோதரன் பிரன்ஹாம் பாடலை வாய் மூடிமெளனமாக மெதுவாக இசைக்கிறார் - ஆசி...) தாழ்மையாகவும் கீழாகவும், இப்பூமியில் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன். இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவ பயணமெல்லாம் நான் அவரை போலவே இருக்க கேட்கிறேன். இப்பொழுது உங்கள் தலைகள் தாழ்த்தியிருக்கையில், உங்கள் கண்கள் மூடியிருக்கையில், நம்முடைய இருதயங்கள் தேவனை நோக்கி இருக்கையில், நாம் நம்முடைய விலையேறப் பெற்ற, அருமை நண்பர், கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோதரன் ராய் பார்டரை அழைப்போமாக... கூட்டத்தின் முடிவு ஜெபத்தை செய்ய அழைப்போம். சகோதரன் பார்டர்ஸ் (சகோ. ராய் பார்டர்ஸ் ஜெபிக்கிறார் - ஆசி)